வகை காப்புகள்: Uncategorized

21-0919 கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

செய்தி: 65-0725M கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியே,

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், இயேசு கூறினார் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக,
ஏனென்றால் அவர்கள் அந்த வார்த்தையாக இருக்கிறார்கள். அவர்கள் வேறு ஒன்றுமாக இருக்க முடியாது. அவர்கள் வேறு எதையும் கேட்க முடியாது. அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.

இந்த வார்த்தைகளை பேசுவதற்காக தேவன், இந்த உலகின் அஸ்திவாரம்
முன்பே தனது தீர்க்கதரிசியை தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவதை விட ஜூவியத்தில் பெரிது எதுவுமில்லை. பின்னர், அவர் தனது குரலைப் பதிவு செய்ய அனுமதித்தார், எனவே அவரின் முன்
அறிந்த மணவாட்டி,  அவரின்  அந்த பதிவுசெய்த மற்றும் சேமித்து வைத்துக் குரலைக் கேட்கலாம், ஏனென்றால் நமக்கு இவை
தெரிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்:

•  நாம் தான் வார்த்தை.
•  நம்மை ஏமாற்ற முடியாது.
•  நாம் வேறு ஒன்றுமாக இருக்க   முடியாது .
•  நாம் வேறு எதையும் கேட்க முடியாது.
• நமக்கு வேறு எதுவும் தெரியாது.



வரலாற்றில் வேறு எந்த நாளிளும் இல்லாத அளவுக்கு இன்று நமக்கு ஊக்கம் தேவை என்று அவருக்குத் தெரியும். முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்கள் தீவிரமடைகிறது. அவரது மணவாட்டி சோதனைக்கு உட்படுத்தப்படுவாள். ஆனால் அவர் தனது மணவாட்டிக்கு
அவர்கள் யார் என்பதை நினைவூட்ட முடிந்தால், அவருடைய பரிபூரண விருப்பத்தில் அவர்கள் அவருடைய அன்பானவர்கள் என்பதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடையலாம்.


சாத்தான் நம்மீது எதை வீசினாலும், நாம் எதைச் சந்தித்தாக வேண்டுமானாலும், இப்போது நமக்குத் தெரியும், அவர் ஒரு மணவாட்டியைத் தேர்ந்தெடுக்கிறார், நாம்தான் அந்த மணவாட்டி. வார்த்தையின் வெளிப்பாட்டைப் பற்றி நாம் வெட்கப்படவில்லை. தேவனின் விருப்பமில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய நாம் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரை, இது நமக்கு ஒரு சரியான நேரத்தில் ஆவிக்குறிய உணவு. இறுதி நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இருப்பதை நாம் அறிந்துக்கொள்வோம், ஆனால் நாம் வார்த்தையுடன் இருப்போம்.


இதே உத்தரவாதத்தை நீங்கள் விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்திற்கு எங்களுடன் வந்து : 65-0725M கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள், செய்தியைக் கேட்க இனையுங்கள்


சகோ. ஜோசப் பிரன்ஹாம்


பரிசுத்த மத்தேயு 5: 44-45 / 7:21 / 24: 15-28
பரிசுத்த  லூக்கா 17:30 / 18: 1-8
பரிசுத்த யோவான் 14:12
எபேசியர் 1: 5
II தீமோத்தேயு 3: 1-8
எபிரெயர் 6: 1-8 / 11: 4
வெளிப்பாடு 10: 1-7 / 16: 13-14
மல்க்கியா 4: 5
I இராஜாக்கள் 22: 1-28
எரேமியா: அத்திகாரம் 27 & 28

21-0912 ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்

செய்தி: 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்

BranhamTabernacle.org

21-0905 தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்

செய்தி: 65-0718M தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள தேவனின் குரல் சபையே,

நாம் அவருடைய,  தேவனின் குரல்  சபை, அவருடைய அன்பான வார்த்தை மணவாட்டி, இந்த ஞாயிற்றுக்கிழமை பிதாவானவர்
என்ன பேசுவார் மற்றும் வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் காத்திருக்க முடியாது.


