வகை காப்புகள்: Uncategorized

22-0415 உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா?

BranhamTabernacle.org

22-0403 அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு

செய்தி: 63-0623E அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு

BranhamTabernacle.org

எல்லோரும் உள்ளே இருக்கிறீர்களா,

தேவனுக்கு மகிமை உன்டாவதாக, என்ன ஒரு நாளில் நாம் ஜீவிக்கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று ஒவ்வொரு செயலாலும் நிரூபிக்கப்பட்ட ஒரு செய்தியை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை அது செய்திருக்கிறது; வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இருதயத்தின் இரகசிய ங்களை அறிந்து, நடக்கவிருக்கும் விஷயங்களைக் வெளிப்படுத்தி, மறித்தவர்களை எழுப்பி, மேலும் ஒவ்வொரு முறையும் அது மிகசரியானதாக இருக்கிறது.

மலையின் உச்சியில் இருந்த மண்ணையெல்லாம் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. பாறையைத் தவிர வேறு எதுவும் இல்லை.அந்த கற்பாறைகள் மீது மர்மமான எழுத்து இருந்தது, எனவே தேவன் அவருடைய மணவாட்டிகளுக்கு எழுதப்பட்டதை விளக்குவதற்கு அவருடைய வலிமைமிக்க தீர்க்கதரிசியை அனுப்பினார். இப்போது வேதாகமம்மானது முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வலிமைமிக்க தூதரை மலையின் மீது அழைத்துச் சென்று, ஆண்டவரின் வாளைத் தன் கையில் வைத்தார். அவருடைய தூதன் அந்த மலையின் உச்சியை வெட்டி மேலே உயர்த்தினார். அதன் உட்பகுதியில் வெள்ளைப் பாறை இருந்தது, கிரானைட் கற்களில் எழுதப்பட்டிருக்கவில்லை.

அவர் மேற்கு நோக்கிச் செல்லும்போது இதைப் பார்க்கச் சொன்னார். பின்னர் அவர் ஏழு தேவ தூதர்களின் நடுவில் சிக்கி, திரும்பி வந்து, பாறையில் எழுதப்படாத அனைத்தையும்கூட நமக்கு வெளிப்படுத்தினார்.

“இவர் என் ஊழியக்காரர். மேலும், மோசேயைப் போலவே மக்களை வழிநடத்தும் ஒரு இக்காலத்தின் தீர்க்கதரிசியாக நான் அவரை அழைத்தேன். அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவர் நடைமுறையைப் பற்றி பேச முடியும். அல்லது மோசே செய்தது போல, ஈக்களில் பேசுவது போல. அணில்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும், ஏற்கனவே நடந்த விஷயங்களைப் பற்றியும் நமக்குத் தெரியும். லிட்டில் ஹாட்டி ரைட், அவளுடைய வீட்டில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

W-I-L-L-I-A-M M-A-R-R-I-O-N B-R-A-N-H-A-M இன்றைக்கு தனது மணவாட்டியை வழிநடத்த அவர் தேர்ந்தெடுத்த தேவனின் மனிதர். அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சத்தில் வந்தபோது பேசியதைப் போல நம்மிடம் பேச அவர் தேர்ந்தெடுத்த மாம்சமானவர். ஒவ்வொரு வேதமும் அதை நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். இப்போது அவர் யாராக இருக்கிறார் என்றும், அவர் யார் என்றும், மேலும் நாம் யார் என்பதற்கான உண்மையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது: நாம் அவருடைய தேர்ந்தெடுத்த இனிமையான மணவாட்டி.

அவருடைய வார்த்தையுடன் இருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். இது அத்தகைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது. அது நமக்கு என்ன அர்த்தம் என்பதை வெறும் வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்த முடியாது.

அங்கே வித்தியாசமான ஒன்று இருப்பதை நாம் எப்போதும் நம் இருதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாக அறிந்திருக்கிறோம். நாம் பாவத்தில் இருந்தபோதும், நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்தது என்பது நமக்குத் தெரியும், ஆனால் அது அங்கேயே இருந்தது. இப்போது நமக்கு தெரியும். இதற்கு முன்பு நாம் இதைப் போல் உணர்ந்ததில்லை, இனி எந்த சந்தேகமும் இல்லை, ஆச்சரியப்படுவதற்கு இல்லை, மேலும் கேள்வி கேட்கபதற்கும் இல்லை, இது நம் உள்ளத்தில் பொறிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கு மகிமை!!

நாம்தான் இவை அனைத்தும் நிகழும் வரை ஒழிந்து போகாத தலைமுறை. நம் கண் முன்னே நடக்கும் துரோகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் தலைமுறை நாம். நேரம் நெருங்கிவிட்டது. அவரது வருகையின் ஒளிரும் சிவப்பு விளக்கு இங்கே உள்ளது. அவரது கடைசி எச்சரிக்கை நடைபெறுகிறது.

