வகை காப்புகள்: Uncategorized

23-0507 சிமிர்னா சபையின் காலம்

செய்தி: 60-1206 சிமிர்னா சபையின் காலம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள உண்மையான விசுவாசிகளே,

நாம் எகிப்திலிருந்து வெளியேறி, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்ட இஸ்ரவேலின் குழந்தைகளைப் போல இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக பயணித்தோம். தேவனின் ஒரே அற்புதங்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்; அடிக்கப்பட்ட பாறையில் இருந்து ஒரே மன்னா மற்றும் தண்ணீரை அனைவரும் உண்டனர். நாம் அனைவரும் அக்னி ஸ்தம்பத்தை பின்பற்றுவதாகக் கூறி உரிமை கோறினோம். ஆனால் அப்போது வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைந்தது இருவர் மட்டுமே. ஏன்? இருவர் மட்டுமே உண்மையானவர்கள் அல்லது உண்மையான விசுவாசிகள். அன்றும் இன்றும் என்ன வித்தியாசம்? உண்மையான விசுவாசிகள் வார்த்தையுடன் தறித்திருந்தார்கள்.

ஆவியானவர் சொல்வதைக் கேட்கக்கூடிய ஒரே ஒரு விசேஷமான குழு மட்டுமே உள்ளது. உண்மையான வெளிப்பாட்டைப் பெறும் ஒரு விசேஷமான குழு. அந்தக் குழு தேவனுடையது. அவர்கள் ஆவியானவர் சொல்வதைக் கேட்டு, அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

நாம்தான் தேவனுடைய ஆவியைக் கொண்ட அந்த விசேஷ குழுவாக இருக்கிறோம். நாம் தேவனால் பிறந்தவர்கள். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியால் அவருடைய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள்.

ஆவியானவர் சொல்வதைக் கேட்பதே உண்மையான ஆதாரம். அந்த ஆவியானது பேசுகிறது. அந்த ஆவியானது போதிக்கிறது. தான் வரும்போது செய்வேன் என்று இயேசு சொன்னது அதைத்தான். யோவான் 14:26, “அவர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”

அவர் நம் ஒவ்வொருவரிலும் ஜீவிக்கிறார் என்று இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார். அவர் நம்மை தனி நபராக முன்சென்று, வழிநடத்தி, நடத்துவார். ஆனால் இன்று 72 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் தனது வலிமைமிக்க தேவ தூதர் மூலம் பேசி, “நான் உங்களுக்கு தேவனின் குரல்” என்று உலகிற்கு அறிவித்தார். “பரிசுத்த ஆவியான எனக்கு ஒரு குரல் இருக்கிறது, உங்களிடம் பேசவும், என் எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தவும் பயன்படுத்துவேன்” என்று அவர் ஒவ்வொரு உயிரினத்திடமும் கூறினார். அவரது குரல் நம்மிடம் உதட்டிலிருந்து காதுக்கு பேசுவதை நாம் கேட்பதற்கு, அவரது குரலைப் பதிவுசெய்ய அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை,

ஒலிநாடாக்களில் அவருடைய குரலைக் கேட்பதன் மூலம், நீங்கள் கேட்பது உண்மை என்று நீங்கள் ஆச்சரியப்படவோ, நம்பவோ அல்லது பிரார்த்தனை செய்யவோ வேண்டியதில்லை. ஒலிநாடாவை இயக்கினால் போதும், “இது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று தேவனின் குரல் அவர்களுக்கு அறிவிப்பதை அவர்கள் கேட்க முடியும்.

உங்களுக்கு சுகமளித்தல் தேவையா: ஒலிநாடாவை இயக்கவும். திருமணம் செய்ய வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். புதைக்கப்பட வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். உங்கள் இருதயத்தில் ஒரு கேள்வி உள்ளதா: ஒலிநாடாவை இயக்கவும். உங்களுக்கு ஏதாவது ஆலோசனை தேவையா: ஒலிநாடாவை இயக்கவும். நீங்கள் உங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். உங்கள் வாழ்க்கையை என்ன செய்வது என்று தெரியவில்லையா: ஒலிநாடாவை இயக்கவும், ஒலிநாடாவை இயக்கி பரிசுத்த ஆவியானவர், உங்களுடன் தேவனின் குரலில் ,உதட்டோடு காதுகளுக்கு பேசுவதைக் கேளுங்கள்.

பரிசுத்த ஆவியானவரே இன்றைய நாளின் தீர்க்கதரிசி. அவர் உலகிற்குச் சொன்னார், இது உங்களுக்கு என் குரலாக இருக்க நான் முன்னறிவித்த குரல். நான் மற்றவர்களை என் பரிசுத்த ஆவியால் நிரப்புவேன், உங்களுக்கு உதவ நான் அவர்களை அனுப்பியுள்ளேன், ஆனால் என்னிடம் ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது, அதை நான் என் குரல் என்று அறிவிக்கிறேன்.அவரைக் கேளுங்கள் என்று உலகிற்கு நிரூபிப்பதற்காக அவருடன் எனது புகைப்படத்தையும் எடுத்துள்ளேன்.

தயவுசெய்து என்னை தவறாக எண்ணாதீர்கள். ஆம், அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட தேவனின் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர் தம் பிள்ளைகளுக்கு உதவி செய்ய அழைத்திருக்கிறார். அவர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுகிறேன். அவர்களும் உங்களுக்கு அறிவுரை, ஆறுதல் மற்றும் ஜீவியப் பயணத்தில் வழிகாட்டலாம். தேவன் ஒரு நோக்கத்திற்காக அவர்களை இங்கு வைத்துள்ளார். ஆனால் நீங்கள் பெறக்கூடிய மிக முக்கியமான அறிவுரையும், ஆறுதலும் மற்றும் வழிகாட்டுதலும், ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் உங்களுடன் பேசும் தேவனின் குரலில் மட்டும்தான். நான் உங்களுக்குச் கூறும் எதுவும், அல்லது வேறு எந்த மனிதன் கூறுவதும், அது முதலில் டேப்பில் உள்ள தேவனின் குரலில் இருந்தே வர வேண்டும்.

உங்களுடன் பேசும் தேவனின் குரலைக் கேட்பதை விட உங்கள் ஜீவியத்தில் முக்கியமானது எதுவுமில்லை.தேவனின் நியாயமான குரலுக்கு செவிசாய்ப்பதை விட, இந்த உலகில் நான் செய்யக்கூடிய பெரிய காரியம் அல்லது என் வாழ்க்கையில் வேறு ஏதாவது முக்கியமானது இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சகோ. ஜோசப் கூறுவதைக் கேட்பதா? இல்லை, வேறு எந்த மனிதன் பேசுவதைக் கேட்பதா? இல்லை. ஆனால் அந்த குரலை விட பெரிது வேறு எதுவும் இல்லை.