நம் விரல் நுனியில் உயிருள்ள தேவனின்  குரல் இருக்கிறது. நம் விரலின் ஒரு தொடுதலால் தேவன் மனித உதடுகளால் பேசுவதை நாம் கேட்கலாம், நித்திய ஜீவனின் வார்த்தைகள். ஒரு விரலால் அவர் நம்முடன் பேசுகிறார் மற்றும் உலகின் அஸ்திவாரத்திலிருந்து மறைக்கப்பட்ட அனைத்து மர்மங்களையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.


நம் இருதயத்தில் உள்ள எந்த கேள்விக்கும் ஒரு விரலால் அவர் பதிலளிக்கிறார். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எதையும் அவர் ஒரு விரலால் சொல்கிறார். ஒரு விரலால் தேவனின் குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கலாம் மேலும்   எடுத்துக்கொள்ளப்படுதளின் விசுவாசத்தை நமக்கு கொடுக்கிறது. ஒரு விரலால் தேவன் பேசுவதை நாம் கேட்கலாம் மேலும் நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்று கூறுகிறது.

நாம்  தேவனின் மணவாட்டி அல்ல நீங்கள் ஒரு தோல்விதான் என்று எதிரி கூறும்போது, ​​, ஒரு விரலால் நாம் ஒளிநாடாவை இயக்கி, பிதா நம்மிடம் பேசுவதையும், நமக்கு உறுதியளிப்பதையும் கேட்க முடியும், “நீங்கள் என் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி.  உலக அஸ்திவாரத்திற்கு முன்பே நான் உங்களை முன்னறிந்தேன். என்கிறது.


நாம் ஆவியில் குறைவாக இருக்கும்போது, ​​எதிரி ஒவ்வொரு கோணத்திலும் நம்மைத் தாக்கும்போது, ​​நம் ஒரு விரலால் அவர் நம்முடன் பேசுவதைக் கேட்கலாம் மற்றும் வெறுமனே, “காலை வணக்கம் நண்பர்களே” என்று சொல்லும்போது, பரிசுத்த ஆவியின் அமைதி அறையை நிரப்புகிறது.


நீங்கள் ஒரு மனிதனைப் பின்தொடர்ந்து, அவருக்கு அதிக இடம் கொடுக்கிறீர்கள் என்று எதிரிகளின் கூற்றை நாம் கேட்கும்போது , ஒரு விரலால் தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்கிறோம்:



அவர் என்னிடம் கூறினார் ,நான் மக்கள் என்னை நம்பும்படி செய்தால் .அப்படி கூறுவது எனக்கு வினோதமாக இருக்கிறது .”நீங்கள் என் மேல் விசுவாசம் வைக்கிறீர்களா?”  “நீங்கள் தேவனை அல்லவா விசுவாசசிக்க வேண்டும்?” நீங்கள் அதை விவாசிக்க வேண்டும். நீங்கள் தேவனை விவாசிக்க வேண்டும் மேலும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் விசுவாசித்தப் பிறகு, நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.



எதிரி நம்மிடம்  ​​”இது வேதம் அல்ல, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக வந்து ஒளிநாடாக்களைக் கேட்பது தவறு,” என்று கூற முயற்சிக்கும்போது, ஒரு விரலால் தேவனின் குரல் நமக்கு சொல்வதைக் கேட்கிறோம்:



மேலும்  இந்த  சபையும், இந்த ஒளிநாடாவும், ஒளிநாடாவிலிருக்கும் மக்களும், நாட்டின் பிற பகுதிகளில்  இணைந்திருக்கும்  மக்களும்,
நீங்கள் இதை  கூர்ந்து கேட்க வேண்டும், நீங்கள் தவிர்க்க வேண்டாம்.


எதிரி சொல்கிறான், சகோதரர் பிரான்ஹாம்  கூறினார் வார்த்தையுடன் இருங்கள், ஒளிநாடாக்களுடன் அல்ல என்று , அப்போது ஒரு விரலால் தேவனின் குரல் கூச்சலிடுவதைக் நாம் கேட்க்கிறோம் மேலும் கூறுகிறது:



அதனால் நான் கூறுகிறேன் , இயேசு கிறிஸ்துவின் பெயரால்  நீங்கள் ஒரு வார்த்தையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்காதீர்கள், அந்த ஒளிநாடாக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைச் சொல்லுங்கள், ஆண்டவராகிய  தேவன் உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும் என்று  கட்டளையிட்டாரோ அதை செய்யுங்கள்; அதனுடன் எதையும்  சேர்க்க வேண்டாம்! அந்த குரல் நாம் எப்படி வார்த்தையை வைத்து  சரிபார்க்கலாம் என்று சொல்கிறது அதனால் நாம் தவறு செய்யாமல் இருக்கமுடியாம்.