மரணமும் அழிவும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. நாம் சோதோம் மற்றும் கொமோராவில் வசிக்கிறோம். அசுத்தம், பாவம், பயத்தால் மனிதனின் இதயம் செயலிழக்கிறது, அணுகுண்டுகள், நாடுகளுக்கு இடையே உள்ள துயரங்கள், மற்றும் தேவன் தாமே நமக்குச் கூறுகிறார் நாம் ஒன்றுபட்டு, முழு நேரமும் பரலோக சூழலில் ஒன்றாக அமர்ந்திருக்கும் வேலையில் , தேவன்தாமே கூறுகிறார் பயப்பட வேண்டாம், நீங்கள் என் இனிமையானவர்கள். உனக்கு எதுவும் ஆகாது. வழியில் நான் உங்களுடன் பேசும்போது உங்கள் இருதயங்கள் உங்களுக்குள் எரியட்டும், மேலும் நான் கூறுகிறேன் நீங்கள் என் மணவாட்டி .

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அந்த சத்தமானது நடந்துக்கொண்டிருக்கும்போது, எங்களுடன் ஒன்றினையுங்கள். அந்த கடக்கும்போது போடப்படும் தடையானது கீழே வருகிறது. சிவப்பு விளக்கு ஒளிரத் தொடங்கியது.

நீங்கள் எங்களுடன் வர நினைத்தால், அந்த வேர்க்கடலைப் பையை கீழே எறிந்துவிட்டு, உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, உங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள் அல்லது நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள், ஏனெனில் அவர் உள்ளூரில் சில நிமிடங்களுக்கு மட்டுமே நின்றிறுப்பார். 63-0623E அன்று பிரசங்கித்த , அந்த ஒளிரும் சிவப்பு விளக்கான அவருடைய வருகையின் அடையாளத்தில் ,அவர் பேச வருகிறார்:

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

பரிசுத்த மத்தேயு 5:28 / 22:20 / 24 அதிகாரம்

2 தீமோத்தேயு – 4வது அதிகாரம்

யூதா எழுதின நிருபம் 1:7

ஆதியாகமம் – 6 அதிகாரம்

22-0327 இடைவெளியில் நிற்றல்

செய்தி: 63-0623M இடைவெளியில் நிற்றல்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள விசுவாசம் உள்ளவர்களே,

இந்த கடந்த வாரங்களில் நம் அனைவரின் வாழ்விலும் மிகவும் மகிமையானகாலமாகும். தேவன் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்துவதைக் கேட்டுக்கொண்டு, உலகெங்கிலும் உள்ள அவரது மணவாட்டிகளுடன் ஐக்கியமாக இருப்பது மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன கேட்டோம்?

“அந்த கூர்நினி கோபுரத்தின் உட்புறத்தில், எழுதப்படாத வெள்ளைக் கல் இருந்தது.” அந்த காரணமாகதான் நான் மேற்கு நோக்கி செல்ல வேண்டி இருந்தது.
இந்த தேவதூதர்களின் செய்திகளுடன் தொடர்பு கொண்டு, இங்கே திரும்ப வந்து சபைகளுக்கு அதை மீண்டும் வெளிப்படுத்த.

அந்த 7 தூதர்ககளுடன் இணைவதற்கு அவர் மேற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது, எழுதப்படாததைக் கூட  நமக்கு வெளிப்படுத்தத் திரும்பி வர வேண்டியிருந்தது; ஆனால் இப்போது, ​​வெளிப்படுத்துதல் மூலம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான விசுவாசத்தை அளிக்கிறது.

இந்த செய்திகளை நம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஆனால் இப்போதோ அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இப்போதுதான் அந்த  நாள், இப்போதுதான் அந்த நேரம். அவர் என்ன கூறினாரோ அது நடக்கப்போகிறதை நாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம், உலகத்திலும் சரி, இந்தச் செய்தியிலும் சரி, மேலும் அது இப்போது நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுகிறது.

நமது 7வது தேவதூதர் பழங்கால தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? இல்லை, அவருக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் விட மிக உயர்ந்த பதவிக்கு அவர் அழைக்கப்பட்டார். ஏனென்றால்,  மனுஷகுமாரன் தன்னை மனித மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததுப்போலவே. நம் புதிய வீட்டிற்கு மணவாட்டியை வழிநடத்த நம் தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார், பின்னர் அவர் நம்மை தேவனுக்கு அறிமுகப்படுத்துவார்.