யாரேனும் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் வெளிப்பாடு மற்றும் பரிசுத்த ஆவி இருந்தால் அவர்கள் இதற்கு ஆமென் என்று சொல்ல வேண்டும். ஒலிநாடாவை இயக்குவதை விட பெரியது இந்த உலகில் எதுவுமில்லை.

அந்த வார்த்தையுடன் தறித்திருக்க இந்த இறுதி நேரத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். தேவனின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் போப்பின் வார்த்தைகளில் இருந்து, பேசப்பட்டவற்றின் ஒரு புள்ளி அல்லது கோடு மாற்றுவதால் தேவனின் பார்வையில், இது அனைத்தும் வார்த்தைக்கு எதிரானது, இது அந்து கிருஸ்து.

சாமுவேலின் காலத்து மக்களைப் போல் நாம் இருக்க விரும்பவில்லை.

அவர்கள் சாமுவேலை அணுகி ஒரு ராஜாவைக் கேட்டபோது. சாமுவேல் அவரது இருதயம் ஏறக்குறைய தோல்வியடையும் அளவுக்கு திகைத்துப் போனார். இந்த பரிசுத்தப்படுத்தப்பட்ட, வேதம் நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசி மூலம் தேவன் தம் மக்களை வழிநடத்தி வருகிறார், மேலும் அவர் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தார்…

தேவனின் அற்புதங்கள், ஞானம், ஏற்பாடு மற்றும் பாதுகாப்பை நாம் பாராட்டுகிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் அதை விரும்புகிறோம். மேலும் அது இல்லாமல் இருக்க நாம் விரும்பவில்லை. ஒரு ராஜா நம்மை போருக்கு வழிநடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் …

“…நம்மை வழிநடத்த நம்மில் ஒருவரான ராஜா வேண்டும்.”

மேலும் தேவன் சாமுவேலிடம் கூறினார், “கவனி, அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, ஆனால் அவர்கள் என்னை ஆளாதபடி என்னை நிராகரித்தார்கள்” என்றார்.

மாறாக, எலியாவிடம் பேசும்போது எலிஷாவைப் போல் உணர்கிறோம். எலியா அவரிடம் வெளிப்படையாகச் சொன்னார், (இன்று அவர் டேப்பில் சொன்னதுதான்,) நான் போகும் வரை நீ இங்கேயே இரு. எலிஷா அதை செய்யமாட்டார், அதைச் செய்ய முடியவில்லை, அவருடைய நாளுக்கான வார்த்தையின் வெளிப்பாடு அவருக்கு இருந்தது.

இப்போது, ​​அவர்கள் பயணம் செய்து, பள்ளிக்கு வருவதைப் பார்க்கிறோம். அதற்கு அவன், “நீ இப்போது இங்கேயே இரு. இங்கே இருங்கள், குடியேறி, இறையியலின் நல்ல ஆசிரியராக இருங்கள், மேலும் பல. நீங்கள் ஒருவேளை, ஒருநாள், இங்குள்ள கல்லூரியின் டீன் ஆகலாம். ஆனால் நான் இன்னும் சிறிது தூரம் கீழே செல்ல வேண்டும்.

57 தேவனின் ஒரு மனிதன் கல்லூரியின் டீனாக இருப்பதில் திருப்தி அடைவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இல்லை ஐயா. அவர், “ கர்த்தர் ஜீவிக்கிறார் அதுப்போல் உன் ஆன்மா ஜீவிக்கும்   அதில். எனக்கு அது பிடிக்கும். உங்கள் தாயாரிடமிருந்தோ, உங்கள் பாப்பாவிலிருந்தோ அல்லது உங்கள் போதகரிடமிருந்தோ எவ்வளவு ஊக்கம் வந்தாலும், அதனுடன் தறித்திருங்கள். அவருடன் தறித்திருங்கள்.

கர்த்தர் ஜீவிப்பதால், நான் ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் தேவனின் குரலுடன் தறித்திருப்பேன், ஏனென்றால் இது கர்த்தர் உரைக்கிறதாவது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்கள் மந்தையுடன் இனையுங்கள், அவருடைய குரல் நம்மிடம் பேசுவதைக் கேட்கவும் மேலும் நமக்கு வெளிப்பாட்டைக் கொண்டு வரவும்,60-1206 அன்று பிரசங்கித்த : சிமிர்னா சபையின் காலம் என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

வெளிப்படுத்துதல் 2:8-11

23-0430 எபேசு சபையின் காலம்

செய்தி: 60-1205 எபேசு சபையின் காலம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள அடிக்கப்பட்ட தூய தங்கமே, 

உங்கள் ஒவ்வொருவரோடும் ஐக்கியமாக இருப்பதற்கும், ஆவிக்குள் நுழைவதற்கும், தேவன் நம்மிடம் உதட்டோடு காதுக்கு பேசுவதைக் கேட்பதற்கும் நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் நமக்கு வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு முடிவே இல்லை. நம் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளன. நம் ஆன்மாக்கள் குமிழ்கின்றன. நாம் எதைக் கேட்டுகொண்டிருக்கிறோமோ அதை ஒருவர் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

கர்த்தர் தாமே நமக்குச் சொல்வதைக் கவனியுங்கள்: “நீங்களே என் உண்மையான சபை, என் மணவாட்டி. என்னைப் பொறுத்தவரை, நீங்கள் தூய தங்கத்திற்கு ஒப்பிடப்படுகிறீர்கள். உங்கள் நீதியே என் நீதி. உங்கள் பண்புக்கூறுகள் எனது சொந்த சிறப்புவாய்ந்த பண்புகளாகும். உங்களுடைய அடையாளம் என்னுள் இருக்கிறது. நான் என்னவாக இருக்கிறேனோ, நீங்கள் அதைப் பிரதிபலிக்கிறீர்கள். என்னிடம் இருப்பதை, நீங்கள் பிரத்தியட்ச்சமாக்குகிறீர்கள்.

 என்னைப் பொறுத்தவரை, உங்களில் எந்தத் தவறும் இல்லை, உள்ளேயும் வெளியேயும் நீங்கள் மகிமைநிறைந்தவர்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை, நீங்கள் என்னுடைய படைப்பாக இருக்கிறீர்கள்…மேலும் எனது அனைத்து படைப்புகளும் பரிபூரனமானவை. 

நீங்கள் ஒருபோதும் நியாயத்தீர்ப்பில் இருக்கமாட்டீர்கள், ஏனென்றால் பாவத்தை உங்கள் மீது சுமத்தப்பட முடியாது. பூமியின் அஸ்திவாரம் போடப்படுவதற்கு முன்பே, என்னுடைய நோக்கம் உங்களுடன் என் நித்திய ஜீவனைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தது.