அதோ உங்கள் ஐந்து கட்டாயங்கள்  உள்ளது. அது அப்படியாக இருக்க வேண்டும்.




அவரது நேரம்.
அவரது காலம்.
அவர் தேர்ந்தெடுத்த மனிதன்.
அது தீர்க்கதரிசிக்கு வர வேண்டும். தீர்க்கதரிசி ஒரு நிருபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.


நமது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து.
இந்த நேரத்தின் நிரூபிக்கப்பட்ட வார்த்தை! மோசேயின் நாட்களின் நிருபிக்கப்பட்ட வார்த்தை இயேசு. ஏசாயா, எலியா, யோவான் ஆகியோரின் நாட்களில் நிருபிக்கப்பட்ட வார்த்தை இயேசு. மேலும் இன்று அந்த நிரூபிக்கப்பட்ட வார்த்தை இயேசு, அந்த நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவர்.


ஒரு விரலால் நாம் ஒளிநாடாவை இயக்கி இயேசுகிறிஸ்து தாமே பேசுவதையும் நமக்கு வெளிப்படுத்துவதையும் கேட்கலாம்:


இதுவே அந்த நேரம்,
இதுவே அந்த காலம்,
இவர்தான் நான் தேர்ந்தெடுத்த மனிதன்,
இவரே என் தீர்க்கதரிசி,
இந்த தீர்க்கதரிசி என் மற்ற தீர்க்கதரிசிகளை விட அதிகமாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.



இன்று, பரலோகத்தின் தேவன் நம்மிடம் பேசுவது மட்டுமல்லாமல், அவர் நம்முல் இருக்கிறார், நம்முல் வாசம் செய்கிறார்,  மேலும் நம் ஊடாக அவருடைய ஜீவியத்தை ஜீவிக்கிறார். இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.


நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வோம். நேரம் நெருங்கிவிட்டது. வேதம் தினமும் நிறைவேறப்படுவதை நாம் காண்கிறோம். இந்த செய்தி இன்றைய செய்திகளைப்போல  வாசிக்கப்படுகிறது :

“காலத்தின் குழப்பம், தேசங்களுக்கிடையேயான துன்பம், பல்வேறு இடங்களில் நிலநடுக்கம், கடல் உறும்புகிறது, பயத்தால் மனிதனின் இருதயம் செயல் இழக்கிறது.”


இயற்கை கூட இன்று நமக்கு சொல்கிறது, தேசங்கள் உடைந்து, பூமி மூழ்கி, கையெழுத்து சுவரில் உள்ளது.

மணவாட்டி மற்றும் அவள் இருக்கும் நிலையை நாங்கள் பார்க்கிறோம். மேலும் இயற்கையாகவே, சபைகள் வெளியேறத் தயாராகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.


மகிமை, நாங்கள் கிளம்பத் தயாராகி வருகிறோம். ஒரே ஒரு விரலால் நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்து வருமாறு நான் உங்களை அழைக்கிறேன்: தேவ சித்தமாக இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் 65-0718M. கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்.

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

உபாகமம் 4: 1-4 / 4: 25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரிசுத்த மார்க் 7: 7
ஜோயல் 2:28
ஆமோஸ் 3: 7
மலாக்கி 3
பரிசுத்த மத்தேயு 11: 1-15
1 கொரிந்தியர் 13: 1

21-0829 வெட்கப்படுதல்

செய்தி: 65-0711 வெட்கப்படுதல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள பிரன்ஹாம் கூடாரமே,

நம் குடும்பங்களை சரியான சபையில் சேர்க்க அவர் முன்னரிந்ததால் நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
நான் ஒரு சபையைத் தேர்ந்தெடுத்தால், நான் எனது குடும்பத்தை சேர்க்க ஒரு உண்மையான, அடிப்படையான, முழு நற்செய்தி, வேதாகமம் சபையைத் தேர்வு செய்வேன்.


( சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
எங்கள் மேய்ப்பர் யார் என்பதை உலகுக்குச் சொல்வதற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் நாமும் அவரைப் போலவே செயல்படுகிறோம்.

