செய்தி: 65-0718M தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்
admin5 ன் அனைத்து பதிவுகள்
22-1231 போட்டி
செய்தி: 62-1231 போட்டி
அன்புள்ள உள்ளூர் மந்தையே,
புத்தாண்டு தினம், டிசம்பர் 31 அன்று நம் வீடுகளில் மீண்டும் ஒருமுறை இராபோஜனம் அனுசரிக்க விரும்புகிறேன். எப்படிப் பெறுவது மற்றும் அப்பத்தை எப்படி சுடுவது என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இந்த சேவையின் ஒலிநாடா பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு விரைவில் நம் இணையதளத்தில் கிடைக்கும்.அல்லது, லைஃப்லைன் பயன்பாட்டிலிருந்து இந்த சேவையின் ஒலிநாடாவை இயக்கலாம்.
Jeffersonville பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு, டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 – 4:00 க்கு இடையில், VGR அலுவலகத்தின் கீழே நீங்கள் இராபோஜன திராட்சை ரசத்தைக் பெற்றுக் கொள்ளலாம்.
டிசம்பர் 31, சனிக்கிழமை மாலை 5:00 EST மணிக்குத் தொடங்கும்,அப்போது 62-1231 அன்று பிரசங்கித்த” போட்டி ” என்ற செய்தியைக் கேட்போம். சகோதரர் பிரான்ஹாம் புத்தாண்டு இரவு செய்தியைக் கொண்டு வந்த பிறகு, நாம் டேப்பை இடைநிறுத்தி, தேவனின் இராப்போஜனத்திற்குத் தயாராகும் போது தோராயமாக 10 நிமிட வழிபாட்டுப் பாடல்களைக் கேட்போம். பிறகு சகோதரர் பிரன்ஹாம் இராபோஜன சேவையைத் தொடங்கும் இடத்தில் டேப்பை மீண்டும் தொடர்வோம். இந்த டேப்பில், சேவையின் கால்களைக் கழுவும் பகுதியை அவர் தவிர்க்கிறார், அதையே நாமும் செய்வோம். அவருடைய சேவையில் இன்னொரு வருடத்திற்கு நாம் திரும்பும்போது, முதலில் வார்த்தையைக் கேட்பதன் மூலமும், பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வதன் மூலமும் நம் வாழ்க்கையை அவருக்கு மீண்டும் அர்ப்பணிப்போம். ராஜாக்களின் ராஜாவை நம்முடன் வந்து சேர வரவேற்க நம் வீடுகளை ஒரு சரணாலயமாக மாற்ற நமக்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக,
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
22-1225 வெட்கப்படுதல்
செய்தி: 65-0711 வெட்கப்படுதல்
22-1218 தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா?
செய்தி: 65-0418E தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா?
22-1211 இது சூரிய உதயம்
செய்தி: 65-0418M இது சூரிய உதயம்
அன்புள்ள வல்லமையுள்ள ஆலயமே,
மனிதன் ஆபிரகாமைப் போல இருக்க வேண்டும் என்று எப்போதும் தன் இருதயத்தில் ஏங்குகிறான்.ஒரு நாள் மதியம் 11:00 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது, அவன் நிமிர்ந்து பார்த்தான், மூன்று புருஷர் தங்கள் ஆடை முழுவதும் தூசியுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அவன் விரைந்து அவர்களிடம் ஓடி வந்து, “என் ஆண்டவரே” என்றான். அங்கு அவனுக்கு முன் நின்று, மனித மாம்சத்தில், மிகபெரிய மெல்கிசெதேக் பேசினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த ஏக்கம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நாம் அனைவரும் ஒன்று கூடுவோம், அதே பெரிய மெல்கிசெடெக் நம்மிடம் பேசுவதைக் கேட்போம். தகப்பனோ, தாயோ இல்லாத, நாட்களின் ஆரம்பமோ, ஜீவியத்தின் முடிவோ இல்லாத ஒரு நபர், தேவன், மனித உதடுகளால் நம்மிடம் பேசுகிறார், அந்த நாளில் ஆபிரகாமுக்கு எப்படி செய்தாரோ அப்படியே.
நீங்கள் ஒலிநாடாவை இயக்கினால் தவிர அந்த குரலைக் கேட்க வேறு வழியில்லை. அதே நேரத்தில் மெல்க்கிசெடேக்கின் குரல் பேசுவதைக் கேட்க மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுபட்டதாக வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அந்தக் குரலுடன் இணைக்கிறார்.
நாம் பல ஆண்டுகளாக, தேவனின் வார்த்தையைக் கொண்டுள்ளோம். இப்போது நாம் வார்த்தையின் தேவனைப் பெற்றுள்ளோம், பாருங்கள், சரியாக அவருடைய வார்த்தையுடன் இங்கேயே வாழ்கிறோம். எனவே இது உண்மைதான், தேவனின் வருகைக்கு முன் சபைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட கடைசி பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, மணவாட்டி டிசம்பர் அன்று ஈஸ்டர் செய்தியைக் கொண்டிருக்கப் போகிறாள்; மேலும் என்ன ஒரு செய்தியை நாம் கேட்கப் போகிறோம்.