இந்த வார்த்தைகளை ஒருவர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்ன நடக்கிறது என்பதை நம் மனம் எப்படி புரிந்து கொள்ளும்? என்ன வெளிப்படுகிறது? என்பதை யோசித்துப் பாருங்கள், “ஓ, அப்போஸ்தலர்கள் முதன்முதலில் அனுப்பப்பட்ட முதல் யுகத்தில் நான் அங்கேயே இருந்திருந்தால்” என்று நம் இருதயத்தில் அழ வேண்டிய அவசியமில்லை. நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அவர் சார்ஹம்ஸத்திலும் அல்லது அவரது வழிகளிலும் மாறாதவர், இப்போது நம் மத்தியில் இருக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நம்மிடம் பேசுகிறார். உலக வரலாற்றில் நாம் வாழும் இந்த ஜீவியமே மிகப்பெரிய நேரம்.

கிறிஸ்து விட்டுச் சென்ற துன்பங்களால் நாம் அடிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறோம். அறுக்கப்பட்ட ஆடுகளாகக் கணக்கிடப்படுகிறோம். நாம் நாள் முழுவதும் கொல்லப்படுகிறோம். நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம், ஆனால் எல்லாவற்றிலும், நாம் பழிவாங்குவதில்லை, மற்றவர்களை துன்பப்படுத்தவும் இல்லை. அவரைப் பொறுத்தவரை, நாம் தூய அடிக்கப்பட்ட தங்கமாக இருக்கிறோம், வணங்கவில்லை, உடைக்கப்படவில்லை, அழிக்கப்படவில்லை, ஆனால் இந்த ஜீவியத்தின் சோதனைகள் மற்றும் 

பரிட்சைகளால் என்றென்றும் அழகு மற்றும் மகிழ்ச்சியின் பொருளாக உருவானது. 

அவர் இப்போது மற்ற அனைவருக்கும், “உங்கள் முதல் காதலுக்குத் திரும்புகள்” என்று எச்சரிக்கிறார். நீங்கள் ஒரு வார்த்தையையும் மாற்ற முடியாது, ஒரு புள்ளி அல்லது கோடு கூட மாற்ற முடியாது என்பதில் அவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். அதுதான் ஏதேன் தோட்டத்தில் சாத்தானின் அசல் தந்திரம். ஒரு வார்த்தை சேர்க்கப்பட்டது, ஒரு வார்த்தை நீக்கப்பட்டது, அது வார்த்தைக்கு எதிரானது. 

இந்த கடைசி யுகத்தில் பல பொய்யான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று எச்சரிக்கிறார், மக்களிடம் அவர்கள் கூறுவதை அவர்கள் நம்பாவிட்டால் நீங்கள் தொலைந்து போவீர்கள் என்று கூறுகிறார்கள். 

அதில் எதுவும் சேர்க்கப்படவில்லை, எதுவும் எடுக்கப்படவில்லை, எதுவும் மாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அஙகே ஒரே ஒரு வழி இருக்கிறது… அது தேவனின் தூய குரலைக் கேட்பதன் மூலம்… ஒலிநாடாவை இயக்கவும். 

தங்கள் வீடுகளில் தினமும் செய்தியைக் கேட்பதன் முக்கியத்துவத்தை தங்கள் ஆடுகளுக்குச் சொல்வதோடு மட்டுமல்லாமல், ஆனால் உண்மையான ஊழியராக இருந்து, இந்த செய்தியை, இந்த குரலை, இந்த ஒலிநாடாக்களை, முதலில் வைப்பதன் மூலம், உண்மையாக, விசுவாசத்தோடு கற்பித்த ஊழியர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இவற்றைச் சொல்வதன் மூலம், நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சபைகளைப் பிளவுபடுத்துவதாகவும், மக்களை சபைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறேன். அது உண்மையல்ல. அவர்களின் சபைகளில் டேப்களை முதலாக வைக்காத இந்த சபைகளிலிருந்து மக்களை வார்த்தை அழைத்துச் செல்கிறது. தேவனின் தீர்க்கதரிசியின் வார்த்தையைக் கேட்க அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் கேட்க விரும்பும் மிக முக்கியமான செய்தி மற்றும் குரலாக இதை உணர்கிறார்கள். தங்கள் சபையில் டேப்களை இயக்குவது தேவனின் சரியான விருப்பம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நான் மக்களிடம் எப்பொழுதும் கூறுவதுண்டு , “சபைகளுக்குச் செல்லுங்கள்” என்று கூறினேன். அவர்கள் இதைக் கேட்கும்போது: “பிரசங்கிகள் இன்னும் பிரசங்கிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டால் “ஆம்.” என்று கூறி அவர்கள் பிரசங்கிக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை அல்லது நினைக்கவில்லை. நான் போதகர்கள், ஆசாரியர்கள்,  போதகர்களிடம்,  ” தேவன் உங்களை என்ன செய்ய அழைத்தாரோ அதைச் செய்யுங்கள், ஆனால் தயவு செய்து, உங்கள் ஊழியத்தை அல்ல, 

தேவனின் குரலை ஒலிநாடாவை முதலில் வைக்கவும்”. அதுவே என்னுடைய வெளிப்பாடு. அவர்கள் செய்ய நினைப்பது போல் செய்ய வேண்டும். நான் உணர்த்ப்பட்டதையும் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் எனக்கு உரிமை உண்டு. சகோ. பிரன்ஹாம் சபையில் ஒலிநாடாவை இயக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்று அவர்கள் கூற விரும்பினால், தேவனின் குரலை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அது அவர்களுடையது.

பரிசுத்த ஆவியானவரே, எப்போதுமே அவருடைய மணவாட்டியை வழிநடத்துகிறார். “ஒலிநாடாவை இயக்கவும், என் தீர்க்கதரிசி, என் குரல், என் பரிசுத்த ஆவியுடன் தரிதிருங்கள்” என்று அவர் நம்மிடம் கூறுகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

சரி, இதற்கு முன் எலியா தீர்க்கதரிசியைப் போல நாம் அதை ஒரு மோதலைப் பெறுவோம். நீங்கள் தேவனின் பிள்ளையாக இருந்தால், நீங்கள் இந்த வேதாகமத்தின் தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். இந்த வார்த்தையோடு. இந்த மணிநேரத்தை, இந்த காலத்தையும் கவனியுங்கள். 

வேதாகமத்தின் தீர்க்கதரிசி யார், அந்த வார்த்தை, அந்த பரிசுத்த ஆவியானவர்!

பரிசுத்த ஆவியானவரே இந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசி; அவர் தனது வார்த்தையை நியாயப்படுத்துகிறார், அதை நிரூபிக்கிறார். பரிசுத்த ஆவி  மோசேயின் காலத்தின் தீர்க்கதரிசி. பரிசுத்த ஆவியானவர் மிகாயாவின் நேரத்தின் தீர்க்கதரிசி. வார்த்தையை எழுதிய பரிசுத்த ஆவியானவர் வந்து வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். 

இந்த நேரத்தின் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நம்மை வழிநடத்துகிறார், அவர் ஒவ்வொரு காலத்திலும் இதை செய்துள்ளார். தேவன் தனது திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. 

