செய்தி: 63-0901M அடையாளம்
அன்புள்ள கழுகுகளே,
இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0901M அன்று பிரங்கித்த ” அடையாளம் ” என்ற செய்தியைக் கேட்போம்.
சகோதரர் ஜோசப் பிரன்ஹாம்
செய்தி: 63-0901M அடையாளம்
அன்புள்ள கழுகுகளே,
இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0901M அன்று பிரங்கித்த ” அடையாளம் ” என்ற செய்தியைக் கேட்போம்.
சகோதரர் ஜோசப் பிரன்ஹாம்
செய்தி: 63-0825E பரிபூரண விசுவாசம்
அன்புள்ள பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,
மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி என்ன என்பதைக் குறித்து என்னால் வார்த்தைகளை பொருத்த முடியவில்லை. இந்தச் செய்தி, தேவனின் தனிப்பட்ட காதல் கடிதங்கள், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்ட, அவரது குரலால் பேசப்பட்டது, அதுவே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மற்ற எதுவும் ஒன்றுமில்லாததாக இருக்கிறது. நாம் அவரை நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவும் நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த திருப்தியும் நம் வாழ்வில் எதுவும் இல்லை.
அது நாம் கூட இல்லை, அது அவர் நமக்குள் ஜீவிக்கிகிறார், அவரிடம் அழைக்கிறார். இது ஆழமான ஆழத்தின் அழைப்பு. டேப்களை இயக்குவதின் சுத்த மகிழ்ச்சி மற்றும் தேவன் மனிதக் குரலைப் பயன்படுத்துவதைக் கேட்க, நாம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உலக அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார் என்று சொல்வதற்கு; ஏனென்றால், நமக்குள் இருக்கும் எல்லாவற்றிலும் நாம் அவரை நேசிக்கிறோம், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப் போகவில்லை. அவர் தம்முடைய வார்த்தையை கடித வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார், அதனால் அவர் நம்மீது உள்ள அனைத்து அன்பையும் நமக்குச் சொல்ல முடியும்.
அப்போது அவர் நம்மிடம் கூறியது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து உங்களிடம் வாய்விட்டுப் பேசுவேன், அதனால் தவறான புரிதல், குழப்பம், விளக்கம் தேவைப்படாது. நான் எனது நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறார், நான் உங்களில் இருக்கிறேன், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள், நாம் ஒன்று என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மாம்சம் என் மாம்சம், உங்கள் எலும்பு என் எலும்பு, உங்கள் ஆவி என் ஆவி.
என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் மிக தெளிவாகச் சொல்கிறேன். நான் அதை மிகவும் தெளிவாக்குகிறேன், சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், நான் எழுதிய மற்றும் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக, அவை ஒருபோதும் தோல்வியடையாது.
நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளிலும் தலைமைத்துவமாக இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் என் வார்த்தை என்ன சொல்கிறது என்பதில் உங்களுக்கு பரிபூரண விசுவாசம் இருப்பதால் அது அதில் தேர்ச்சி பெறும். எதிரி உங்களுக்கு என்ன சொல்ல முயன்றாலும், நீங்கள் அவர்களை கவனிக்க வேண்டாம். உங்கள் காதுகள் வேறு எதற்கும் செவிடாக உள்ளன, ஆனால் என் ஆவி உங்களுக்கு ஏற்கனவே கூறியது. இது உங்கள் இருதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை நகர்த்த எதுவும் செய்யப் போவதில்லை.
இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசமானது, இது கர்த்தர் உரைக்கிறதாவது, நாம் அதே பரிபூரண விசுவாசத்தை, அவர் நமக்குச் கூறின அவரது ஒவ்வொரு வார்த்தையின் வாக்குறுதியும் நம்முடையது. நாம் நோய்வாய்ப்பட்டிருந்து மேலும் நமக்கு சுகமலித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவை இருந்தால், நாம் அதைப் பெறலாம், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை வெளிப்படுத்தும் கடைசி நாளின் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாக்கள்.
அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது, அது ஒரு காதலாக இருக்கிறது. அந்த மகத்தான திருமண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகி விடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசிப்பது, மற்றும் அதை ஏற்றுக்கொள்வது.
நாம் தேவனின் 7வது தூதன் அல்ல, ஆனால் நாம் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள். நம் கைகள் அவருடைய கைகள். டேப்பில் பேசப்பட்டது, கர்த்தர் உரைக்கிறதாவது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவிக்கும் வார்த்தை.
அவருடைய தீர்க்கதரிசி நமது போதகர். பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோம் என்று விசுவாசிக்கும் பரிபூரண நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
தேவன் தம் தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய நியாயப்படுத்தப்பட்ட வார்த்தையைச் சுற்றிக் கொண்டு வருவதால், நம்முடைய விசுவாசம் உயர்வாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறது.
நாளை என்பது மற்ற நாள் போல் இருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம் பரிபூரண விசுவாசத்தை நாம் எடுத்துக்கொள்வோம், நமக்குத் தேவையான எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அக்னி ஸ்தம்பம் அவர் தேர்ந்தெடுத்த தூதர் மூலம் பேசி நமக்குச் கூறுவதுப்போல் அதைப் பெறுவோம்:
நான் உனக்கு என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் என்னை, “உங்கள் போதகர்” என்று அழைத்தீர்கள்; நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள், ஏனென்றால் நான் அப்படித்தான். நான், உங்கள் போதகர் என்றால், இயேசு கிறிஸ்துவால் அடையாளம் காணப்பட்டதினால், நான் அவருடைய வேலையைச் செய்கிறேன், என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசச் செயலைச் செய்து, உங்கள் மீது கை வைப்பதன் மூலம், உங்களைத் துன்புறுத்தும் நோய் மற்றும் துன்பங்களை நான் கண்டனம் செய்தேன். அதை விசுவாசியுங்கள், அதனால் உங்கள் கோரிக்கையை நீங்கள் பெறுவீர்கள், அது என்னவாக இருந்தாலும், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும். நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் கேட்டதை நீங்கள் பெறுவீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெறுகிறேன் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன், என் இருதயத்தில் உங்கள் ஒவ்வொரு குணப்படுத்துதலையும் ஏற்றுக்கொள்கிறேன், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அது முடிந்தது என்று. நான் அதை விசுவாசிக்கிறேன், என்னில் உள்ள அனைத்தையும் கொண்டு நான் அதை விசுவாசிக்கிறேன்.