இயந்திரவியல். இயக்கவியல். துரிதமான வல்லமை. உயிர்த்தெழுந்த கிறிஸ்து பிரத்தியட்சமான தேவனின் குமாரர். கிறிஸ்துவுக்குள் குடியிருந்த அதே ஆவி நமக்குள்ளும் இருக்கிறது. அவருக்கு இருந்த அதே ஜீவியம், அதே அதிகாரங்கள், அதே பயனாளிகள், நமக்கும் உண்டு. சுருக்கமான செயல். முதிர்ச்சியடைந்த முதல் வித்து , மக்கள் முன் அசைக்கப்படுகிறது. நாம் இப்போது அவருடைய சதையின் சதை, அவருடைய எலும்பின் எலும்பு; அவரது ஜீவியத்தின் ஜீவியம், அவரது வல்லமையின் வல்லமை! நாமே அவர்!
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து; அந்த அந்த மெக்கிசெடேக் தாமே, கூச்சளிட்டு நம்மிடம் கூறுவார், “என்னுடைய குரலை பதிவு செய்து காந்த ஒலிநாடாவில் வைத்தேன், அதனால் நான் உன்னை என்னிடம் இழுக்க முடியும், மேலும் நான் ஆபிரகாமைப் போலவே உன்னிடமும் பேச முடியும். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் என்னுடைய முன்னறிவிக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட சபை! உங்கள் சரிரம் வல்லமையுள்ள ஆலயமாகும், ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தீர்கள்.
அதுவே மாம்சமாகிய வார்த்தையின் தெய்வீக வெளிப்பாடு. அது அந்த நாளில் குமாரன் மாம்சமாக இருந்தால், அந்த மணவாளாக, அது இன்று மணவாட்டி மூலம் மாம்சமாக இருக்கிறது. பாருங்கள்?
அந்த துரிதப்படுத்தும் வல்லமை நம்மில் ஜீவிக்கிறது. நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரில் இருந்த அதே ஆவி, இப்போது நம்மில் உள்ளது, அது நமது சாவுக்கேதுவான உடலைத் துரிதப்படுத்துகிறது. நாம் அவ்வாறு நம்பவில்லை, நமக்குத் அது தெரியும். நாம் ஏற்கனவே அதை உருவாக்கிவிட்டோம், அவர் அதை நமக்காக செய்தார்.
பிறகு, அந்த மெல்கிசெதேக் மீண்டும் ஒருமுறை பேசி கூறுவார்;
இந்த மக்கள் ராஜ்யத்தின் சக குடிமக்கள், துரிதப்படுத்தும் வல்லமையை உடையவர்கள், ஆண்டவரே, இப்போது அவர்களுக்கு அதைத் துரிதப்படுத்துங்கள். ஆவியானவர் கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் முழுமை ஒவ்வொரு உடலிலும் வெளிப்படும் வரை, சரிரத்திலும், ஆவிக்குறிய அல்லது அவர்களுக்குத் தேவையான எந்தவொரு தேவைக்காகவும், நாம் ஒருவர் மற்றொருவர் மீது கைகளை வைக்கும்போது. இயேசு கிறிஸ்துவின் பெயரில்.
கழுகிலிருந்து கழுகுக்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் முழுமை நம் ஒவ்வொரு சரிரத்திலும் பிரத்தியட்ச்சமாகும். மகிமை!!
இது ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் மட்டுமே இது நடக்கும், எனவே எங்களுடன் இனைந்து சேமித்து வைக்கப்பட்ட பலவகை உணவின் விருந்தில் பங்கேற்கவும், அந்த குரல், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில், 65-0418M. அன்று பிரசங்கித்த ” இது சூரிய உதயம் ” என்ற செய்தியை கொண்டுவருகையில் அதை கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
படிக்கவேண்டிய வேத வசனங்கள்
லேவியராகமம் 23:9-11
மத்தேயு 27:51 / 28:18
மாற்கு 16:1-2
பரிசுத்த லூக்கா 17:30 / 24:49
பரிசுத்த யோவான் 5:24 / 14:12
அப்போஸ்தலர் 10:49 / 19:2
ரோமர் 8:11
1 தெசலோனிக்கேயர் 4:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்துதல் 1:17-18
22-1204 யார் இந்த மெல்கிசேதேக்கு?
செய்தி: 65-0221E யார் இந்த மெல்கிசேதேக்கு?
22-1127 விவாகமும் விவாகரத்தும்
செய்தி: 65-0221M விவாகமும் விவாகரத்தும்
அன்புள்ள தீர்க்கதரிசியின் மந்தையே,
நினைவில் வைத்து கொள்ளுங்கள், நான் இதை என் குழுவிற்கு மட்டுமே கூறுகிகிறேன். மேலும் , நான் இதை என் சொந்தமான பின்தொடர்பவர்களிடம் மட்டுமே கூறுகிறேன். நான் இங்கு என்ன சொல்லப் போகிறேனோ. இந்தச் செய்தி அவர்களுக்கு மட்டுமே,
எந்த ஊழியரோ, அவர், அது அவருடையது, ஆம், அவரே மந்தையை மேய்ப்பவர், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது அவரையும் தேவனையும் பொறுத்தது. எந்த ஒரு பிரசங்கியோ, எந்த ஒரு போதகரோ, அது உங்களைப் பொருத்தது, என் சகோதரரே.
நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மட்டுமே பேசுகிறேன், இது நான் பேசும் ஒரே இடம், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தை என்பதால். இது பரிசுத்த ஆவியானவர் நான் மேற்பார்வையாளராக இருப்பதற்கு புரிந்துகொன்டு ,எனக்குக் கொடுத்த மந்தை, அதற்கு அவர் என்னைப் பொறுப்பாக்குவார். என்னுடைய இந்த மக்கள் இங்கு நாடு முழுவதும் இருந்து மதம் மாறியவர்கள், நான் கிறிஸ்துவிடம் வழிநடத்தினேன்.
ஒரு நன்றி வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்ல வேறு இடம் இல்லை.
பிதாவானவர் தனது மணவாட்டியை வழிநடத்த ஒரு பெரிய பறக்கும் கழுகை நமக்கு அனுப்பியுள்ளார். மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அவரது தீர்க்கதரிசியால் பேசப்பட்ட வார்த்தைகளைப் பேசும் பல குரல்கள் உள்ளன, ஆனால் அவரது மணவாட்டி வழிநடத்தவும் ஒன்றிணைக்கவும் அனுப்பப்பட்ட ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது.
தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் பேசிய வார்த்தைகள் நமது முற்றிலுமானவை. ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று சொல்வதால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யும்படி தேவனின் தீர்க்கதரிசி நமக்குக் கட்டளையிட்டார்.
எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கூறுகிறேன்: நீங்கள் ஒன்றையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை அப்படியே கூறுங்கள், தேவனாகிய ஆண்டவர் உங்களுக்கு கட்டளையிட்டதை சரியாகச் செய்யுங்கள். அதில் எதையும் சேர்க்காதீர்கள்!
உலகமே விழித்துக்கொள். நேரம் நெருங்கிவிட்டது. தேவனின் தீர்க்கதரிசி பேசிய வார்த்தைகள், அது தேவன் நமக்கு கட்டளையிட்டார்; ஒலிநாடாக்களில் அவர் சொன்னதை சரியாக விசுவாசியுங்கள், கூறுங்கள் மற்றும் செய்யுங்கள். நான் கூறுவது அல்ல, உங்கள் போதகரோ அல்லது பிரசங்கிகளோ சொல்வதல்ல, ஆனால் தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் கூறின்னது.
அந்த குரலை டேப்பில் கேட்பதை விட முக்கியமானது வேறு எதுவுமில்லை, எதுவும் இல்லை. ஒலிநாடாக்களில் பேசப்பட்டதை வைத்து நாம் தீர்மானிக்கப்படப் போகிறோம். நான் கூறின்னது அல்ல, ஆனால் அவர் கூறின்னது.
நான் உங்களுக்கு மிகவும் சிறந்ததை விரும்புகிறேன். அது எந்த ஒரு போதகரை போலவே, என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கவே இருக்கின்றன. டேப்பில் தவறுகள் உள்ளன, நீங்கள் தீர்க்கதரிசியைக் கேட்கும் அளவுக்கு நீங்கள் என்னைக் கேட்க வேண்டும் என்றும் டேப்பில் நீங்கள் கேட்கும் எதையும் சந்தேகிக்க, நான் உங்களுக்கு போதிக்கவில்லை, . அசல் வார்த்தையுடன் தொடர்ந்து ஒலிநாடாவை இயக்கவே உங்களை ஊக்குவிக்க சில வார்த்தைகளை நான் எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டிகளாக இருக்க விரும்புகிறேன்.
இந்த நாளுக்காக தேவன் தனது வார்த்தைகளை பதிவு செய்தார், அதனால் ஒவ்வொரு உயிரினமும் அவருடைய குரலைக் கேட்க முடியும். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கிக்கிறார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தார்கள், அது அந்த வேதாகமம். ஆனால் இன்று, அது இன்னும் பெரியதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் ஒலிநாடாவை இயக்கி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம் பேசுவதை நம் காதுகளால் கேட்கலாம்.
நாம் என்ன ஒரு நாளில் ஜீவிக்கிறோம். நம்மைச் சுற்றி உலகம் உண்மையிலேயே வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று ஓய்வெடுக்க ஒரு இடம் உள்ளது. நாம் அதை டேப்பில் பெறுகிறோம். நம் அறையை குளிர்ச்சியாக அமைத்து, சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமித்து வைக்கப்பட்ட உணவுகளை விருந்துண்னுங்கள். நம் தீர்க்கதரிசி வெகு தொலைவில் இருக்கலாம், ஆனால் இவை உண்மை என்பதை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம், மேலும் தேவன் நமக்குக் கட்டளையிட்டபடியே செய்வோம், ஒலி நாடாக்களுடன் தறித்திருங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் நீங்கள் சாப்பிட சிறந்த நன்றி விருந்துக்கு வாருங்கள், தேவனின் குரல் நம்மிடம் பேசும் செய்தி: 65-0221M அன்று பிரசங்கித்த” விவாகமும் மற்றும் விவாகரத்தும் ” என்ற செய்தியைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
பரிசுத்த மத்தேயு 5: 31-32 / 16: 18 / 19: 1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
1 தீமோத்தேயு 2:9-15
1 கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்துதல் 10:7
ஆதியாகமம் 3ஆம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22
22-1120 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்
செய்தி: 65-0220 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்
- 24-0616 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்
- 22-1120 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்து,
நமது பெயர்களை கூப்பிடுவதைக் கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். இதை யோசித்துப் பார்கையில், அவர் வருவதே நமக்காகதான் என்பதாகும். ராஜரீக வாக்குறுதியளிக்கப்பட்ட குமாரனுக்கு ராஜரீக மணவாட்டி. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாகவும் விசுவாசமுடனும் இருக்கும் ஆபிரகாமின் மிக மேன்மையான ராஜரீக சந்ததி.
நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்யவில்லை, அல்லது ஊர்சுற்றவில்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையிலும் தங்கியிருக்கிறோம்.
இன்று உலகில் பல நல்ல கிறிஸ்தவ பெண்கள் உள்ளனர், விசுவாசமுள்ள பெண்கள்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவருடன் வீட்டிற்குச் செல்பவர்கள் நாம். நாமே அவருடைய தெறிந்துக்கொள்ளப்பட்ட மணவாட்டி.
அவர் , முன்பு வந்த விதமாகவே மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் கூறின்னார். அங்கே அவர் நின்று, மனித மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையைப் படித்து, “இன்று இந்த வேதவாக்கியம் உங்கள் பார்வையில் நிறைவேறிற்று” என்று நம்மிடம் கூறினார், நாம் அவரை அடையாளம் கண்டுகொண்டோம், மேலும், நாம் அவருடைய திருமதி இயேசு கிறிஸ்து மணவாட்டியானோம்.
கிழக்கிலிருந்து வந்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று தன்னை நிரூபித்த அதே தேவன், மேற்கு பகுதியில், தனது மணவாட்டி மத்தியில் தன்னை அடையாளப்படுத்திய அதே தேவனின் கு-மா-ர-ன் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குமாரனின் மாலை வெளிச்சம் வந்துவிட்டது.
மேலும் நான் எதைப் பற்றி ஒரு கேள்விக் கேட்டாலும், அதற்கு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு சிலது அருகாமையில் இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையுள்ள, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, அதனால், நம் வாழ்வில் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நம் நாட்களில் பல கேள்விகளும் மற்றும் சர்ச்சைகளும் மக்கள் மத்தியில் உள்ளன.
• தேவனின் தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
• ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?
• எது நமது முற்றிலுமானது ? அவர் இந்த டேப்பில் கூறின்னதா, அல்லது பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் எது வார்த்தை , எது வார்த்தை அல்ல என்பதை தீர்மானிக்க வழி நடத்துகிறதா?
• நமக்காக ஒரு மனிதனையோ அல்லது கூட்ட ஆண்களின் குழுவையோ வைத்து அதைப்பற்றி அறிய வேண்டுமா?
• அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்க அவர் ஒரு குழுவை அனுப்புவார், என்று வார்த்தை கூறுகிறதா?
• வார்த்தையை விளக்குவதற்கு அல்லது அதை உடைப்பதற்கு யாராவது நமக்கு தேவையா ?
• நம் வீடுகளிலும், கார்களிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டேப்களை மட்டும் கேட்டுவிட்டு, மேலும் சபைக்குப் போகும்போது ஊழியத்தைக் கேட்க வேண்டுமா?
• நம் சபைகளில் டேப்களை இயக்க வேண்டுமா?
• இது நம் நாளுக்கான தேவனின் குரலா அல்லது இல்லையா?
இப்போது, இது ஒரு வேதாகம்ம கேள்வி என்றால், அதற்கு வேதாகம்ம பதில் இருக்க வேண்டும். இது ஒரு கூட்ட ஆண்களின் குழுவிலிருந்தோ, எந்த ஒரு குறிப்பிட்ட கூட்டுறவிலிருந்தோ, அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ அல்லது சில பிரிவினரிலிருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்து நேரடியாக வரவேண்டும்…
எனவே நமது கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், நாம் வேதாகமத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து, வேதத்தின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அதை தனக்குத்தானே முடிவு செய்கிறார்களா?
ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவது மட்டுமல்ல, ஆனால் வெளிப்படையாகக் கூறுவதும், மற்றும் தெய்வீக வார்த்தையாக எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர்.
ஆகவே, தீர்க்கதரிசி வேதாகமத்தின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் என்றால், அந்த தீர்க்கதரிசி அவருடைய மணவாட்டியிடம் கூறின்னது தேவனுடைய வார்த்தையாகும், அது ஏற்கனவே விளக்கப்பட்டாயிற்று. ஒரு காலத்திற்காக.
இது ஊழியத்தையோ அல்லது தேவன் அவர்களை அழைத்த பதவியையோ பறிப்பதில்லை. தேவனின் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை தங்கள் மந்தையின் முன் கடைப்பிடிக்க அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் மக்களை அந்த தூதருக்கும், இந்தமணி நேரத்தின் செய்திக்கும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்கள் பிரசங்கிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் சொன்ன வார்த்தைகளால் நியாயதீர்க்கப்பட வேண்டும். அவர்களால் மாற்ற முடியாது, அல்லது ஒரு வார்த்தையையும் அவர்களால் விளக்கவும் முடியாது. தேவனின் வேதாகமம் அவருடைய தீர்க்கதரிசியால் மட்டுமே விளக்கப்படுகின்றன.