ஆகையால், பரிசுத்த ஆவியானவர் தம் தீர்க்கதரிசி மூலம் பேசுவதைக் கேட்டு, நம்முடைய செய்தியைக் கொண்டு வரும்படி நம்மை வழிநடத்துவதன் மூலம், 60 -1205 அன்று பிரசங்கித்த” எபேசு சபை காலம்” என்ற செய்தியைக் கேட்க பிற்பகல் 12:00 மணிக்கு. , ஜெபர்சன்வில்லே நேரத்தில், தேவனின் நிகழ்ச்சித்திட்டமாக நாம் கருதும் செயலில் எங்களுடன் இனைய உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம் 

அப்போஸ்தலர் 20:27-30 

வெளிப்படுத்துதல் 2:1-7 …

23-0423 பத்மு தரிசனம்

செய்தி: 60-1204E பத்மு தரிசனம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள தேவனின் வார்த்தையை நேசிப்பவர்களே, 

உங்கள் ஒவ்வொருவரையும் தேவனுடைய வார்த்தையை நேசிப்பவர்கள் என்று அழைப்பது எவ்வளவு அற்புதமானது. அதன் இடத்தைப் பிடிக்க எதுவும் இல்லை. நம் ஜீவியத்தின் ஒவ்வொரு நாளும் நம் தேவனிடமிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம், மனித உதடுகள் மூலம் நம்மிடம் பேசவும், அவர் யார், நாம் யார் என்பதை அவர் நமக்கு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. தேவனின் குரலைப் போல இவற்றை உங்களுக்குச் சொல்ல எந்த இடமும் இல்லை, குரலும் இல்லை, சபையும் இல்லை, எந்த மனிதனும் இல்லை. 

வார்த்தையின் உத்வேகம் டேப்பில் இருக்கிறது என்று அவர் நம்மிடம் கூறினார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒலிநாடாவை இயக்க வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவர் அறையை நிரப்புகிறார். நம் தூதர் அந்த பிரதான கிண்ணத்தின் வளங்களிலிருந்து ஜீவியத்தையும் ஒளியையும் ஈர்த்துக்கொண்டிருந்தார். அவர் தனது திரியை அதில் நனைத்தார். 

அவரது ஜீவியம் பரிசுத்த ஆவியுடன் எரிகிறது. அவருடைய திரி (உயிர்) கிறிஸ்துவில் மூழ்கியிருக்கிறது. அந்தத் திரியின் மூலம் அவர் கிறிஸ்துவின் ஜீவியத்தையே உள்வாங்கி, அதன் மூலம் மணவாட்டியாகிய நமக்கு ஒளியைக் கொடுக்கிறார்.

பின்னர் அவர் நமக்குச் சொல்கிறார், அவருடைய வலிமைமிக்க தூதரின் திரி மட்டும் அங்கு இல்லை, ஆனால் நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து இழுத்துக்கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரே கிண்ணத்தில் மூழ்கி இருக்கிறோம். நாம் நம்மில் மறித்துவிட்டோம் மேலும் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்ட தேவனில் கிறிஸ்துவோடு நம் வாழ்வு மறைக்கப்பட்டுள்ளது. 

எந்த மனிதனாலும் நம்மை அவர் கையிலிருந்து பறிக்க முடியாது. நம் ஜீவியத்தை சீர்குலைக்க முடியாது. காணக்கூடிய ஜீவியம் நமக்குள் எரிந்து பிரகாசிக்கிறது, பரிசுத்த ஆவியின் ஒளியையும் வெளிப்பாடுகளையும் தருகிறது. நமது உள்ளார்ந்த, கண்ணுக்குத் தெரியாத ஜீவியத்தை தேவனில் மறைந்துள்ளது மேலும் தேவனின் வார்த்தையால் ஊட்டப்படுகிறது. நம் நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு நம்மிடம் உள்ளது. 

வார்த்தை நம் ஆன்மாவை எவ்வாறாக போஷிக்கிறது. அதை போல் எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள மணவாட்டி ஒரே நேரத்தில் தேவனின் குரலைக் கேட்க ஒன்றுகூடும் வகையில் அவர் எவ்வாறு வழிவகுத்துள்ளார். விமர்சகர்கள் அல்லது சந்தேகர்கள் என்ன சொன்னாலும், தேவன் ஒரு வழியை உருவாக்கினார், அது அவருக்கு ஒரு இனிமையான வாசனையாகும். மூன்றாவது நாளின் முடிவில் அவர் நம்மை எல்லாம் சேர்த்துக்கொள்வார் என்று நம்மிடம் கூறினார். மகிமை!! 

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 60-1204E அன்று பிரசங்கித்த ” பத்மு தரிசனம் ” என்ற செய்தியில் தேவனின் குரலை நாம் கேட்கையில் வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொண்டுவரட்டும்.

அதற்காக நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்,

முதலில், நாம் கேட்டுக்கொண்டிருக்கையில், நாம் ஆவிக்குள் நுழைய வேண்டும்;

ஏதேன் தோட்டத்திலும் சினாய் மலையிலும் அவருடைய வார்த்தையை ஒலித்த குரல், மருரூப மலையின் சிறந்த மகிமையிலும் ஒலித்தது, மேலும் இந்த முறை அது ஏழு சபைகளுக்கு முழுமையான மற்றும் இறுதியான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.

சகோ. ஜோசப் பிரன்ஹாம் 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள். 

ஏழு சபைக்காலம் புத்தகத்தைப் படிக்க மற்றும் கேட்க நினைவில் கொள்ளுங்கள். 

ஏசாயா 28:8-12 

தானியல் 7:8-14 

சகரியா 4:1-6 

மல்கியா 4:1-2, 4:5

 பரிசுத்த மத்தேயு 11:28-29, 17:1-2 

பரிசுத்த யோவான் 5:22 

எபிரேயர் 4:3-4, 4:7-10, 4:12 

வெளிப்படுத்துதல் 1:9-20, 19:11-15

சபைக்காலம் தொடரின் அறிவிப்பு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நம் வீட்டு ஒலிநாடா சபைகளில் நாம் கேட்கும் சபைகாலம் செய்திகளுடன் தொடரவும், வாரம் முழுவதும் உங்கள் சபை காலம் புத்தகங்களில் தொடர்புடைய அத்தியாயத்தைப் படிக்கவும் உங்களை அழைக்க விரும்புகிறோம். இந்தத் தொடரின் முதல் செய்தியில் சகோதரர் பிரன்ஹாம் மேற்கோள் காட்டியது போல், “இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை வாசிப்பவரும், கேட்பவர்களும் பாக்கியவான்கள்.” இது போன்ற வார்த்தையின் ஆழமான ஆய்வுக்கு, சபை காலம் புத்தகத்தில் சகோதரர் பிரன்ஹாம் கூறும் ஒவ்வொரு அசாதாரண அறிக்கைகளையும் பற்றி யோசித்து ஜெபிக்க இடைநிறுத்தி, நமது சொந்த வேகத்தில் படிக்க இது எனக்கு உதவுகிறது. இருப்பினும், சபை காலம் புத்தகம் ஆடியோவையும் நீங்கள் கேட்கலாம், இது வாரத்தின் ஒவ்வொரு நாளும் லைஃப்லைனில் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு ஆடியோ அத்தியாயமும் திங்கட்கிழமை காலை 9:00 மணிக்கும், செவ்வாய்கிழமை மதியம் 12:00 மணிக்கும், புதன்கிழமை மாலை 3:00 மணிக்கும், வியாழன் மாலை 6:00 மணிக்கும், வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணிக்கும் வெளியிடப்படும். உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்கும்படி உங்களுக்காக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