இந்த நாளுக்காகப் பேசப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட, நியாயப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட,
தேவனின் குரலாக இந்தச் செய்தி உள்ளதென்று நம்மில் உள்ள அனைத்தையும்க்கொண்டு விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும் பெறுவோம் என்று விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது, அது நம்முடையது.
ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் இனையுங்கள், 64-0825E அன்று பிரசங்கித்த : பரிபூரண விசுவாசம், நமக்கு தேவையான அனைத்தையும் எப்படிப் பெறுவது என்று நம்மிடம் தேவனின் தீர்க்கதரிசி கூறுவதைக் கேட்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள் :
பரிசுத்த மார்க் 11:22-26 / 16:15-18
பரிசுத்த யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21
செய்தி: 63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?
அன்புள்ள ஐக்கியம்கொள்பவர்களே,
நேரமும் நித்தியும் ஒன்றாகக் கலக்கும், அது தேவனும் அவருடைய மக்களும் ஒன்றாக கலக்கும்போது.
நான் தேவனின் மணவாட்டி ஒன்றாக கலக்க அழைக்கிறேன். இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் . 63-0825m அன்று பிசங்கித்த: நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? என்ற செய்தியைக் கேட்க அழைக்கிறேன்.
சகோதரன். ஜோசப் பிரன்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதம் வசனங்கள்.
வெளிப்படுத்துதல் : 3ஆம் அதிகாரம் 21 முதல் 22 வசனம் வரை.
செய்தி: 63-0818 இணையும் நேரமும் அடையாளமும்
அன்புள்ள முதன்மையான மணவாட்டியே,
ஞாயிற்றுக்கிழமை அன்று உலகெங்கிலும் ,பரலோக சூழலில் நாம் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, தேவனின் ஒரே குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன கூறப்போகிறார் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
அவருடைய வார்த்தைகளை நாம் இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றைக் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டைப் பெறுவோம். அவர் நம் இருதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, இப்போது இருக்கும் ஒன்றை, சரியான காலத்தில் வெளிப்படுத்துவார்.
பிறகு அது நடக்கும். மணவாளன் தனது மணவாட்டிகளுக்குச் சொல்லக்கூடிய மற்றும் வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்களே தெய்வீக சரீரத்தின் முழுமையான முழுமை, முதன்மையானவர்கள். எனக்குள் இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றினேன்; கிறிஸ்துவில் இருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றினேன். நீங்கள் என் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை மணவாட்டி.
நம் முழு உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளியது. தகப்பனானவர் நம்மிடம் கூறினார், நாம்தான் அவருடைய மணவாட்டி. நாம்தான் அவர் நேசிக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் செறிவூட்டப்பட்டுள்ளோம், அவருடைய வார்த்தை மட்டுமே. நம் கருப்பை வேறு எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருந்தார், ஏங்குகிறார்…நமக்காக!!
மேலும் என்னவென்று யூகியுங்கள்? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மனித மாமிசத்தில் வந்து வசித்தார், அதனால் அவர் நேரடியாக, உதட்டோடு காதுகளில் பேச முடியும், மேலும் “நான் உன்னை நேசிக்கிறேன், என் நேச மணவாட்டி.” என்று நம்மிடம் கூறுகிறார்.
நாம் பாடல் பாடுவதை விரும்புகிறோம், ஐக்கியம் கொள்வதை விரும்புகிறோம், விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்புவது தேவனின் குரலைக் கேட்பது; இது தேவன் உரைக்கிறதாவது, நம்மிடம் நேரடியாகப் பேசுவது. ஒவ்வொரு செய்தியும் நமக்குத் தனிப்பட்ட காதல் கடிதம். அவர் நமக்குச் சொல்ல விரும்பும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு காந்த நாடாவில் வைத்தார், அதனால் அவற்றை நாமே கேட்க முடியும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கூடும்போது அவர் நமக்கு என்ன சொல்லப் போகிறார்? மேல்ம் இது என்ன காலம்?
ஏசாயா பேசி, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்” என்று கூறினார், ஆனால் இது நடபதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது. தாவீது ராஜா, “அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைக்கிறார்கள்” என்றார். அவர் தனது கைகள் மற்றும் கால்களைப் போல பேசினார், ஆனால் காலம் இதுவல்ல, இன்னும் 1000 ஆண்டுகள் கடந்து செல்லும்.
தேவன் நம் நாளில் நம் தீர்க்கதரிசி மூலம் பேசினார், இந்த நாள் வரும் வரை பல விஷயங்கள் நடக்க முடியாது என்று கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும் அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் இப்போது அது மிகவும் உயிருடன் இருப்பதையும் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் காண்கிறோம், அவர் தீர்க்கதரிசனம் சொல்லி நமக்குச் சொன்னதுபோல.
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இனி இல்லை மேலும் அந்தப்பனிப்போர் முடிந்துவிட்டதாக உலகம் நினைத்தது, . ஆனால் இன்று அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அவர் சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலம் வந்துவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் நேரடியாகப் பேசுவார், உதட்டோடு காதுக்கு, நாம் கேட்பதற்காகப் பேசப்பட்டு சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் கேட்போம். அவர் நமக்கு என்ன சொல்லி வெளிப்படுத்துவார்? அந்த காலம் என்ன? என்ன நடக்கிறது?
தேவன் தனது மணவாட்டியை ஒன்றுபடுத்துகிறார். அவள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் ஒன்றாக வருகிறாள். இது ஒன்றுபடுவதற்கான நேரமாக உள்ளது, அது இப்போது உள்ளது. அவள் எதற்காக ஒன்றுபடுகிறாள்? அந்த எடுத்துக்கொள்ளப்படுவதற்காக.
உலகெங்கிலும் தேவனின் குரலை நாம் கேட்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஐக்கியப்படுத்துகிறது. அந்த வார்த்தை தேவன். மணவாளன் என்பது வார்த்தை. மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்கும், நாம் ஒரு ஐக்கியத்தில் ஒன்றாக வருகிறோம். நாம் ஒரு திருமணத்திற்கு தயாராகி வருகிறோம், அங்கு நாம் வார்த்தையுடன் ஒன்றாக மாறுகிறோம்.
பிதாவில் உள்ள அனைத்தும் நானே; மேலும் என்னில் உள்ள அனைத்தும், நீங்களே; மேலும் உங்களில் உள்ள அனைத்தும், நானே. மேலும், நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” பாருங்கள்? “அந்த நாளில்.” எந்த நாள்? இந்த நாள்! தேவன் வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய பெரிய மறைந்திருக்கும் மர்மங்களை நாம் காண்கிறோம். ஓ, நான் அதை எவ்வாறாக நேசிக்கிறேன்!