(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

அந்த சபையின் நடத்தையை நீங்கள் கவனித்தால், நீங்கள் மேய்ப்பரை சிறிது நேரம் பார்த்தால், சபை மேய்ப்பரை போல் செயல்படுவதை நீங்கள் வழக்கமாக காணலாம்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் உலகில் நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, அவர் நம்மை சந்திக்கிறார்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

உண்மையிலேயே, இரண்டு அல்லது மூன்று பேர் கூடும் இடங்களில் சந்திப்பதாக அவர் வாக்களித்தார். . அங்குதான் உண்மையான விசுவாசி தனது நம்பிக்கையில் இளைபாருகிறார், தேவனின் வார்த்தையில் அந்த  நிரூபிக்கப்பட்ட
உண்மையின் மேல்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

அவருடைய தீர்க்கதரிசியையும்  ஒவ்வொரு உரைக்கப்பட்ட  வார்த்தையையும் நாம் நம்புகிறோம் அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

நான் தேவனின் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசித்தால், நான் உங்களுக்குச் கூறுவதைக் கேளுங்கள்.

(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
அவருடைய தீர்க்கதரிசி என்ன பிரசங்கிக்க வேண்டும்?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
சரியான செய்தி, மீண்டும் வார்த்தைக்கு,


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
அவர் எதற்காக அனுப்பப்பட்டார்?



(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
“அந்த மணவாட்டியைப் பெறுவதற்காக!” அது ஒரு கடமை. அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன், மணவாட்டியை அழைப்பது.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
நாம் அந்த இடத்திலிருந்து வெளியேறினால் என்ன செய்வது?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
அதைத்தான் நான் செய்ய வேண்டியிருந்தது, அந்த மணவாண்டியை அந்த இடத்தில்
வைக்க வேண்டும்.


( சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
இப்போது பிதா தனது மணவாட்டிக்கு
என்ன சேமித்து வைத்திருக்கிறார்?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
நான் வீடு திரும்புகிறேன், என் சபதத்தை மீண்டும் புதுப்பித்து, புதிதாக தொடங்குகிறேன். அதனால் நாங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம், அதற்காக நான் இங்கே இருக்கிறேன்.



(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
தேவனுக்கு ஸ்தோத்திரம்,
நாம் எப்போது புதுப்பிக்கும் ஆராதனையை ஆரம்பிப்போம்?






(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

பின்னர், தேவனுக்கு
சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் ஆரதைனயை ஆரம்பிக்கிறோம். நீங்கள் அனைவரும் எனக்கு உதவுங்கள், நாம் பிரார்த்தனை செய்வோம், ஏனென்றால் முயற்சி செய்ய வேண்டும் என்று என் இருதயத்தில் இருந்தது … அவர்கள் சொன்னார்கள், “சரி, நாம் லூயிஸ்வில்லுக்கு செல்லலாம் அல்லது நாம் நியூ அல்பானியில் செல்லலாம்.” ஆனால் கூட்டம் ஜெபர்சன்வில்லில் இருக்க வேண்டும். நான் வெவ்வேறு நேரங்களில் லூயிஸ்வில்லி மற்றும் நியூ அல்பானிக்குச் செல்வேன், ஆனால் இது இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்க வேண்டும்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

நாங்கள் தயாராக இருக்கிறோம் தகப்பனே. இந்த நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று .உங்கள் கழுகுகள் கூடி கேட்கிறது ?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
“… எனக்கு அதிக விசுவாசம் தேவை.” அதற்குதான் இப்போது நான் வீட்டில் இருக்கிறேன் – ஒரு புதிய நம்பிக்கையின் வெடிப்புக்காக.




(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம் தகப்பனே, விசுவாசத்தின் புதிய வெடிப்பு. நாங்கள் அறிவோம் விசுவாசம் கேட்பதினால் வரும், உங்கள் வார்த்தையைக் கேட்பது, மேலும் உங்கள் வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறது.


இந்த செய்தி, சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை, உலகம் முழுவதும் பரவியது, ஆனால் இப்போது பிரிவு நேரம் நடைபெறுகிறது. தேவன் மணவாட்டியை  அழைக்கிறார், பிசாசு சபையை அழைக்கிறது. நாம் இந்த செய்தி, அவருடைய வார்த்தை, அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்!


நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது நமக்குத் உருதியாகத் தெரியும். இந்த செய்தியையும் அவருடைய தூதரையும் விசுவாசிப்பதில் நாம் வெட்கப்படவில்லை, ஏனென்றால் அவை ஒன்றே. “நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்” என்று சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை. “நாம் நம் சபையில் ஒலிநாடாக்களை இயக்குகிறோம்” என்று சொல்ல நாம் வெட்கப்படவில்லை. “நாம் ஒலிநாடா மக்கள்” என்று சொல்ல நாம்
வெட்கப்படவில்லை.


இந்த செய்தியை நம்புவதாகக் கூறும் எந்த விசுவாசியோ அல்லது ஐந்து கட்ட ஊழியரோ, சகோதரர் பிரன்ஹாம் தேவனின் தீர்க்கதரிசி மற்றும் தூதர் என்று கூறி
பிறகு அதை விசுவாசித்து
தேவனின் நிரூபிக்கப்பட்ட குரலை சபைகளில் இயக்குவது தவறு என்று மக்களிடம் கூறுகிறார்கள்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்திரன் உள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

உண்மையான, கலப்படமில்லாத தேவனின் வார்த்தைக்கு வரும்போது, அது தேவனால் உறுதிப்படுத்தப்பட்டது, தேவனின் நியாயமான குரல், இது மற்ற குழுவை கூட சங்கடப்படுத்துவதாக தெரிகிறது. அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள் மற்றும் ஒளிநாடா சபையாக இருப்பது வார்த்தை எதிர்ப்பு என்று நம்புகிறார்கள்.

ஆனால் எங்களுக்கு, இது ஒரு உண்மை. நாங்கள் வெட்கப்படவில்லை. நாம் அந்த வெளிப்பாட்டைப் பெற்றபோது, ஏதோ ஒன்று நமக்குள் குடியேறியது, இப்போது அந்த இடத்தை பெற எதுவும் இல்லை. அவர்களில் ஒருவர், ஒரு ஒலிநாடா சபை , ஒரு ஒலிநாடா குழு, ஒலிநாடா மக்கள்

என்று கூறுவதில்  நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவரும் போது, ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தேவனின் ஒளி நாடா ஊழியத்திற்கு பிரன்ஹாம் கூடாரத்துடன் கேட்க வருமாறு உங்களை அழைக்கிறோம்; எங்கள் சபதங்களை மீண்டும் புதுப்பித்து, கேட்பதன் மூலம் புதிதாகத் தொடங்குங்கள்: வெட்கப்படுதல் 65-0711.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்


பரிசுத்த மார்க் 8: 34-38

34. பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

35. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

21-0822 மணவாட்டியைத் தெரிந்துக் கொள்ளுதல்

செய்தி: 65-0429e மணவாட்டியைத் தெரிந்துக் கொள்ளுதல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியே,

உலகம் உருவாகும் முன் பிதா தனது மணவாட்டியைத்  தேர்ந்தெடுத்தார். அவருடைய குணத்தை பிரதிபலிக்கும் மணவாட்டியை அவர் விரும்பினார். அவருடைய வார்த்தையை வைத்து அவரது கவனத்தை ஈர்க்கும் மணவாட்டியை அவர் விரும்பினார்.

ஒரு மணவாட்டி  அவருக்கும் அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட வார்த்தைகளுக்கும் விற்கப்படுவாள், அவரிடத்தில் இருந்த மனம் அவர்களிடமும்  இருக்கும். அவை அவருடைய ஒரே மாம்சமாக, ஒரே எலும்பாக, ஒரே ஆவியாக, ஒரே மாதிரியாக இருக்கும் வரை , அவை இரண்டும் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கும்.

அவள் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்பதால் அவர் அவருடைய குணாதிசயத்தை அவர்களுக்குள்  உருவாக்க விரும்பினார். அவர் தனது முதல் மணவாடாட்டியை மீட்டெடுக்க தனது முதல் ஆதாமையும் ஏவாளையும் பூமியில் வைத்ததிலிருந்து அவர் காத்திருந்தார். அவர் அவள்மேல் அடைக்காத்து , அவளுடைய முழு பிரத்தியட்ச்சத்திற்குக் கொண்டு வந்தார் ; ஏனென்றால் அவர்கள் அவரின் உரைக்கப்பட்ட வார்த்தையின்  மணவாட்டியாக இருப்பார்கள்.