யங் ஃபவுண்டேஷன்ஸ் இணையதளத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் புதிய வினாடி வினாக்கள் வெளியிடப்படும், YF இல் பதிவு செய்த வாளிபர்களுக்காக. மே மாதத்தில், ஞாயிற்றுக்கிழமை டேப்பிற்கான வினாடி வினாக்கள் உங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் இரண்டு மாதாந்திர வினாடி வினாக்களுக்குப் பதிலாக இருக்கும். வினாடி வினாக்கள் இருமடங்காக இருக்கும், ஆனால் ஒவ்வொன்றும் இன்னும் 10 புள்ளிகள் மதிப்புடையது என்பதால், உங்கள் மதிப்பென்களை பெற இது ஒரு நல்ல நேரம்! 

சபை காலம் தொடரின் இந்த ஆழமான ஆய்வு உங்களுக்கும் உங்கள் முழு குடும்பத்திற்கும் ஒரு சிறப்பு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். 

சகோ. ஜோசப்

23-0416 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்

செய்தி: 60-1204M இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்

PDF

BranhamTabernacle.org

23-0406 இராப்போஜனம்

அன்புள்ள மீட்டெடுக்கப்பட்ட மணவாட்டி மரமே, 

ஆண்டு முழுவதும், உலகத்தை முழுவதுமாக மூடிவிடவும், எனது சாதனங்கள் அனைத்தையும் அணைக்கவும், நாள் முழுவதும் பிரார்த்தனை செய்யவும், அவருடைய குரல் என் இருதயத்துடன் பேசுவதைக் கேட்கவும், அவருடன் பழகவும், அவரது சேவையில் என் ஜீவியத்தை முழுவதுமாக மறுபரிசீலனை செய்யவும் முடியும் என்று நான் வார இறுதியில் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நமக்கு ஈஸ்டர் நாளாக இருக்க வேண்டும், ஆனால் இந்த வார இறுதியில் மிகவும் சிறப்பான, பரிசுத்தமான சந்தர்ப்பம்; மணவாட்டி ஒன்று கூடி ஆராதிக்க ஒரு ஒதுக்கப்பட்ட நேரம். அதற்காக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன் நண்பர்களே. ஒரு இரகசிய இடத்தில், அங்கே ஆவியில், அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டு, தேவனுடன் அடைக்கப்படுவதற்கு என்னால் காத்திருக்க முடியாது; உலகெங்கிலும் கிறிஸ்துவின் மணவாட்டிகளுடன் சேர்ந்து, மேலும் பரலோக சூழலில் அமைத்துக்கொண்டு. தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! இது உண்மையிலேயே நம் ஜீவியத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பரிசுத்தமான வார இறுதியாக இருக்க வேண்டும். 

ஓ, நாம் இன்னும் ஒரு நிமிடம் இங்கே கொஞ்சம் நிறுத்தலாம். “பரலோக சூழளில்.” இப்போது, ​​வெளிதில் எங்கும் இல்லை, ஆனால் பரலோக சூழளில். நாம் “பரலோகத்தில்” கூடியிருக்கிறோம், அதாவே விசுவாசியின் நிலை என்று அர்த்தம். அதாவது, நான் ஜெபித்தால், நீங்கள் ஜெபிக்கப்படுவீர்கள், அல்லது சபை ஜெபிக்கப்பட்டது, நாம் செய்திக்கு தயாராக இருக்கிறோம், மேலும் நாம் பரிசுத்தவான்களாக ஒன்றாகக் கூடி, அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்றோம், தேவனின் ஆசீர்வாதத்துடன் நிரப்பப்பட்டோம், அழைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோம், இப்போது பரலோக சூழலில் ஒன்றுசேர்ந்து , ​​நம் ஆத்மாக்களில் நாம் ஒரு பரலோகவாசிகளானோம். நமது ஆத்மா நம்மை ஒரு பரலோக சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஓ சகோதரரே! அங்கே நீங்கள், ஒரு பரலோக சூழலில்! , நாம் இங்கே பரலோக சூழலில் அமர்ந்திருந்தால், பரிசுத்த ஆவியானவர் மறுரூபப்படுத்தப்பட்டு கிறிஸ்து இயேசுவில் ஒரு புதிய சிருஷ்டியாக மாறினால், இன்றிரவு என்ன நடக்கும்? இரத்தத்தின் கீழ் உள்ள அனைத்து பாவங்களும், பரிபூரண ஆராதனையில், தேவனிடம் நம் ஆராதனையில் நம் கரங்களை உயர்த்தி, நம் இருதயங்களை உயர்த்தி, கிறிஸ்து இயேசுவில் பரலோக சூழளில் அமைக்கபபட்டு, பரலோக சூழளில் ஒன்றாக ஆராதிக்கிறோம்.

நீங்கள் எப்போதாவது ஒன்றாக அப்படி இருந்திருக்கிறீர்களா? ஓ, நான் மகிழ்ச்சியில் அழுது, “தேவனே, என்னை இங்கிருந்து போக விடவேண்டாம்” என்று சொல்லும் வரை நான் தயாராகிவிட்டேன். அப்படியே கிறிஸ்து இயேசுவில் பரலோக சூழலில்!

நம்மை எவற்றால் ஆசீர்வதிக்கிறார்? தெய்வீக சுகமளித்தல், முன்னறிவிப்பு, வெளிப்பாடு, தரிசனங்கள், வல்லமைகள், அன்னிய பஷைகள், விளக்கங்கள், ஞானம், அறிவு, எல்லா பரலோக ஆசீர்வாதங்களும், மகிழ்ச்சியானது சொல்ல முடியாதது மேலும் மகிமை நிறைந்தது, ஒவ்வொரு இருதயமும் ஆவியால் நிரம்பியது, ஒன்றாக நடப்பது, பரலோக சூழலிளில் ஒன்றுகூடுவது, தீய எண்ணங்கள் ஒன்றுக்கூட நம்மிடையே இல்லை, ஒருவரும் புகை புகைப்பதில்லை, ஒரு குட்டை உடை இல்லை, இந்த ஒன்று இல்லை, அது இல்லை, ஒரு தீய எண்ணம் இல்லை, ஒருவரையொருவர் எதிர்த்து எதுவும் செய்யவில்லை, எல்லோரும் அன்பாகவும் இணக்கமாகவும் பேசுகிறார்கள், எல்லோரும் ஒன்றாக இசைந்து ஒரே இடத்தில் , “அப்போது திடீரென வானத்திலிருந்து பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் வந்தது.” அங்கே நீங்கள், “எல்லா ஆவிக்குறிய ஆசீர்வாதங்களாலும் எங்களை ஆசீர்வதித்தீர்.” 