இப்போதே அந்த நேரம். இப்போதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவில் கூக்குரல் இடுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.
ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லே நேரத்தில் நாம் வார்த்தையைச் சுற்றி ஒன்றுபடும்போது, எங்களுடன் ஒன்றுபடுங்கள், தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்போம்: 63-0818 அன்று பிசங்கித்த இணையும் நேரமும் அடையாளமும்
செய்தியைக் கேட்போம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதங்கள்
சங்கீதம் 86: 1-11.
பரிசுத்த மத்தேயு 16 : 1 – 3
செய்தி: 63-0728 கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்
அவரது இருதயத்தின் அன்பான ஆப்பிள்களே,
உலகிலேயே நான் மிகப் பெரிய ஸ்லாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். கர்த்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேச முடியும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களிடம் பேசவும் வெளிப்படுத்தவும் முடியும்.
இது தேவ மனுஷன் மட்டுமல்ல, அது தேவனே, அந்த அக்னி ஸ்தம்பம், அந்த பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாகப் பேசுகிறார், உதட்டிலிருந்து காதுக்கு, அவர் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசி, நம்முடைய போதகர் என்று அழைக்க நமக்கு ஸ்லாக்கியமும், பாக்கியமும் உள்ளது.
நாம் கேட்பது ஒரு மனிதனையா, அவருடைய சிந்தனையா, அவருடைய யோசனையா அல்லது வார்த்தையின் விளக்கமா என்று யோசிக்க வேண்டாம். இது தேவன் தாமே நம்மிடம் பேசுகிறார், கர்த்தர் உரைக்கிறதாவது.
மக்கள் இதில் மூச்சுத் திணறுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் அதைக் குடிப்போம். ஏனென்றால் அது மட்டுமே நம் தாகத்தைத் தணித்து, நம் ஆன்மாவைத் திருப்திப்படுத்துகிறது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனின் குரல். இது இந்த மணி நேர செய்தி. எனவே, இது வார்த்தை, அந்த குரல், அந்த ஒலிநாடாக்கள் அல்லது எதுவும் இல்லை!
பழங்கால இஸ்ரேலைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரு தேவன், அக்னி ஸ்தம்பத்தில் நிரூபிக்கப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தன்னை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்னி ஸ்தம்பம், இன்றும் அதே வழியில். தேவன் தன் இயல்பை மாற்றவே முடியாது. அவரது திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மேலும் அவரது திட்டம் மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் சரியானவை.
அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முழுக்க முழுக்க உண்மை என்பதை நாம் அறியும் வரை, அதன் நுனிகளிலும், உள்ளேயும் வெளியேயும் சுற்றிலும் அடித்து, வேதத்தின் மூலமும், காலவரிசைப்படியும் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
அங்கே எந்த தவறும் இல்லை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் பிடித்து இன்றைய நிலையில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலிருந்து, நிகழ்காலம் வரை அதைக் கட்டியெழுப்புவார்.
ஞாயிற்றுக்கிழமை நமது போதகர் மூலம் தேவன் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறார் என்பதை கொஞ்சம் குடிப்போம்:
நீங்கள் என் இருதயத்தின் ஆப்பிள், ஆவியானவராலும் சத்திய வார்த்தையாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
கர்த்தர் உங்களுக்காக உணவைச் சேமித்து வைத்துள்ளார்; நல்ல, ஆரோக்கியமான தோற்றமுடைய காய்கறிகள், மேலும இங்கே இந்தக் கூடாரத்தில். இன்று, நீங்கள் முழுமையாக மேஜையில் சேகரித்ததைப் பெறப் போகிறீர்கள். நாம் ஜீவிக்கும் நேரத்தில் அது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன்னால் இருக்கும் பணிக்கான ஆவிக்குறிய பலத்தைத் தரும்.
நீங்கள் அதைக் கேட்க விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும் என்பதால் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்: நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நபர், அதை அவர்கள் மட்டுமே கேட்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, நீங்கள் வீழ்ச்சியடையமாட்டீர்கள், ஆனால் உலகின் மற்ற அனைவரும் அதைப் பற்றி என்ன சொன்னாலும் அந்த வார்த்தையைப் பற்றிக் கொள்வீர்கள். நீங்கள்தான் அந்த வார்த்தை மணவாட்டி!
தேவன் உங்களுக்கு இந்த பெரிய மர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அதுதான் ஒரு புதிய பிறப்பு. இப்போது அவர் உங்களை ஒன்றிணைக்கிறார், அங்கு வெளிப்பாடு சரியான இணக்கத்துடன் உள்ளது. தேவன் அதை தம் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார், அதே செயல்களால், அதே காரியங்களால், அந்த வார்த்தையை உங்களில் பிரத்தியட்சமாக்கினார்.
நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டை வெளிப்படுத்துபவர் மேலும் இது எல்லாக்காலங்களிலும் இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், எல்லா காலங்களிலும்! கர்த்தருடைய வார்த்தை யாருக்கு வந்தது? தீர்க்தரிசிக்கு, மட்டுமே.
நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் டேப்பில் பேசுகிறேன் என்பதை உணர்ந்தேன், உலகம் முழுவதிலும் டேப் ஊழியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற இடங்களை விட பத்து மடங்கு சிறந்த டேப்பை இங்கிருந்து உருவாக்குகிறோம் என்று தெரிகிறது. இந்த டேப்பைக் கேட்கும் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இப்போது அவர்கள் எந்த டேப்பைக் கேட்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம், ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். டேப் மக்களாகிய நீங்கள்; காடுகளிலே மற்றும் எங்கு கேட்டாலும், இப்போது கேளுங்கள்.
நாம் விசுவாசிக்கும் டேப்கள் நம்மிடம் உள்ளன. சபையில் ஒழுக்கத்தைப் பற்றிய டேப், தேவனின் சபையில் நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பதை பற்றிய டேப், இங்கே எப்படி ஒன்றாக வந்து பரலோகத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம் என்பது பற்றிய டேப்கள் நம்மிடம் உள்ளன.
டேப்பை பெற்றுள்ள அனைவருக்கும் அது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தோல்வியுற்றால், இந்த டேப்பிற்கு மீண்டும் வாருங்கள். இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று தெரியவில்லை. நினைவில் வையுங்கள், இதுவே கர்த்தர் சொல்லும் உண்மை. அது தான் உண்மை. இது வேதம்.