அவர் அவளைப் பார்த்தபோது, ​​அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், கடைசியாக அவருக்கு ஒரு மணவாட்டி, அவருடைய, ஒரு வார்த்தையில் கூட  சமரசம் செய்யாமல்  இருக்கிறாள். ஒரு மணவாட்டி , அதில் சிறிதும் சந்தேகப்படாமல், ஆனால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு,. அவர்கள் உலகிற்கு கூருவார்கள். அதற்கு விளக்கம் தேவையில்லை, ஏனென்றால் அது தேவனின் தூய குரல் என்பார்கள்.


அவர் தனது சரியான சிறிய அன்புள்ள மனைவியைப் பார்த்தபோது, ​​அவர் அவளைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், அவரை அவளுக்குக் காட்ட வேண்டியிருந்தது. எனவே அவர் தனது வலிமையான 7 வது தூதரை அழைத்தார், அதனால் அவர் அவளுடைய முன்னோட்டத்தை பெற முடியும் என்பதற்காக. அவர்
அவளைப் பார்க்க வேண்டும், அவளைத் தனக்குக்காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார், அதனால் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று அவளிடம் கூற முடியும். அதனால் அவர் அவளை ஊக்குவித்து அவள் யார் என்று அவருக்கு தெரியும் என்று அவளுக்குத் தெரியப்படுத்தினார்.

அதனால் அவர் அவருடைய தூதரை அழைத்து அவரை ஒரு உயர்ந்த இடத்தில் அமர்த்தினார், அதனால் அவர் அவளை முன்னோட்டமிடலாம் என்று. அவர் பார்த்தபோது, ​​தேவனின் ஆவி அவரிடம் பேசினார், “அதோ அங்கே மணவாட்டி இருக்கிறாள்” என்று கூறினார். அவர் பார்த்தார், அவர் உங்களை அங்கே பார்த்தார். அவரது இருதயம் மகிழ்ச்சியடைந்தது.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தேச உடையில், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ  : சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, உலகம் முழுவதும், ஒவ்வொரு தேசத்திலும்.  பின்புறமாக நல்ல நீண்ட கூந்தல் , சட்டை மற்றும் நீண்ட  உடையில் அழகாக சரி செய்யப்பட்டு. நீங்கள் அனைவரும் அணிவகுப்பு பாடலில் இருக்கிறீர்கள் , “கிறிஸ்தவ வீரர்கள், போருக்கு அணிவகுத்துச் செல்வதுப்போல.” அவர் பார்த்தபோது, ​​நாம் விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்; நாம்தான்  வார்த்தையாக இருக்கிறோம்.

நன்றி தகப்பனே. இது இன்று நம் இதயங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது. எங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு உங்களையும் உங்கள் வார்த்தையையும் நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் நம்புகிறோம். இந்த செய்தி ஒரு கையுறை போல எங்களுக்கு பொருந்துகிறது.

நாங்கள் உங்கள் பரிபூரணமான வார்த்தை மணவாட்டியாக  இருக்க விரும்புகிறோம்.உங்கள் வார்த்தையுடன் இருப்பதைத் தவிர, வேறு வழி எங்களுக்குத் தெரியாது. இந்த சேமித்து வைத்த மண்ணாவை உங்கள் மணவாட்டியை தயாராக்க  விட்டுவைத்தீர்கள்.

நேரம் நெருங்கிவிட்டதை நாங்கள் காண்கிறோம்.  எங்களுக்கு அடியில்   அந்த  உலகமானது பூகம்பங்களால் நடுங்குகிறது. உங்கள் விசாரணை தேவ தூதர்கள் சுற்றி இருக்கிறார்கள். உலகம் தலைகீழாக மாறிவிட்டது. எல்லா இடங்களிலும் போர்கள், சண்டைகள், கொலைகள், கிருமிகள் மற்றும் நோய்கள். எதிரி இடைவிடாமல் பொங்கி எழுந்து, உங்கள் மணவாட்டியைத் துன்புறுத்த முயற்சிக்கிறான், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த அன்புள்ள  மனைவி உங்கள் வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.