கர்த்தராகிய இயேசுவே இந்த ஈஸ்டர் வார இறுதியில் உங்களுக்கான எங்கள் ஆராதனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்து இயேசுவில் பரலோக சூழலில் நாங்கள் நுழையட்டும்; நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்போம். ஒரு தீய எண்ணம் இல்லை, ஒரு கவனச்சிதறல் இல்லை, ஆனால் ஒருமனதில், ஒரே இடத்தில்; அப்போது பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் பலத்த காற்றைப் போல நம் ஒவ்வொரு வீட்டிற்கும் வரட்டும். “வாருங்கள் ஆண்டவராகிய இயேசுவே”, நாங்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்க தயாராக இருக்கிறோம்.

மணவாட்டியானவள் நம் நாளுக்கான மாலை வெளிச்ச செய்தி மூலம் மீட்டெடுக்கப்பட்டாள்; மல்கியா 4லின் செய்தியின் மூலம் . கிறிஸ்துவின் சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்பாட்டிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம், கைகளால் கட்டப்பட்ட சபை அல்ல, ஆனால் கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாக உங்கள் தீர்க்கதரிசி, பெரிய அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மூலம் ஒரு நபருக்கு நிரூபிக்கப்பட்டது. தேவனின் முழு வார்த்தையையும் மீண்டும் வெளிப்படுத்தினார். இப்போது அது உலகம் முழுவதும் உங்கள் மணவாட்டிகளில் ஜீவிக்கிறது. தீர்க்கதரிசனத்தின்படி, இந்த மாபெரும் மாலை வெளிச்சத்தைக் காண்பதற்காக எங்களை ஜீவிக்க அனுமதித்ததற்கு நன்றி. 

மேலும் மாலை வெளிச்சம் எதற்காக வெளிவருகிறது? மாலை வெளிச்சம் என்பது எதற்காக? மீட்டெடுக்க. வியூ! புரிந்ததா உங்களுக்கு? [சபையானது, “ஆமென்” என்று கூறுகிறது.—எட்.] ரோமாபுரி வழியாக வந்த அந்த இருண்ட யுகத்தில் அழிக்கப்பட்டதை மீட்டெடுப்பதற்காக, காலை வெளிச்சம் எப்படியோ அதே நோக்கத்திற்காகவே மாலை வெளிச்சம். மாலை ஒளியை (என்ன?) பிரகாசிப்பதன் மூலம் தேவன் மீட்டெடுக்கப் போகிறார், தேவனின் முழு வார்த்தையையும் மீண்டும் மீட்டெடுக்கிறார், அவருடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாக. அவர் செய்த அனைத்தும், அவர் செய்ததைப் போலவே, அது மீண்டும் மாலை வெளிச்சத்தில் இருக்கும். நான் என்ன சொல்கிறேன் என்று பாருங்கள்? ஓ, அது அற்புதம் இல்லையா? [“ஆமென்.”] மேலும் தீர்க்கதரிசனத்தின்படி, மேலும் சரியாக இப்போது நாம் ஜீவிக்கிறோம் என்றால் அது மாலை வெளிச்சத்தைப் பார்ப்பதற்கே என்று அறியவே, நாம் இங்கே ஜீவிக்கிறோம். 

அந்த உண்மையான மணவாட்டி நியாயப்படுத்தப்படுவதில் நிறுத்தப்படுவதில்லை, ஆனால் அவளுடைய பாவங்கள் அவள் ஒருபோதும் அதை செய்யாதது போல் அவளுக்குத் தெரியும்; அவள் சுத்திகரிக்கப்பட்டு, சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவள் பரிசுத்தப்படுத்தப்படுவதை நிறுத்துவதில்லை; அவள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தாலும், பெந்தெகொஸ்தே நாளில் அவள் நிற்கவில்லை; ஆனால் அவள் நம் நாளுக்கான வார்த்தைக்கு செல்கிறாள்: மல்கியா 4, அந்த வார்த்தையே ஒரு மனிதனில் மீண்டும் மாம்சமாக மாறியது. “நான் மீட்டெடுப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார், அது மணவாட்டிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான விசுவாசத்தை வெளிப்படுத்தும். மேலும் அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை ஒலிநாடாக்களைக் கேட்பதன் மூலம் மட்டுமே வர முடியும், அவருடைய அற்புதமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 

அவர்களில் ஒருவரான மார்ட்டின் லூதர் ஒரு ஒளியைப் பிரகாசிக்கத் தொடங்கினார். ஒரு சிறிய வெளிச்சம் இருந்தது, அதில் மிகச் சிறிய பலம், அந்த நியாயப்படுத்துதல். 

பிறகு வெஸ்லி , வலிமையான, பரிசுத்தமாக்குதலுடன் வருகிறார் . 

வெஸ்லிக்குப் பிறகு, அவரை விட வலிமையான பெந்தகோஸ்தே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், மற்றொரு பெரிய தீர்க்கதரிசியில் வருகிறது. பாருங்கள்?

ஆனால் கடைசி நாட்களில், மல்கியா 4லில், எலியா அந்த வார்த்தையுடன் வர வேண்டும். “கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வந்தது.” மாலையில், வெளிச்சம் வெளிவர வேண்டும், மீட்டு மற்றும் மீண்டும் கொண்டு வர வேண்டும். என்ன? “பிள்ளைகளின் இருதயங்களை மீண்டும் தேவனுடை விசுவாசத்திற்க்கு திருப்பும்படி.” நான்காவது ஒளி! 

வாருங்கள் ,ஈஸ்டர் வார இறுதியில், உங்கள் வீடுகளில், வார்த்தையைச் சுற்றிக்க ஒன்றுக் கூடுங்கள், தேவனை ஆராதிப்போம். டேபிள் ஆப்ஸ், லைஃப்லைன் ஆப்ஸ் அல்லது டவுன்லோட் செய்யக்கூடிய லிங்க் ஆகியவற்றிலிருந்து டேப்களை இயக்குவதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், இந்தநாளின் மேற்கோளைக் கேட்பதற்கும் தவிர உங்கள் கைப்பேசிகளை அனைத்து வையுங்கள். 