சரிரத்தின் தலைமைத்துவம் ஒன்றாக மாறிவிட்டது. அது தேவன் உங்களில் பிரத்தியட்ச்சம் ஆனது, அவருடைய மக்களே. அதனால்தான் கணவனும் மனைவியும் இனி இருவராக இல்லாததற்குக் காரணம் அதுதான்; அவர்கள் ஒன்றே. தேவனும் அவருடைய சபையும் ஒன்று, “உங்களில் உள்ள கிறிஸ்து,” தேவனின் பெரிய வெளிப்பாடாகும்.
இது என் யோசனையல்ல; அது அவருடைய வல்லமை, அது அவருடைய வார்த்தை. அவர் உறுதியளித்தார்; அது இங்கே உள்ளது. அது இங்கே இருக்கும், அது இங்கே இருக்கும் என்றார். நீங்கள் தேவனின் மகன்கள். நீங்கள் அப்படியாக இருப்பீர்கள் அல்ல; நீங்கள் இப்போதே அப்படியாக இருக்கிறீர்கள்!
எங்கள் கோப்பைகளை நிரப்புங்கள் ஆண்டவரே, நாங்கள் அதை உயர்த்துவோம் ஆண்டவரே, வந்து எங்கள் ஆன்மாவின் இந்த தாகத்தைத் தணியுங்கள். பரலோகத்தின் அப்பமே , எங்களுக்கு போதும் என்னும்வரை எங்களுக்கு உணவளிக்கவும். எங்கள் கோப்பையை நிரப்பவும், அதை நிரப்பவும், எங்களை முழுமையாக்கவும்.
ஞாயிற்றுக்கிழமை நாம் கூடிவரும்போது, உலகம் முழுவதும் எத்தகைய மறுமலர்ச்சியின் நேரத்தைக் கொண்டிருப்போம்: 63-0728 அன்று பிரசங்கித்த ,”கிறிஸ்து தேவனின் மர்மம்” என்னும் செய்தி மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் வெளிப்படுகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள்
பரிசுத்த மத்தேயு – 16:15-17
பரிசுத்த லூக்கா – 24வது அதிகாரம்
பரிசுத்த யோவான் – 5:24 / 14:12
1 கொரிந்தியன் – 2வது அதிகாரம்
எபேசியர் – அதிகாரம் 1
கொலோசெயர் – 1 அதிகாரம்
வெளிப்படுத்துதல் – 7:9-10
செய்தி: 63-0724 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை
அன்புள்ள சிறிய சுருள்வில், முக்கிய சுருள்வில் அல்லது நீங்கள் எதுவாக இருந்தாலும்:
நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம், நமது நிலையில், ஒற்றுமையாக, அவருக்காக நம்மால் இயன்ற மிகச் சிறந்த வேலையைச் செய்ய முயற்சிக்கிறோம். அவருடைய வார்த்தையான இந்தச் செய்தியைத் தவிர வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.
தேவனின் தீர்க்கதரிசி நம்மிடம் சொல்வதைக் கேட்க நாம் விரும்புகிறோம்: அது “உங்களில் சில மனிதர்களைப் பற்றி, ஏதோ இருக்கிறது. நீங்கள் என் ஜீவியத்தில் ஒரு சிறப்புமிக்க மனிதர்களாக இருக்கிறீர்கள். நான் விரும்பும் இன்னொன்று இருக்கிறது.
அது நான் உங்களைச் சந்திக்கவும் உங்களுடன் பேசவும் விரும்புகிறேன்.”
“நான் என்னுடைய சொந்த சிறிய தாழ்மையான ஊழியத்தைச் சுற்றிப் பார்க்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாற்தவராக இருக்கிறார், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்; மணவாட்டியின் குழுவை ஒன்றாக அழைத்து மற்றும் ஒன்றிணைக்கிறது. இது சக்கரத்தில் இருந்து ஒரு சக்கரத்தை எடுப்பதை போன்றது.”
அது ஒரு மனிதன் அல்ல என்பது நமக்குத் தெரியும், அது அவருடைய மணமவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். நாம் செய்யும் காரியங்கள் தேவனைவிட குறைவானவை அல்ல. இனி அப்படி இருந்திருக்கலாம், அது அப்படி இருக்கலாம், அது போல் காணப்படலாம், என்று இல்லை அது தேவன்!!
இது எங்களுக்கு மிகவும் விலையுயர்ந்த முத்து என்று நாம் கூறும் அந்த இடத்திற்கு வந்துள்ளோம். எவரொருவர் நமக்கு எதிராகச் சொன்னாலும் அதிலிருந்து நாம் விலகிவிட்டோம். மனிதன் எதைச் சாதித்திருக்கிறான் அல்லது என்ன சொல்கிறான் என்று நாம் பார்க்கவில்லை, தேவன் என்ன சொன்னார், நம் நாளில் அவர் என்ன செய்வார் என்று அவர் வாக்குறுதி அளித்தார் என்று பார்க்கிறோம், அதை அவர் செய்வதைப் பார்க்கிறோம்.
இதுதான் நம்முடைய இருதியானது. நாம் இருக்கும் அனைத்தும், நாம் இருந்த அனைத்தும், நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த செய்தியில் வைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு ஜீவியத்தை விட மேலானது.
உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தீர்ப்புக்குத் தயாராகுங்கள் என்று தேவன் எச்சரிக்கை கொடுப்பதைக் காண்கிறோம், அணுகுண்டுகள் தொங்கப்பட்டு, அனைத்தும் தயாராக உள்ளன.
இந்த முறை, இது நோவாவின் நாட்களிலோ அல்லது ஆபிரகாமின் நாட்களிலோ இருந்தது போன்ற ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமல்ல; தேவன் உலக மக்களை எச்சரிக்கிறார், அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார்,
இது உங்கள் கடைசி எச்சரிக்கை.
அவர் நம்மிடம் கூறுகிறார், “இதை நான் அனுமதிக்கும் முன், நான் சோதோமுக்கு செய்ததைப் போலவே, அதிலிருந்து வெளியே வா என்று கடைசியாக அழைக்கிறேன். தயாராய் இரு. அங்கே ஏதோ நடக்கப் போகிறது”.