பிதாவே  நாங்கள் வெளியேறாமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள்.  உங்கள் மீது கண் வைத்து உங்கள் மாறாத கையைப் பிடிப்போமாக. எங்கள் விசுவாசத்தை  அதிகரிக்கவும், எங்களுக்கு தேவையானதை எங்களுக்குக் கொடுங்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை, மதியம் 2:00 மணியளவில், ஜெபர்சன்வில் நேரத்தின் போது ,வாருங்கள் உங்கள் மணவாட்டியுடன் இருங்கள் , இந்த நாளுக்கான   உங்கள் குரலைச் கேட்க ஒன்றாக கூடி , நீங்கள் பேசுவதைக் நாங்கள் கேட்கட்டும்: ஒரு மணவாட்டியை  தேர்ந்தெடுத்துதல் 65-0429E.

பிதாவே இதுவே எங்கள் ஜெபம்:

பரலோகத்தின் தேவனே, பாவமுள்ள உலகம் மற்றும் பாவமுள்ள மக்கள் மீது இரக்கம் காட்டுங்கள், தேவனே, இன்றிரவு நாங்கள் இங்கு இருக்கைபில். தேவனே, நான் மீறி நிற்கக் முயற்ச்சித்து  தெய்வீக கருணையை கேட்கிறேன், இந்த இரவில் நீங்கள் இந்த கூட்டத்தில் பேசுவீராக, உங்கள் மணவாட்டியை கவனத்திற்கு அழைப்பீராக, ஆண்டவரே, எந்த மதத்தின் அடையாளத்தாலும் அல்ல, ஆனால் ஒலியால் அணிவகுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியில். தேவனே, அதை வழங்குங்கள். இந்த இரவில், நீர் தேவனாக இருக்கிறீர், உங்கள் வார்த்தை சத்தியம் என்பதை அறியட்டும். அதே நேரத்தில், இந்த மக்களின் முகத்தில், உம்முடைய வார்த்தையின் கவனத்திற்கு நாங்கள் அவர்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள் …

ஆதியாகமம் 24: 12-14 .

12. என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

13. இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.

14. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

வெளிப்படுத்துதல் 21 : 9

9. பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

21-0815 வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை

செய்தி: 65-0429b வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்பான அவரது சதையின் சதையே,

தேவன் தனது வார்த்தையைப் பற்றி தனது எண்ணத்தை  மாற்றாததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் ஆரம்பத்திலிருந்தே எப்படி காரியங்களை செய்தாரோ, இன்றும் அதை அப்படியே செய்கிறார். தேவன் , தன்னை இயேசு கிருஸ்துவின்  இரத்தத்தால் மனித மாம்சத்தில் பிரத்தியட்சமானார்,  அதில் ஒரு ஜிவியத்தை புனிதப்படுத்தி அதனுள் தன்னை பிரதிபலிக்க. 


இன்று நம்முடைய தூதர் அவருடைய வேதப்பூர்வ அடையாளத்தைக் நம்முள்  கொண்டுள்ளார். அது பரிசுத்த ஆவியானவர், தாமே, அதன் சொந்த விளக்கத்தை செய்கிறார். உண்மையை அல்லது விளக்கத்தைக் கண்டுபிடிக்க இதிலிருந்தும்,  இன்னொருவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை; பரிசுத்த ஆவியானவர் அவருடைய சபைக்கு எபேசியர் 4 ஐ வழங்கினார், அனைத்தையும் ஒரே மனிதனுக்குள் ,
அவருடைய நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசிக்குள்.

அப்போஸ்தலர்: அப்போஸ்தலர் என்றால் ” அனுப்பப்பட்ட ஒருவர் ” அல்லது ” ஒரு மிஷ்னரி. ” நான் ஒரு மிஷ்னரி

தீர்க்கதரிசி : நான் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ?

சுவிசேஷகர்: “ஒரு சுவிசேஷகரின் வேலையைச் செய்யுங்கள். உங்கள் ஊழியத்திற்கு முழு ஆதாரத்தை உருவாக்குங்கள். அவர்கள் நல்ல கோட்பாட்டை சகித்துக்கொள்ளாத நேரம் வரும். “


மேய்ப்பர் : நீங்கள் என்னை ”     “உங்கள் மேய்ப்பர்” என்று அழைத்தீர்கள்; நீங்கள் நன்றாக கூறினீர்கள் , ஏனென்றால் நான் அப்படியே இருக்கிறேன்.