பின்வரும் அட்டவணைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:

 வியாழன் 

இஸ்ரவேல் புத்திரர் வெளியேறுவதற்கு முன், பஸ்காவை நினைவுக்கூரும் வகையில், கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுடன் கடைசி இராப்போஜனம் வியாழன் இரவு அன்று நிகழ்த்தினார். நமது பரிசுத்த வார இறுதிக்கு முன், நமது வீடுகளில் தேவனுடன் உரையாடி, நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படியும், நமது பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்பதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பாக இது உள்ளது. 

தேவனே, இப்போது எங்கள் இருதயங்களை சோதித்துப் அறியுங்கள். தேவனே அந்த இரத்தமானது இருக்கிறதா என்று பாருங்கள்? அது இல்லை என்றால், நீங்கள் இப்போது அதை பூச வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், எங்கள் பாவங்களை நீக்கி, அவற்றை மறைத்து, அவைகள் எங்களிடமிருக்கும் இந்த உலகத்தின் பாவங்களிலிருந்து, பிறிக்கும்படி செய்யபடட்டும், தேவனே, இதனால் நாங்கள் பரிசுத்தமாக இருக்கவும் முடியும். எங்கள் பிதா இப்போது நம் தேவனின் குமாரன் எங்கள் இரட்சகரான ஆட்டுக்குட்டியினாவரின் சரிரத்தில் சிந்திய இரத்தத்தையும், எடுத்துக் கொள்ள வருகிறோம்.

நாம் அனைவரும் மாலை 6:00 மணிக்கு தொடங்குவோம். உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில், 57-0418 அன்று பிரசங்கித்த ” இராபோஜனம் ” என்ற செய்தியைக் கேட்கவும். 

செய்தியைத் தொடர்ந்து, நாம் நம் வீடுகளில் நம் குடும்பங்களுடன் கூடி, கர்த்தருடைய இராப்போஜனம் எடுப்போம். 

டேப் மற்றும் இராபோஜன சேவை இரண்டையும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு விரைவில் ந

கொடுக்கப்படும் அல்லது அது குரல் வானொலியில் கிடைக்கும்.

வெள்ளி

காலை 9:00 மணிக்கு நம் குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மதியம் 12:00 மணிக்கு, கர்த்தரை நம்முடன் இருக்கும்படி அழைப்போம், நாம் அவருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது பரிசுத்த ஆவியால் நம் வீடுகளை நிரப்புவோம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரியில் அந்த நாளுக்கு நம் மனம் திரும்பிச் சென்று, நம் இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, பிதாவுக்குப் பிரியமானதைச் செய்ய எப்பொழுதும் நம்மை அர்ப்பணிப்போமாக. 

அது அவரை முழுமையாகப் பிரதிபலித்தது என்பதை இப்போது நாம் காண்கிறோம். சிற்பிக்கு அந்த வார்த்தையானது அவரது தலைசிறந்த படைப்பில் வார்த்தை பிரதிபலித்தது, இப்போது அவரது குமாரனான, தேவன் இம்மானுவேல் என்று அழைக்கப்படுகிறார். சற்று யோசித்துப் பாருங்கள், தேவன் தன்னை அங்கே, அந்த சரிரத்தில் அடையாளம் கண்டு, அவர் ஆனவரை, அவரும் தேவனும் ஒன்றாக மாறும் வரை ஒரு நபர் மிகவும் வளைந்து கொடுத்தார். “நானும் என் பிதாவும் ஒன்று. என் பிதா என்னில் ஜீவிக்கிறார். நான் எப்பொழுதும் பிதாவுக்கு விருப்பமானதைச் செய்கிறேன்.” 

இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அப்படி ஒரு சாட்சி இருந்தால் என்னவாக இருக்கும்? யூமாவில், தெருக்கலில் நீங்கள் ஒரு தலைசிறந்த படைப்பாக இருப்பீர்கள். நீங்கள் கழுவும் தொட்டியின் பின்னால் ஒரு துவைக்கும் பெண்ணாக இருந்தால், நீங்கள் இன்னும் தேவனுக்கு ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கிறீர்கள், “நான் எப்போதும் தேவனுக்குப் பிரியமானதைச் செய்கிறேன்” என்று நீங்கள் சொல்ல முடியும், மேலும் முழு உலகமும் இயேசுவின் வேலையைப் பார்க்க முடியும். கிறிஸ்து உங்களில் பிரதிபலிக்கிறார்.

பின்னர் மதியம் 12:30 மணிக்கு, 57-0419 அன்று பிரசங்கித்த ” பரிபூரணம்” என்ற செய்தியை, கேட்க நம் வீடுகளில் ஒன்றாகச் கூடுவோம். 

பின்னர் மதியம் 3:00 மணிக்கு மீண்டும் ஒன்றுசேர்ந்து ஜெபத்தில் கலந்து கொள்வோம். நமது ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக.

சனிக்கிழமை

நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும், மதியம் 12:00 மணிக்கும் ஜெபத்தில் ஒன்றுக்கூடுவோம், மேலும் அவர் நம் நடுவில் நமக்காகச் செய்யும் பெரிய காரியங்களுக்காக நம் இருதயங்களைத் தயார்படுத்துவோம். 

தேவனே! தயவுக்கூர்ந்து, தேவனே! ஓ, நான் அதிகமாகப் பாடலாம். நான் அதிகமாக பிரசங்கிக்கலாம். நான் அதிகமாக கத்தலாம். நான் அதிகமாக அழலாம். ஆனால் நான் அதிகமாக ஜெபிக்க கூடாமல் இருக்கலாம். தேவனே, என்னை ஆராயும் என்னை முயற்சி செய்யும். 

ஆழமான குளங்களைப் பற்றி, அவை நட்சத்திரங்களை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைப் பற்றி, சிறிது நேரத்திற்கு முன்பு நான் பேசினேன்; கர்த்தாவே, தாவீது தீர்க்கதரிசி கூறியது போல், “அமைதியான தண்ணீரின் பக்கமாக என்னை நடத்துங்கள்” என்றும், உமது ஆவியின் ஆழத்தை எங்களுக்குள் செலுத்துங்கள். அமைதியான நீர், என்னை அங்கே அழைத்துச் செல்லுங்கள், தேவனே என்னை அமைதிப்படுத்தும். 

பின்னர் மதியம் 12:30 மணிக்கு, நாம் அனைவரும் ஒன்றுகூடி இந்த வார்த்தையை : 57-0420 அன்று பிரசங்கித்த ” கல்லறையிடுதல் ” என்ற செய்தியைக் கேட்போம். 

உலகம் முழுவதும் உள்ள அவரது மணவாட்டிகளுக்கு இது என்ன ஒரு சிவப்பு கடித நாளாக இருக்கப்போகிறது. 