உலகம் அவர்களின் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் சார்ந்துள்ளது; கலப்பினங்கள் தலைமுறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்தது . புத்திசாலி மற்றும் படித்தவர்கள் அறிவார்ந்த பக்கங்களில் செல்கிறார்கள்: ஐக்கிய நாடுகள், NATO, உலக நாடுகள் சங்கம். ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு நெருங்கி வருவதைக் காண்கிறோம். ரஷ்யா, போர், எண்ணெய் , வாட்டிகன், யூதர்கள், அணு குண்டுகள் என தீர்க்கதரிசி வெகு தொலைவில் பார்த்து, நமக்குச் சொன்னது நடக்கும்.
இனி என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க வேண்டியதில்லை. இது ஒவ்வொரு நாளும் நடந்துக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், உலகில் பயம் என்பது ஒரு நிஜம் மற்றும் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது.
ஆனால் அவர் எசேக்கியாவின் நாட்களில் செய்ததைப் போலவே, தேவன் தம் தீர்க்கதரிசி மூலம் பேசி மக்களை எச்சரித்தார், “தயாராயிருங்கள், ஏனென்றால் தீர்ப்புகள் வீழ்ச்சியடையப்போகிறது”. அவருடைய தீர்க்கதரிசி வரவிருக்கும் காலத்திற்கு மக்களை தயார்படுத்தினார்.
நோவா தனது காலத்திற்கு மக்களை தயார்படுத்தினார். இது நியாயத்தீர்ப்புக்கு முன் கருணையின் அழைப்பு. தேவனுக்கு ஒரு அளிக்கப்பட்டவழி இருந்தது, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசி.
நோவாவின் காலத்தில் செய்ததைப் போலவே, அவர் எப்போதும் தனது தீர்க்கதரிசி மூலம் தனது வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களிலும் அவர் அதையே செய்தார். ஏலியின் நாட்களில்-… மோசேயின் நாட்களில், அவர் அதையே செய்ததைக் காண்கிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டார்கள். இப்போது, அந்த வகையானது வெளிவருகிறது. அந்த வகையானதுதான் அதை நம்பியது.
எல்லா அவிசுவாசத்திலிருந்தும் நம்மைப் பிரித்துவிட்டோம். தேவன் இன்று தம் மணவாட்டிகளுக்கு ஒரு வழியை அளித்துள்ளார். அவர் தம் வார்த்தையில் நமக்கு உறுதியளித்தார், “தீர்ப்புக்கு முன், நான் என் சிறிய தாழ்மையான மந்தையைக் கூட்டிச் செல்ல உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், நான் அவர்களை ஒரு பக்கத்தில் உட்கார வைப்பேன், அவர்கள் சமாதானமாக இருப்பார்கள், நிலுவையில் உள்ள தீர்ப்புக்காகவும் தப்பிக்கவும் காத்திருக்கிறார்கள். ”.
நாம்தான் அந்த சிறு மந்தை. நம்மைதான் தகப்பனானவர் அன்பு செலுத்தினார் மேலும் அவரது விரைவில் வரவிருக்கும் வருகைக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நம்மைச் சுற்றி உலகம் சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் ஓய்வாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.
நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். உலகில் நாம் எங்கிருந்தாலும், அவருடைய வார்த்தையைச் சுற்றி, அவருடைய குரலைச் சுற்றி நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு தேவன் ஒரு வழியைக் கொடுத்துள்ளார். இது தேவன் கொடுத்த வழி.
மேலும் இந்த தீர்க்கதரிசி அவர்களை தேவன் கொடுத்த வழிக்கு வழிநடத்தினார். இப்போது, அது தேவனின் காரியங்களைச் செய்யும் வழி. பாருங்கள்?
எங்களுடன் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள், மேலும் : 63-0724 அன்று பிரசங்கித்த செய்தி, தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை, இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில் கேட்க எங்களுடன் இனையுங்கள். இது தேவனின் குரல் பேசி மேலும் : இது இன்று நான் வழங்கிய வழி, என்று நமக்குச் கூறுகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்கவேன்டிய வேத வசனங்கள்:
ஏசாயா – 38:1-5
1.அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2. அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
3. ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
4. அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
5. நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
ஆமோஸ்
1 அதிகாரம்
1. தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.
2. கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.
3. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.
4. ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்.
5. நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
7. காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.
8. நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9. மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே.
10. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11. மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.
12. தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
14. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.
15. அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அன்புள்ள வெளியேறும் மணவாட்டியே,
அந்த எபிரேயக் பிள்ளைகள் அதிகாலையில் இரவோடு இரவாக தங்களுக்கு வழங்கப்பட்ட மன்னாவைப் பெற்று, வரும் நாள் முழுவதும் அவர்களைத் தக்கவைத்துக்கொண்டனர், அவர்கள் கூடிவருவது போல, நம் பயணத்திற்குத் துணையாக நமக்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய மன்னாவுக்காக நாமும் கூடிவருகிறோம்.
மணவாளனின் வெளிப்பாடு மணவாட்டிகளுக்கு வெளிப்படும் வரை, மணவாட்டி தேவனுடன் அத்தகைய இணக்கத்துடன் ஒன்றுபட்டுள்ளனர். பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பிடித்துக் கொண்டு அவருடன் ஒன்றாகிவிட்டோம்.
நாடுகளின் அக்கிரமம் அதிகமாகிவிட்டது. அவள் அசுத்தமானவள். வாக்குத்தத்த தேசத்திற்கு, நம் வீட்டிற்குச் செல்ல, நாம் வெளியேறுவதற்கான நேரம் இது. மணவாட்டி தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
அவர் தம்முடைய முதல் யாத்திரையிலும், இரண்டாவது யாத்திரையிலும், இப்போது மூன்றாவது யாத்திரையிலும் செய்தது போல், மக்கள் தவறாக நினைக்காதிருக்கவும், அதை அறிந்து கொள்வதற்காகவும், மேலும் தனது மணவாட்டியை வழிநடத்தத் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அறிந்துக்கொள்வதற்கும் ,அக்கினித் ஸ்தம்பத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளம் கொண்ட ஒரு தீர்க்கதரிசியை தேவன் நமக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்..
அவருடைய தீர்க்கதரிசி கூறினது கர்த்தர் உரைக்கிறதாவதாக இருக்கிறது. அது தேவன், அக்னி ஸ்தம்பத்தில் இறங்கி, அவருடைய வார்த்தையை நிரூபித்து வெளிப்படுத்தினார். அந்த அக்னி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியை அபிஷேகம் செய்து, அவருடைய மணவாட்டியை வாக்குத்தத்த தேசத்திற்கு வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்க பரலோக சாட்சியாக நின்றார்.