அவருடைய ஊழியம் மோசேயின் ஜீவியத்தைப்போல மிகசரியாக  செய்ததாக அவர் நம்மிடம் கூறினார். மோசே அக்னி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​மனிதர்கள் எழுந்து அவரை எதிர்கொண்டனர். இந்த மனிதர்கள் அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம் தேசத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் மோசேக்கு சவால் விடுட்டார்கள், அவர் தன்னை அதிகமாகப் போட்டுக் கொண்டார் என்றார்கள்; பரிசுத்தவான்களில் அவர் மட்டும் அழைக்கப்படவில்லை, அவர்களும் பரிசுத்தவான்கள், அவர்களும் ஏதாவது பிரசங்கிக்க வேண்டியிருந்தது.

அவர் கூறினார் அவர்கள் பரிசுத்தமான மனிதர்கள், மேலும் அவர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டி இருந்தது, ஆனால் மக்களை வழிநடத்த தேவன் அவரை, மோசேயை, ஒரு மனிதரை, அந்த மக்களை வழிநடத்த அழைத்தார்.

அவர்களுகென்று இடம் இருந்தது. அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். “மோசே சொல்வதைக் கேளுங்கள்” என்று மக்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டதையும் செய்ய நியமித்ததையும் அவர்கள் செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்ல விரும்பினர் அல்லது மோசே என்ன சொல்கிறார் என்பதை விளக்க விரும்பினர். மோசேயின் பேச்சைக் கேட்க , ஜனங்களைக் குறிப்பதால் மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் மக்களை வழிநடத்த விரும்பினர். அவர்கள் செய்ய நியமித்ததை விட அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர்.

நம் தீர்க்கதரிசி யார், அல்லது அவர் என்ன செய்ய அழைக்கப்பட்டார் என்று உங்கள் மனதில் எப்போதாவது சந்தேகம் இருந்தால், நமது தீர்க்கதரிசியின் பெயரைப் பிரன்ஹாம்   (  B- R- A- N- H-A-M )  என்று வைப்பதன் மூலம் தேவன் பூமியில் என்றென்றும் அடையாளமாக உருவாக்கிய மலைத்தொடரைப் பார்க்க மேற்கு நோக்கி உங்களை அழைக்கிறேன். ,
அந்த மலையின் மேல்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி என்றால். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்து முன்னறிந்தார். அவருடைய வார்த்தை உங்களில் ஜீவித்து மற்றும் வாழ்கிறது. நீங்கள் மாம்சமாகிய உயிருள்ள வார்த்தையாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார். சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை. அந்த எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசம் உங்களில் ஜீவித்து மற்றும் வாசம் செய்கிறது.

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை இன்றைக்கு அவர் வழங்கிய ஒரே வழியின் மூலம் வழிநடத்துகிறார், அவருடைய 7வது தேவதூத தீர்க்கதரிசியின் மூலம் அந்த வார்த்தையானது பேசப்பட்டது. அந்த தீர்க்கதரிசியே நம் போதகர்.

எந்தவொரு புதிய டேப் செய்தியும் முதலில் சேமிப்புக்கிடங்கு வீட்டிலிருந்து வரும், கர்த்தர் அதை மாற்றும் வரை போதகர் எங்களுக்கு உறுதியளித்தார். அதற்காகவே சேமித்து வைக்கப்பட்ட நாடாக்கள் தயாரிக்கப்படும்.

அவர் தனது உதவி போதகர் சகோதரர் நெவில்லுக்கும், இப்போது அவருடைய அருளால் நானே, தேவாலயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எங்கள் அன்பான போதகர் சகோதரர் நெவில்லுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆண்டவரே, அவர் இந்தச் சேமித்த உணவை எடுத்து, தேவனின் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கும்படி, அவரை கிருபையுடனும், வல்லமையுடனும், புரிந்துகொள்ளுதலுடனும் ஆக்குங்கள்.

இந்த ஒளிநாடாக்கள் தீர்க்கதரிசி போதகராக அழைக்கப்பட்டவர்களுக்கானது. கர்த்தர் சொல்வதை நீங்கள் கேட்க விரும்பினால், ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0623M அன்று பிசங்கித்த : இடைவெளியில் நிற்றல்  செய்தியை எங்களுடன் கேளுங்கள் , பத்தி எண் 27 இல் செய்தியைத் தொடங்குவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

வேத வசனங்கள்


எண்ணகமம் 16: 3-4

22-0313 முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும்

https://branhamtabernacle.org/ta/streaming/viewservice/AB2B514E-EFD6-4E7B-9062-8AF0A366C5A2

22-0227 ஐந்தாம் முத்திரை

https://branhamtabernacle.org/ta/streaming/viewservice/B23FFF16-DEF9-4B62-8F9A-5FA81CCB3DA3