பின்னர் மதியம் 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் கலந்து கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை 

மணவாட்டி மரத்தின் மறுசீரமைப்பைக் கேட்பதற்கும் அதில் பங்குகொள்வதற்கும் என்ன ஒரு சரியான நாள். சகோதரர் பிரன்ஹாம் காலை 5:00 மணிக்கு அவரது சிறிய நண்பரான ராபின் அவரை எழுப்பியது போல அதிகாலையில் எழுந்திருங்கள். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம்: 

இன்று காலை 5 மணியளவில், சிவப்பு மார்பகத்துடன் என் சிறிய நண்பர் ஜன்னல் வழியாக பறந்து வந்து என்னை எழுப்பினது. “அவர் உயிர்த்தெழுந்தார்” என்று கூறினபோது, அதன் சிறிய இருதயம் வெடித்தது போல் தோன்றியது.

காலை 9:00 மணிக்கு நமது ஜெப சங்கிலியில் மீண்டும் இணைவோம், ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனின் குரலைக் கேட்க நம்மைத் தயார்படுத்துவோம். 

மதியம் 12:30 மணிக்கு. நம் ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்றாக கூடுவோம்: 62-0422 அன்று பிரசங்கித்த ” மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல்” என்ற செய்தியைக் கேட்போம்.

இந்த ஆராதனைக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றிணைவோம், உலகெங்கிலும் அவருடன் மற்றும் அவரது மணவாட்டிகளுடன் அவர் நமக்கு வழங்கிய அற்புதமான வார இறுதிக்கு நன்றி. 

வெளிநாடுகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, ஜெபர்சன்வில்லி நேரத்தில் இந்த நிகழ்வுகளுக்கு, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து பிரார்த்தனை நேரங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒலிபரப்பப்பட்ட டேப்களுக்கும் எங்களுடன் ஒன்றுபட உங்களை அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை மதியம் ஜெபர்சன்வில்லி நேரத்தில் டேப்களை இயக்குவது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அந்த செய்திகளை இயக்க தயங்க வேண்டாம். எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, நாம் நம் ஞாயிறு செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

கிரியேஷன்ஸ் ஒர்க்ஷீட்கள் மற்றும் டுடோரியல்கள் மற்றும் YF வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்க உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அழைக்க விரும்புகிறேன், உங்கள் முழு குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கமுடியும். இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் வார்த்தையின் அடிப்படையில் இவை அனைத்தும் அமைந்திருப்பதால் நீங்கள் அவைகளை விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம். 

வார இறுதி அட்டவணையில், கூட்டுச் சேவைக்குத் தயாராகும் தகவல், கிரியேஷன்ஸ் திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும். 

ஆராதனை, மற்றும் சுகமளித்தல் நிறைந்த ஒரு வார இறுதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மணவாட்டிகளுடன் உலகெங்கிலும் ஒன்றாக வரும்படி அழைப்பது எனக்கு ஒரு நன்மதிப்பாக கருதுகிறேன். இது உங்கள் ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் வார இறுதி என்று நான் நம்புகிறேன். 

சகோதரர் ஜோசப் பிரன்ஹாம் 

23-0402 ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

செய்தி: 65-1204 ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

https://branhamtabernacle.org/ta/streaming/viewservice/3D35E036-A890-4125-A000-AC78F3DD1BA2

அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையே,

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உலகம் முழுவதிலும் இருக்கும் இந்த “டேப் மக்களிடையே” என்ன நடக்கிறது என்று பல சபைகள் புதிருடனும், கலக்கத்துடனும், புரியாமலும் தடுமாறிக்கொண்டும் மற்றும் குழப்பமுற்றும் இருக்கின்றன. 

இது கிறிஸ்துவின் மணவாட்டிகளின் காணக்கூடாத ஒன்றியம், குமாரனின் முன்னிலையில் அமர்ந்து, பழுக்க வைக்கிறது, நம்மை தயார்படுத்துகிறது. நம் பரலோக மணவாளன் அவருடன் இருக்கும் நம் எதிர்கால வீட்டைப் பற்றி நம்மிடம் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான் அவர் நம்மிடம் கூறினார்: “இந்த உலகம் உங்கள் வீடு அல்ல, இது சாத்தானின் ஏதேன், மேலும் நான் அதை அக்னியால் அழிப்பேன். உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே என் மணவாட்டிகளாக நான் தேர்ந்தெடுத்த என் அன்பு நிறைந்தவர்கள் நீங்கள். இப்போது, ​​இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு விரைவில் வரவிருக்கும் எடுத்துக்கொள்ளப்படுவதைப் பற்றிச் கூறப் போகிறேன். 

நாம் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அதை நாம் காற்றுவாக்கில உணர முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாக காரியங்கள் நடக்கின்றன. 

வேதாகமம் என்ன கூறின்னதோ அது இந்த நாளில் நடக்கும், அது நாளுக்கு நாள் நடக்கிறது. ஏன், அந்த பாலைவனங்களில் அது மிக வேகமாக குவிந்து கொண்டிருக்கிறது, மேலும் என்னால் அதைத் தொடர முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம், அவருடைய சபையுடன் ஐக்கியமாக இருக்கிறோம், அங்கே அந்த வார்த்தையானது வார்த்தையாகிறது.

இந்த நாளின் மணவாட்டியான அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சீமாட்டியான, நமக்காக இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இந்த விஷயங்கள் வெளிவருவதை நாம் மட்டுமே பார்க்கிறோம்.

அவர் இந்த யுகத்திற்குகாக நம்மை முன்னறிவித்துள்ளார், நம் இடத்தை வேறு யாரும் எடுக்க முடியாது. நாம் இப்போது வெளிப்படுத்தப்பட்ட மகன்கள் மற்றும் மகள்கள் அதனால் நாம் அவருடன் கூட்டுறவு கொள்ள முடியும்; அதைத்தான் அவர் விரும்புகிறார். 

நாம்தான் வார்த்தையின் மேல் வார்த்தையாகவும், கிருமியின் மேல் கிருமியாகவும், ஜீவனின் மேல் ஜீவனாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் முழு உருவமாகவும் இருக்கிறோம். 

உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பேசுங்கள். நீங்கள் வார்த்தையின் மேல் உள்ள வார்த்தை. நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் உள்ள இருளைப் பார்க்காதீர்கள்; சுகமின்மை, நோய், கொலை, விரக்தி, ஆணா பெண்ணா என்று தெரியாத மனிதர்களின் பைத்தியக்காரத்தனம். நாம்தான் மணவாட்டி, முன்னறிவிக்கப்பட்ட, நியாயப்படுத்தப்பட்ட, வெளிப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி . 

எதற்கும் பயப்பட வேண்டாம். சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். நேரம் நெருங்கிவிட்டது. இந்த பூச்சிகள் நிறைந்த வீட்டை விட்டு வெளியேற நாம் உறுதி செய்கிறோம், மகிமை!!! 

வாருங்கள், ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன்” ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபபடுதலுக்கு” தயாராகுங்கள். நீங்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டீர்கள். 

சகோ. ஜோசப் பிரான்ஹாம். 

சங்கீதம் 27:1-5