அனைத்து சபைகளும் இந்த குரலின் கீழ் ஒன்றாக கூட்டுறவு கொள்ள வேண்டும், பிரிந்திருக்ககூடாது என்று நாம் நம்புகிறோம். எது நம்மை பிரிக்கிறது? இது நம் தோலின் நிறங்கள் அல்ல. இது நாம் உண்ணும் உணவு அல்ல. ஒவ்வொரு மனிதனும் நற்செய்தியின் போதனையின் வெற்றிப் பாதையிலிருந்து வெளியேறியவன் மனிதன்.
எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காட்ட ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. நீங்கள் அதை செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த விளக்கத்தையும் கொடுக்காமல், அதைப் படித்து அதைக் கேளுங்கள், மேலும் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள்.
ஆனால் அவர் கூறினார் , அவர்கள் பொறாமையால் அதை செய்யவில்லை, ஆவிக்குறிய குருட்டுத்தன்மையால் அதை செய்தார்கள் என்றார். அவர்கள் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள்.
அந்த பரலோகத்தின் தேவன் எழும்புவார், மேலும் என் குரல் தேவனின் மகத்தான காலத்தின் காந்த ஒளிநாடாவில் இருக்கும், மேலும் அது கடைசி நாளில் இந்தத் தலைமுறையைக் கண்டிக்கும். காரணம், அது-இது காந்த ஒளிநாடாவில் உள்ளது, பின்னர் அது நித்திய ஒளிநாடாவில் இருக்கும்.
இது தேவன் , மனித மாம்சத்தில், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பிரத்தியட்ச்சமானார் , அவர் தன்னைப் பிரதிபலிக்கும் ஒரு ஜீவியத்தைப் பரிசுத்தப்படுத்துகிறார், இன்று அதே வார்த்தையை அவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.
மேலும் பின்னர் டேப் மூலம் கேட்பவர்கள், அவர்கள் நெருக்கமாகக் கேட்கட்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த முயற்சிப்பதை நம்மால் பிடிக்க முடியும்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு எதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொண்டோம், மேலும் நாம் அனைவரும் வாக்குத்தத்த தேசத்திற்குச் செல்வோம். நாம் ஒவ்வொருவரும்! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஒரு வயதான பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு இளைஞராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு முதியவராக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நாம் போகிறோம். நம்மில் ஒருவரும் விட்டுப்பட போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் போகிறோம்!!!
நாம் தேவனுக்குச் சொன்ன வார்த்தையைக் கடைப்பிடித்தால், தேவன் அவருடைய வார்த்தையை நமக்குக் கடைப்பிடிக்காமல் இருப்பது முற்றிலும் சாத்தியமற்றது. நீங்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், அதை நீங்கள் சந்தேகிக்க எதுவும் இல்லை. நேரம், இடம், வேறு எதுவும் உங்களை சந்தேகிக்க வைக்க முடியாது.
அவர் நம்மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார், தப்பிப்பதற்கான வழியை வழங்குவதன் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய நம்மை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் நம்மை வெளியே கொண்டு வருவதில் மட்டும் அக்கறை காட்டவில்லை, நம் பயணத்தின் போது நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் வழங்கியுள்ளார். அவர் நமக்காக எல்லா எதிரிகளையும் வென்றார். நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அவர் நம்மைக் குணப்படுத்துகிறார். அவர் மறைந்திருந்த மன்னாவை நமக்கு தினமும் உணவளிக்கச் சேமித்து வைத்தார்; அவர் மரணத்தை கூட வென்றார், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் அதை விசுவாசிக்க வேண்டும்.
நாம் நித்திய ஜீவனுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அதைக் கேட்கிறோம், மேலும் அதைக்கொண்டு மகிழ்ச்சியடைகிறோம். இதுவே உங்கள் ஆறுதல். நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் இது. அது அந்த முத்துவுக்குகாகதான் நாம் அனைத்தையும் துறந்தோம். நமக்கு இது வேண்டும், ஏனென்றால் இது தேவனின் அன்பான பராமறிப்பு என்பதை நாம் அறிவோம்.
உங்களுக்கு ஆவிக்குறிய ரீதியில், உடல்ரீதியாக, அல்லது ஒரு நெருக்கமான நடை, அல்லது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அல்லது மீண்டும் நிரப்பப்பட வேண்டுமா? தேவனுடைய வார்த்தையைச் சுற்றி எங்களுடன் ஒன்றிணைந்து, இன்றைக்கு வழிவகுத்து, நீங்கள் அக்கறை கொண்டால், உங்களுக்குத் தேவையானதை பெறுங்கள். அவர் அதை அனுப்புவதாக உறுதியளித்தார், அவர் அதைச் செய்தார்! அவர் அதை அவருடைய வார்த்தையில் உறுதியளித்தார், இதோ! அவர் அக்கறைக் கொள்கிறார், இப்போது உங்களைப்பற்றி என்ன?
உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று கூறிக்கொண்டே இருக்கும், “என் கஷ்டங்கள் முடிந்துவிட்டன. நான் நன்றாக இருக்கப் போகிறேன். நான் நிரம்பப் போகிறேன். நான் அவருக்கு நெருக்கமாக இருக்கப் போகிறேன். நான் அவருடைய மணவாட்டி .”
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு எங்களுடன் இனையுங்கள், ஜெபர்சன்வில்லி நேரப்படி, நாங்கள் கேட்பது போல்: 63-0721 அன்று பிரசங்கித்த : அவர் அக்கறை கொள்கிறார். நீ அக்கறைகொள்கிறாயா? என்ற செய்தியைக் கேட்போம்.
பகலாகிலும் அல்லது நிலவாகிலும் அவர் உங்களுக்காக அக்கறை காட்டுகிறார், அவர் உங்களுக்காக அக்கறை காட்டுகிறார் என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கும்போது இது ஒரு பெரிய பெரிய அன்பு விருந்தாக இருக்கும்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
பரிசுத்த யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4
அன்புள்ள ஐக்கியமுள்ள வார்த்தை பேசும் மணவாட்டியே,
இதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என் நண்பர்களே! முன்னெப்போதும் இல்லாத வகையில் வார்த்தை நம் கண்முன்னே நிறைவேறுவதைக் காண்கிறோம். அவர் யார், அவர் அனுப்பிய தூதர் யார் என்பதை அடையாளம் கண்டு, பிறகு நாம் யார் என்பதை அறிவது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! நன்றி தகப்பனே. இந்த நிகழ்வுகள் இப்படி நடக்கும் என்று நாம் நினைக்கவே இல்லை, ஆனால் உங்கள் தீர்க்கதரிசி டேப்பில் சொன்னது போலவே இங்கே நம் கண் முன்னே நடக்கிறது.