இப்போது, அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாக, நீங்கள் அவர்களின் யோசனையைப் பார்க்க முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஒவ்வொருவரும் தாங்கள் தான் உண்மை என்று உரிமைக்ககோருகிறார்கள், தங்களிடம் உண்மை உள்ளதென்று கூறிக் கொள்கிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த மக்கள் அதை நம்ப வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்கள் இலக்கை, தங்கள் நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது வைத்திருக்கிறார்கள். மேலும் அவை தொன்னூறுக்கு அதிகமாக மற்றும் வேறு ஏதாவது கேள்விகளை உருவாக்கும் வரை ஒன்று மற்றொன்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை.
தேவனின் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட இந்தச் செய்தி உங்கள் முற்றிலுமானது அல்ல என்றால், ஆனால் சில மனிதர்கள் அல்லது மனிதர்கள் சொல்வது வார்த்தையாக இருந்தால், உங்கள் நித்திய இலக்கு அவர்கள் சொல்வதில் தங்கியுள்ளது.
எனது வார்த்தைகள் அனைத்து ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிரானதாகத் தெரிகிறது. நான் அப்படி இல்லை. இந்தச் செய்தியை அவர்கள் முன் வைக்க தேவன் உண்மையான மனிதர்களை அவருடைய சபையிலும் அவரது மந்தைகளின் மீதும் வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து நம்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரர் பிரன்ஹாமை அவர்களின் பிரசங்க மேடைகளில் கேட்க வேண்டிய மிக முக்கியமான குரலாக ஏன் வைக்கவில்லை? அவர்கள் ஏன் தங்கள் ஊழியத்தை அந்தக் குரலுக்குச் சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?
மல்கியா 3 கூறின்னது, “வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக என் தூதரை அனுப்புவேன்” என்றது. மேலும் வழியைத் தயார் செய்ய அனுப்பப்பட்டவர், அது அவரே, அந்த இடத்தை அடையாளம் காட்டினார். “அது அவர்தான்! எந்த தவறும் இல்லை. அது அவர்தான்! அவரைப் பின்தொடரும் அடையாளத்தைக் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது. அது நேர்மறையானது, அது அவர்தான்.
பிறகு, என் சகோதரரே, முடிவில், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை நாம் மல்கியா 4ல் என்று கூறலாம், மேலும் மற்றொரு கழுகு, அக்னி ஸ்தம்பத்தை பின்தொடர்வதாக வாக்களிக்கவில்லையா? அது அந்த தவறிழைக்கும் சபைக்குக் காட்டுவதற்காக, எபிரெயர் 13:8ல் அவர் “நேற்று, இன்றும், என்றென்றும் மாறாதவர்” என்று கூறினது , இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்குறுதி அளிக்கப்படவில்லையா?
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்னி ஸ்தம்பத்தை. அந்த அக்னி ஸ்தம்பம் யார்? அந்தக் கழுகு, மல்கியா 4. தான் யார் என்பதை நிரூபிப்பதற்காகத் தன் தலைக்கு மேல் அக்னி ஸ்தம்பத்தை வைத்திருந்தவர் யார்? வில்லியம் மரியன் பிரன்ஹாம்.
ஒவ்வொரு முறையும் நாம் கூடும் போதும் அந்த குரலை மக்கள் முன் வைக்க வேண்டும். நாம் தேவனின் குரலை முதலில் வைக்க வேண்டும். அந்த மனிதனை வணங்குவதற்கு அல்ல, ஆனால் அந்த மனிதனுல் இருக்கும் தேவனையே வணங்க வேண்டும்.
அதுதான், தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தத் தேர்ந்தெடுத்த மனிதன். தேவன் தம்முடைய வார்த்தையை விளக்குவதற்குத் தேர்ந்தெடுத்த மனிதர் , அந்த மனிதர். தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்த மனிதர் அந்த மனிதர். அந்த மனிதனை தான், தேவன் கூறின்னார், “மக்களை நம்பும்படி செய்”, வேறு யாரோ அல்லது வேறு யாரோ சொல்வதையோ அல்ல, அந்த, வில்லியம் மரியன் பிரன்ஹாம். அந்த மனிதர்தான் இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்துவார்.
நான் சொல்வதை வைத்து எந்த ஆணோ பெண்ணோ வேறு ஏதாவது அதில் சேர்த்தால் , நான் என்ன கூறினேனோ அதை நம்பாதீர்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரத்தில் எங்களுடன் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஆக வாருங்கள், தேவன் தேர்ந்தெடுத்த ஊதுகுழல் பேசி நம்மிடம் கூறுவதைக் கேளுங்கள்: 65-0220 அன்று பிரசங்கித்த
“தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் ” என்ற செய்தியைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
உபாகமம் 16:1-3
22-1113 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
செய்தி: 65-0219 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
- 24-0609 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
- 22-1113 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
- இன்றைய தினத்திற்கான மேற்கோள்
- 19-0616 இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக ஆவிக்குறிய வித்தே,
எந்த சபைகளுக்குச் சென்று, நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் தெரிந்துகொள்ள முடியும்? அந்த தேவனின் குரல் டேப்பில் உங்களுடன் பேசுவதை நீங்கள் கேட்பதைத் தவிர , வேறு எங்கும் இல்லை.