இந்த ஈஸ்டர் வார இறுதியில் முன்னெப்போதையும் விட அவருடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை அவரிடம் நெருங்கி வருவதைக் காண நான் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள அவரது மணவாட்டிகளுடன் சேர்ந்து இந்தச் செய்தியைச் சுற்றி எங்களுடன் கூட்டுறவு கொள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நான் அழைக்க விரும்புகிறேன்.
பிறகு, எந்த ஒரு சிறிய விஷயம் வந்தாலும், நீங்கள் ஏன் குழந்தையைப் போல நடந்து கொள்கிறீர்கள்? நீ ஒரு மனிதனாக இருக்க வேண்டும். மக்களிடம் பேசு, ஆமென், பின்னர் முன்னேறி செல்! ஆமென். அங்குதான் நீ நிற்கிறாய். “ஏன் அழுகிறாய். பேசு!” ஆமென். ஓ, எனக்கு அது பிடிக்கும். “என்னிடம் ஏன் அழுகிறாய்? மக்களிடம் பேசி உன் இலக்கை நோக்கி செல்லு. அது எதுவாக இருந்தாலும் சரி, அது நோயாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கோ, எதுவாக இருந்தாலும் சரி, பேசு! நான் நிரூபித்து விட்டேன். மக்களிடம் பேசுங்கள்.”
நம்முடைய விசுவாசத்தைத் தூண்டுவதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பு இருக்கிறது, அதனால் நாமும் வார்த்தையைப் பேசலாம். ஈஸ்டர் வார இறுதியில் மணவாட்டிகளுடன் கூடி வாருங்கள், நாம் இறுதி வெளியேற்றத்திற்கு தயாராகி வருகிறோம். நம் ஜீவியம் சுவிசேஷத்திற்கு தகுதியானதாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த தலைமுறை குற்றச்சாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அவரது மணவாட்டி அழுவதற்கு இப்போது எந்த காரணமும் இல்லை, ஆனால் பேசுங்கள்! உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உன்டாவதாக!
ஈஸ்டர் வார இறுதியில் நாம் வழக்கமாகச் செய்வது போல, படங்களை எடுப்பது, அன்றைய மேற்கோள்களைக் கேட்பது மற்றும் லைஃப்லைன் செயலியில் அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய டேப்களை இயக்குவதைத் தவிர, நம் ஃபோன்களை அணைப்பதன் மூலம் நம்மால் இயன்றவரை உலகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். இந்த பரிசுத்த வார இறுதியை முழுவதுமாக தேவனுக்கு கொடுப்போம், இந்த ஈஸ்டர் பண்டிகையை ஒரு சமூக விஷயமாக மாற்றாமல், நம் வீடுகளில் வார்த்தைக்கு அர்ப்பணிப்போம். அந்த கிழக்கு பகல் நேரத்தில் (EDT) பின்வரும் அட்டவணையில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வியாழன் கிழமை இரவு இஸ்ரவேல் புத்திரர் வெளியேறுவதற்கு முன், கர்த்தராகிய இயேசு தம் சீடர்களுடன் பஸ்காவை நினைவுகூரும் வகையில் கடைசி இராப்போஜனத்தை நடத்தினார். நம்முடைய பரிசுத்த வார இறுதிக்கு முன், நமது இல்லங்களில் தேவனுடன் உரையாடி, நம்மையும் நம் குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும்படியும், நமது பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்பதற்கு என்ன ஒரு வாய்ப்பு.
பரலோகப் பிதாவே, நித்தியத்தின் இந்தப் பக்கம், ஒன்றாகக் கூடியிருக்கும் மற்றொரு முறை க்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்குத் தைரியம் தருவதற்காக, உங்களிடமிருந்து வரும் வலிமையைப் புதுப்பித்து, எபிரேயக் பிள்ளைகள் விடியற்காலை காத்திருந்ததுப்போல நாங்களும் ஒன்றுககூடி இன்று காலை காத்திருக்கிறோம், அவர்களுக்கு இரவெல்லாம் வழங்கப்பட்ட மன்னாவைப் பெறவும், வரும் நாள் முழுவதும் அவர்களைத் தக்கவைத்துக்கொண்டனர். நாங்களும் ஒன்றுகூடி பயணத்திற்கு பலம் கொடுக்க இன்று காலை ஆவிக்குறிய மன்னாவுக்காக கூடியிருக்கிறோம்.
நாம் அனைவரும் மாலை 6:00 மணிக்கு ஆரம்பிப்போம். உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில், நாம் இறுதி யாத்திராகமத்தில் இருக்கிறோம் என்று அவர் நம்மிடம் கூறுவதைக் கேளுங்கள்.
நாம் அவருடைய சிம்மாசனத்தைச் சுற்றி நாம் கூடுகையில் 63-0630M அன்று பிரசங்கித்த செய்தி : மூன்றாவது யாத்திராகமம் ,கேட்போம்.
செய்தியைத் தொடர்ந்து, நாம் நம் குடும்பங்களுடன் நம் வீடுகளில் கூடி, கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசாரிப்போம்.
டேப் மற்றும் கம்யூனியன் சேவை இரண்டையும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை விரைவில் நாம் பெறுவோம் அல்லது லைஃப்லைன் பயன்பாட்டில் தி வாய்ஸ் ரேடியோவில் திட்டமிடப்பட்ட சேவை நேரத்தில் கிடைக்கும்.
இந்த விசேஷ வாரயிறுதியில், காலை 9:00 க்கு நம் குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மீண்டும் மதியம் 12:00 மணிக்கு, இந்தச் சிறப்புமிக்க வாரயிறுதியில் நம்மோடும் அவருடைய மணவாட்டிகளோடும் இருக்கும்படி தேவனை அழைப்போம்; அவரை ஆராதிப்பதற்காக நம்மை அர்ப்பணிக்கும்போது அவருடைய பரிசுத்த ஆவியால் நம் வீடுகளை நிரப்பட்டும்.
நம் மனம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரியில் அந்த நாளுக்குத் திரும்பிச் சென்று, நம் இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, பிதாவுக்குப் பிரியமானதை எப்பொழுதும் செய்ய நாமும் அர்ப்பணிப்போம்.
இப்போது பாருங்கள். அவர் உலகத்திற்கு வந்தபோது, உலகில் எப்போதும் இருந்ததைப் போலவே, இன்னும் அதிகமான அவிசுவாசம் இருந்தது, அது அவரை மந்தமாக்கவில்லை. அவர் எப்போதும்போல பிரசங்கித்தார், அந்த அதே குணப்படுத்துதலை செய்தார். அது அவரை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை. விமர்சகர்கள் இருந்தனர்.அந்த மனிதன் குழந்தையாக இருந்த காலத்திலிருந்து சிலுவையில் இறக்கும் வரை விமர்சிக்கப்பட்டார். அது அவரை தடுத்து நிறுத்தியதா? இல்லை ஐயா. அவருடைய இலக்கு என்ன? “எப்போதும் பிதா எழுதியதைச் செய்யுங்கள். எப்போதும் அவருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள்.”
பின்னர் மதியம் 12:30 இந்தச் செய்தியைக் கேட்க அவருடைய சிம்மாசனத்தைச் சுற்றி நாம் கூடும்போது, நம் வாழ்வில் ஒரு மிக முக்கியமான கேள்வியைப் பற்றி ஆர்வத்துடன் சிந்திப்போம்: 63-0630E.
அன்று பிரசங்கித்த ,உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா? என்ற செய்தியைக் கேட்போம்.
பிறகு, மாலை 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் கூடுவோம். நமது ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக.
நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும், மதியம் 12:00 மணிக்கும் ஜெபத்தில் ஒன்றுபடுவோம், மேலும் அவர் நம் நடுவில் நமக்காகச் செய்யும் பெரிய காரியங்களுக்காக நம் இருதயங்களைத் ஆயத்யப்படுத்துவோம்.
“எனது மதகுருமார்கள் நண்பர்களுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டைக் கொண்டுவந்த பிறகு, இந்த கடினமான விஷயங்களைச் சொல்ல வேண்டும், ஆனால், ஆண்டவரே, நான் அதை உமது தூண்டுதலால் செய்தேன். நீங்கள் அதைச் செய்யச் சொன்னதாக உணர்கிறேன். இப்போது அது என் தோள்களில் இருந்து வருகிறது, ஆண்டவரே. நான் – அது முடக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் தகப்பனே. தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஆண்டவரே, நீங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீதிமான்களின் மறுமலர்ச்சி வெளிப்படட்டும், மேலும் சபைகளுக்கு செல்வதற்கு சற்று முன்பு ஒரு பெரிய சக்தி வரட்டும். நான்…அதை ஜெபிப்பது கடினம் அல்ல, ஏனென்றால் நீங்கள் அதை வாக்களித்தீர்கள். மேலும், ஆண்டவரே, நம் மத்தியில் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்யும் என்று எங்களுக்குத் தெரிந்த அந்த மூன்றாவது இழுப்பை நாங்கள் தேடுகிறோம்.”
பின்னர் 12:30 P.M., நாம் அனைவரும் ஒன்றுகூடி இந்த வார்த்தையைக் கேட்போம்: 63-0707M அன்று பிரசங்கித்த “குற்றச்சாட்டு “என்ற செய்தியைக் கேட்போம், உலகம் முழுவதும் உள்ள அவரது மணவாட்டிகளுக்கு இது என்ன ஒரு சிவப்பு கடித நாளாக இருக்கப்போகிறது.
பிறகு, மாலை 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் ஒன்று சேருவோம். நமது ஆண்டவரின் சிலுவையில் அறையப்பட்டதன்
நினைவாக.
இனிமேல் அழுவதற்கு ஒன்றும் இல்லை என்ன ஒரு சிறந்த நாள், ஆனால் பேசுங்கள்! என்ன ஒரு உயிர்த்தெழுதல் காலை! சகோதரர் பிரன்ஹாம் காலை 5:00 மணியளவில் அவரது சிறிய நண்பரான ராபின் அவரை எழுப்பியது போல் அதிகாலையில் எழுந்திருப்போம்.. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம்:
“இன்று காலை ஐந்து மணியளவில், சிவப்பு மார்பகத்துடன் என் சிறிய நண்பர் ஜன்னல் வழியாக பறந்து என்னை எழுப்பினார். அதன் சிறிய இருதயம் வெடிப்பது போல் தோன்றியது.”அவர் உயிர்த்தெழுந்தார்” என்று கூறினபோது,”
காலை 9.00 மணி. நமது ஜெப சங்கிலியில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்து இணைவோம், ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனின் குரலைக் கேட்க நம்மைத் தயார்படுத்துவோம். மதியம் 12:30 மணிக்கு நம் ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்: 63-0714M அன்று பிரசங்கித்த ஏன் அழுகிறாய்? பேசு! செய்தியைக்கேட்போம்.
இந்த ஆராதனைக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றிணைவோம், உலகெங்கிலும் அவருடன் மற்றும் அவரது மணவாட்டிகளுடன் அவர் நமக்கு வழங்கிய அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்.
வெளிநாட்டில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும், இந்த அட்டவணையில் உள்ள அனைத்து பிரார்த்தனை நேரங்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை ஒலிபரப்பப்பட்ட டேப்புக்கும் எங்களுடன் ஒன்றுபட உங்களை அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை மதியம் ஜெபர்சன்வில் நேரத்தில் டேப்களை கேட்ப்பது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அந்த செய்திகளை இயக்கவும். எவ்வாறாயினும், நாம் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரப்படி ஒன்றுசேர்ந்து நமது ஞாயிறு செய்தியை ஒன்றாகக் கேட்க விரும்புகிறேன்.
கிரியேஷன்ஸ் ஒர்க்ஷீட்கள் மற்றும் டுடோரியல்கள் மற்றும் YF வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்க உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அழைக்க விரும்புகிறேன், உங்கள் முழு குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியடைய முடியும். இந்த வார இறுதியில் நாங்கள் கேட்கப்போகும் வார்த்தையின் அடிப்படையில் இவை அனைத்தும் அமைந்திருப்பதால் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம்.
வார இறுதி அட்டவணையில், கூட்டுச் சேவைக்குத் தயாராகும் தகவல், கிரியேஷன்ஸ் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் பொருட்கள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் உலகெங்கிலும் உள்ள மணவாட்டியுடன் ஆராதனை, துதி மற்றும் சுகமலித்துதல் நிறைந்த வார இறுதிக்கு வருமாறு அழைப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது உங்கள் ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் ஒரு வார இறுதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சகோதரர் ஜோசப் பிரான்ஹாம்