நாம் தேவனின் கழுகுகள் மேலும் ஒரு வார்த்தையிலும் சமரசம் செய்ய மாட்டோம். ஒவ்வொரு சேவையிலும் புதிய மன்னாவை மட்டுமே நாம் விரும்புகிறோம், தேவனிடமிருந்து நேரடியாகக் கேட்பதை விட வேறு எதுவும் புதியதாக இருக்காது. ஒவ்வொரு செய்தியைக் கேட்கும்போதும் நாம் மேலும் மேலும் உயரப் பறக்கிறோம். நாம் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் பார்க்க முடியும். இந்த சபையில் மன்னா இல்லை என்றால், தேவனின் கழுகுகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை இன்னுமாக மேலே எழுப்புகின்றன.
தேவன் நம்மிடம் பேசுவதைக் கேட்கும்போதும், நாம் அவருடைய உண்மையான மீண்டும் பிறந்த, தேவனின் சபை என்று சொல்வதை கேட்கும்போது, நம் இருதயங்கள் எவ்வாறாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றன, அது என்னவாக இருந்தாலும், எதையும் எதிர்கொண்டு தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பது,
நாம்தான் அவருடைய கலப்படமற்ற கற்புள்ள வார்த்தை மணவாட்டி.
இத்தகைய கொந்தளிப்பு இன்று மக்கள் மத்தியில் உள்ளது. இயேசுவின் நாட்களில் இருந்ததைப் போலவே, விசுவாசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வேதத்தைப் பற்றி போதகர்கள் விளக்கி கூறுவதை எடுத்துக்கொள்கிறார்கள். வார்த்தையில் மனிதனின் விளக்கத்தை அவர்கள் நம்புகிறார்கள். தேவனின் சத்தியத்தை அவர்கள் காணத் தவறியதற்கு இதுவே காரணம், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பல விளக்கங்கள் இருந்தன. தேவனுக்கு யாரும் அவருடைய வார்த்தையை விளக்க வேண்டிய அவசியமில்லை. அவரே தனது சொந்த மொழிபெயர்ப்பாளர்.
நீங்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், உங்கள் போதகர் என்ன சொன்னாலும், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நம்பியிருப்பீர்கள் என்று நம்புகிறீர்களா? இயேசு சொல்வதைக் கேட்பது உங்களால் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்று உங்கள் போதகரிடம் சொல்லியிருப்பீர்களா? இயேசுவின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேவையில்லை என்று அவரிடம் சொல்லியிருப்பீர்களா? அவர்களிடம் இயேசு பிரசங்கிக்கும் ஒலிநாடாக்கள் இருந்திருந்தால், இயேசு சொன்னதையும் அவர் அதை எப்படிச் சொன்னார் என்பதையும் நீங்கள் சரியாகக் கேட்கும்படி, அவரை ஒலிநாடாவை இயக்க செய்ய வேண்டும் என்று உங்கள் போதகரிடம் சொல்லியிருப்பீர்களா? சரி, அது உங்கள் காலம் இல்லை; இது உங்கள் காலம், இது உங்கள் நேரம். வேதாகமம் கூறின்னது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இப்போது நீங்கள் செய்வதும் சொல்வதும் சரியாக அப்போதும் செய்திருப்பீர்கள்.
கிழக்கிலிருந்து வந்து, மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டதைப் போல தன்னை நிரூபித்துக் கொண்ட அதே தேவனின் அதே கு-மா-ர-ன், மேற்கு பகுதியில் உள்ள அதே தேவனின் கு-மா-ர-ன், நமக்கு மத்தியில் தன்னை அடையாளப்படுத்துகிறது என்று நாம் நம்புகிறோம். இந்த வேதாகமம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்று நாம் நம்புகிறோம்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆண்டு என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன், இது யூபிலி ஆண்டு . நீங்கள் அடிமையாக இருக்க விரும்பினால், இந்த செய்தியை இது தேவன் உரைக்கிறதாவது என்று நம்பவில்லை என்றால் ; இந்தச் செய்தி உங்கள் முழுமையானதாக இல்லாவிட்டால்; செய்தியை விளக்குவதற்கு ஒரு மனிதன் தேவை என்று நீங்கள் நம்பினால்; உங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு என்று நீங்கள் நம்பினால்; பிறகு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள், உங்கள் காதில் ஊசியால் ஒரு ஓட்டைப் போடப்படும், அதன் பிறகு நீங்கள் மீதமுள்ள நாட்களில் அந்த அடிமை எஜமானருக்கு சேவை செய்ய வேண்டும்.
ஆனால் உண்மையான உத்தமமான மணவாட்டி சபை தேவனின் முழு வார்த்தையையும் அதன் முழுமையிலும் அதன் பலத்திலும் நம்புகிறது. நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையாக இருக்கிறோம், அந்த விஷயங்களிலிருந்து விலகி, ஒதுக்கி வைக்கிறோம், மேலும் தேவனின் வெளிப்பாடு நம் கவனத்தை ஈர்த்துள்ளது. நாம்தான் ஆபிரகாமின் அந்த ராஜரீக ஆவிக்குறிய வித்து.
எங்களுடன் இந்த கூட்டுறவை அனுபவிக்க நீங்கள் இங்கு வந்திருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதை இந்தக் கூட்டத்தின் போது தேவன் நமக்குத் தரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருக்கிறோம்.
எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, 65-0219 அன்று பிரசங்கித்த “இந்த வேதாகமம் இன்றைய தினம் நிறைவேறிற்று” என்ற செய்தியைக் கேட்க எங்களுடன் இனைய உங்களை அழைக்கிறோம். இந்தக் கூட்டங்களில் தேவன் என்ன செய்கிறார் என்பதற்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். குமாரனின் மாலை வெளிச்சம் வந்துவிட்டது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
பரிசுத்த யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரிசுத்த லூக்கா 4:16
22-1106 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
செய்தி: 65-0218 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
- 24-0602 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
- 22-1106 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
- 19-1027 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
- 17-0104 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை
அன்புள்ள கற்புள்ள வார்த்தை மணவாட்டியே,
நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்துவிட்டோம். நேரம் நெருங்கிவிட்டது. விதையிலிருந்து பதறானது பிரிந்தது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் இளைபாருகிறோம், கனிந்து வருகிறோம். நம்முடைய சிறிய குழு கிறிஸ்துவுக்குப் பக்குவப்படும் வரை, அவருடைய மேஜையில் அப்பமாக மாறும் வரை நாம் அந்த பிரசன்னத்தில் இருப்போம். தேவனுக்கு நன்றி!
இந்தச் செய்தி மல்கியா 4ய் நியாயப்படுத்தியது, லூக்கா 17:30 நியாயப்படுத்தியது, எபிரேயர் 13:8 நியாயப்படுத்தியது, பரிசுத்த யோவான் 14:12 நியாயப்படுத்தியது , வெளிப்படுத்துதல் 10வது அதிகாரத்தை நியாயப்படுத்தியது, மேலும் அந்த ஏழு முத்திரையை திறந்தது, தேவனின் மர்மங்கள், சர்பத்தின் வித்து, திருமணம் மற்றும் விவாகரத்து மேலும் இந்த எல்லா மர்மங்களும் இத்தனை ஆண்டுகளாக அக்னி ஸ்தம்பத்திற்க்கு அடியில் மறைக்கப்பட்டிருந்தது.
நாம்தான் வார்த்தைக்கு கற்புள்ளவர்களாக இருக்கிறோம். நாம் வேறு எதையும் தொடவும் முடியாது, தொடவும் மாட்டோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் தூய்மையும் புதியதாகவும் இருக்கும்; இது பரலோகத்திலிருந்து விழுந்த புதிய மன்னா.
ஆனால் கடைசிக் காலத்தில் இரண்டு ஆவிகள் மிக நெருக்கமாக இருக்கும், அது முடிந்தால் தெறிந்துக்கொள்ளப்பட்டவர்களையே வஞ்சிக்கும் என்று அவர் நம்மை எச்சரித்தார். எனவே, அந்த ஆவி மணவாட்டியாகத் தோன்றுவதால் நாம் அதைத் தேட வேண்டும்.
கவனியுங்கள், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று பாருங்கள். மத்தேயு கூறினார், பரிசுத்த மத்தேயு 24:24, “கடைசி நாட்களில் இரண்டு ஆவிகள்,” சபை மக்களின் சபை ஆவி மற்றும் மணவாட்டியின் மணவாட்டி ஆவி, “அது மிகவும் நெருக்கமாக இருக்கும். அது முடிந்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.” அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது.
சபை மக்களின் ஆவியும் மணவாட்டியின் ஆவியும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதாவது, சபை மக்களின் ஆவி அந்த நேரத்தில் இருக்கும் செய்தியை அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.
அது மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பைடிரியன் அல்லது பெந்தேகோஸ்தே ஆக இருக்காது; அவர்கள் வார்த்தையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் மேலும் செய்தியை நிராகரிக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் மணவாட்டிகளுக்கு நெருக்கமான ஆவி இல்லை.
சாத்தான் மிகவும் ஏமாற்ற முயற்சித்திருக்கிறான், வெற்றியும் பெற்றிருக்கிறான். ஆரம்பத்திலிருந்தே கூட, “நிச்சயமாக” என்று அவன் எளிமையாகச் சொன்னான், இதனால் ஏவாளுக்கு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தும்படி கூறினான், மேலும் அவள் வார்த்தைக்கு மட்டும் செவிசாய்க்கக்கூடாது. அவளுக்கு கட்டளையிடப்பட்ட ஒரே ஒரு விஷயம் இருக்கிறது: வார்த்தையுடன் இரு.
உண்மையானது:
உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்க வேண்டும். அதைத்தான் தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார். வார்த்தையிலிருந்து பதில் வர வேண்டும். வார்த்தை ஒரு தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது. தீர்க்கதரிசி மட்டுமே வார்த்தையின் மொழிபெயர்ப்பாளர். எந்த ஆணோ பெண்ணோ உங்களிடம் பதில் சொன்னால், அது தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியதாக இருக்க வேண்டும். அது அவர்களின் விளக்கமாகவோ, யோசனையாகவோ, புரிதலாகவோ இருக்க முடியாது. தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தையுடன் அவர்கள் அதை ஆதரிக்க வேண்டும். இது தீர்க்கதரிசியின் வார்த்தையோடு கூட்டுவது அல்ல, அது வெறுமனே, தீர்க்கதரிசி என்ன கூறினாரோ அது தான்.
இப்போது அதில் இரண்டு சிந்திக்கும் பள்ளிகள் உள்ளன.
1.நீங்கள் கேட்க வேண்டியது மிக முக்கியமான செய்திகள் என்பதால், டேப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
2: டேப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை, மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகளை இப்போது ஊழியம் கொண்டுள்ளது.
இரண்டாவது சிந்தனைக்கு பல, பல மாறுபாடுகள் உள்ளன: பரிசுத்த ஆவியானவர் என்னையும் அல்லது எனது போதகரையும் நமக்குச் சொல்வதற்கு வழிநடத்துவார். சகோதரர் பிரன்ஹாம் டேப்பில் சொன்னதை விட அதிகம் தேவை. வார்த்தையை விளக்க அல்லது உடைக்க உங்களுக்கு ஊழியம் இருக்க வேண்டும். ஊழியம் இல்லாமல் நீங்கள் மணவாட்டிளாக இருக்க முடியாது.
இன்னும் பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது. ஆனால் முதலாவதிற்கு எந்த மாறுபாடுகளும் முரண்பாடுகளும் இல்லை.
இது வெறுமனே, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள்.
இந்த கடைசி நேரச் செய்தியை விசுவாசிப்பவர்களாக, நீங்கள் இந்த பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும்:
1.ஒலிநாடாக்களில் தீர்க்கதரிசி கூறியது உங்கள் முற்றிலுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா அல்லது அது உங்கள் அல்லது உங்கள் போதகர் மூலமாக பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
2: ஐந்து கட்ட ஊழியத்தில் மணவாட்டி கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா அல்லது டேப்பில் உள்ள செய்தியா?
உங்கள் மேய்பர், போதகர், ஆசாரியர் , சுவிசேஷகர் அல்லது தீர்க்கதரிசி உங்களை டேப்களைக் கேட்பதே நீங்கள் கேட்க மிக முக்கியமான செய்திகள் என்று உங்களுக்குச் சொல்லவில்லை என்றால், அவர்கள் பொய்யானவர், மேலும் தீர்க்கதரிசி எச்சரித்த அந்த ஆவியானது வந்துவிடும்.
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான செய்திகள் அவை என்று அவர் சொல்லி, அவருடைய சபையில் டேப்களை இயக்க மறுத்தால், ஏதோ தவறு இருக்கிறது. டேப்களைக் கேட்பது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்று அவர் உண்மையிலேயே நம்பினால், அவர் முதலில் டேப்களை இயக்குவார், பின்னர் அவருக்கு உணர்த்தப்பட்டால் பிரசங்கம் செய்வார்.
எளிய உதாரணம்:
சுத்தமான தண்ணீரைக் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒன்று என்று நான் சொல்வேன் என்றால் ஒரே மேலும் ஒரு சான்றளிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மட்டுமே உள்ளது… ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு இரவு உணவிற்கு வரும்போது, அந்த சான்றிதழை பெற்றத் தண்ணீரை நான் உங்களுக்கு வழங்கவில்லை என்றால். நான் உங்களுக்குச் கூறுகிறேன், “அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் குடிக்கலாம், ஆனால் என் வீட்டில் நான் உங்களுக்குக் கொடுப்பதை நீங்கள் குடிக்க வேண்டும்.”
அந்தத் தண்ணீர்தான் உங்கள் ஆரோக்கியத்திற்காக நான் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம், அது உங்களுக்கு வாழ்வைத் தரும் என்றால், நீங்கள் என் வீட்டிற்குள் நுழையும் போது நான் உங்களுக்கு முதலில் கொடுக்கப் போவது சுத்தமான குடிநீரைத்தான்.
“உங்கள் சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள், இது உங்கள் மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். இது கர்த்தர் உரைக்கிறதாவது.” என்று நான் சொல்வது தவறா அல்லது, ” சபையில் டேப்களை இயக்குவது தவறு, எங்கள் சபையில் டேப்களை இயக்க சகோதரர் பிரன்ஹாம் ஒருபோதும் சொல்லவில்லை. மக்கள் தங்கள் வீடுகளில், தங்கள் கார்களில், எல்லா நேரத்திலும் டேப்களை இயக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம், ஆனால் சபையில் அவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறா.
எந்த ஆவி உங்களை வழிநடத்துகிறது? “ஒலி நாடாக்களில் கூறப்படுவது எனது முற்றலுமானது மற்றும் நான் கேட்கக்கூடிய மிக முக்கியமான விஷயம்” என்று நீங்கள் கூறுகிறீர்களா? அல்லது, “ஒலிநாடாக்கள் போதாது. இது என்னுடைய முழுமையானது அல்ல, கேட்பதற்கு மிக முக்கியமான விஷயம் அல்ல, அந்த ஊழியமே என்பீர்களா”?
இப்போது இது வித்து நேரம், அல்லது மணவாட்டி நேரம்.அந்த பதறானது மறித்துவிட்டது. அந்த பதறானது காய்ந்துவிட்டது. கற்புள்ள வார்த்தை நேரம், தொடப்படவில்லை. இது ஒரு கன்னி, நினைவில் கொள்ளுங்கள், ஒரு கன்னிகை வார்த்தை நேரம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி பரலோகத்திலிருந்து விழுந்த புதிய மன்னாவைக் கேளுங்கள்: 65-0218 அன்று பிரசங்கித்த ” வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்