ஆசிரியர்: நான் வார்த்தையைப் பேச விரும்புகிறேன், அல்லது வார்த்தையாக , அடையாளம்  என்ற ஞாயிறு பள்ளி பாடத்தை கற்பிக்கப்போகிறேன்.


சமம்  : நான் உங்களை அறிவேன், எங்கள் சகோதர்களே,  நான் உங்கள் பரிபூரணமாக இருப்பதால் , நீங்கள் என்னை பார்க்கிறீர்கள் , அது எதற்காக… நான் தேவனை பின் தொடரும் வரை, பவுல் வேதத்தில் கூறியதுப்போல, ” நான் கிருஸ்துவைப் பின்பற்றுவதைப்போல நீங்களும் என்னைப் பின்தொருங்கள்.”


இந்த செய்தி நமது  பரிபூர்னமானது, எனவே அவர் கிறிஸ்துவைப் பின்தொடர்வதால் நாமும் அவரைப் பின்தொடருவோம்.


இந்த அலுவலகங்களை நிறைவேற்ற தேவன்  நியமிக்கப்பட்டு அழைக்கப்பட்ட எபேசியர் 4 இன் மணிதர்களை
நான் புறக்கணிக்கவில்லை; அவருடைய கிருபையால், நான் அவர்களில் ஒருவன். ஆனால் நாம் சிறியவர்கள், தேவனின்  7 வது  தூதர், தீர்க்கதரிசி  பெறியவராக இருக்கிறார் . உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு “பிரன்ஹாம் கூடாரம்” அவர்களின் “வீட்டு சபை” என்று அழைக்கப்படுகிறது:  நம் மேய்ப்பர், நம் நேரலை ஊழியம்,
நம் பரிபூரணம்,  நம் எபேசியர் 4 ,  அனைத்தும் ஒளிநாடாவில் உள்ளது. அவர் பூமியில் இருந்தபோது அவர் கொண்டிருந்த அசல் ஊழியம் இது என்று நாங்கள் நம்புகிறோம்.    

என்ன ஒரு சமாதானம், என்ன ஒரு ஓய்வு,  நாம் வார்த்தையைக் கேட்கும்போது , நாம் கவலைப்படவோ அல்லது நம்மை பாதுகாக்கவோ அல்லது வடிகட்டவோ  வேண்டாம். இது தேவனின் நிரூபித்த, நிரூபிக்கப்பட்ட வார்த்தை, நாம் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிய மன்னாவாக இருக்கிறது  மேலும் நாம்  செய்ய  வேண்டியது எல்லாம் சாய்ந்து உட்கார்ந்து  அவர் நம்மிடம் பேசுகையில்  நம் உள் இருதயம்  எறிந்து  மகிழ்ச்சியடையவேண்டும்.


பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற அனைத்தும் என்னிடம் திரும்பி வரும், அவர்கள் வருவார்கள். என் ஆடுகள், என் புறாக்கள், என் குரலைக் கேட்கின்றன. ஒரு அந்நியரை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். மேலும் தேவனின் குரல் என்ன? தேவனின் வார்த்தை.  மனிதனின் குரல் என்ன, ஆனால் அவருடைய வார்த்தை? இது தேவனின் வார்த்தை; அவர்கள்  தேவனின் வார்த்தையைக் கேட்பார்கள். 


பிறகு அவருடைய சபைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது. இந்த நாளையும் அதன் தூதரையும், இன்றைய வார்த்தையை நாம் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய மகிழ்ச்சி இறுதியாக நிறைவேறியது. நாம் அவருடைய ஆவியின் ஒரு பகுதி, அவருடைய சரீரத்தின் ஒரு பகுதி; அவரது சதையின் சதை, அவருடைய எலும்பின் எலும்பு; அவருடைய வார்த்தையின் வார்த்தை, அவருடைய ஜிவியத்தின் ஜிவியம் , நாம்தான் கிறிஸ்துவின் மணவாட்டி! 


 மகிமை !!தேவனுக்கு ஸ்தோத்திரம் !! அல்லேலூயா !! அவரது மணவாட்டி தன்னை அங்கீகரித்து, அவருடைய வார்த்தையால் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறாள். 


சபை  இன்று அதைத்தான் செய்கிறது, ஏனென்றால் இயேசு வார்த்தை ,மேலும் அவர் தான் மணவாளன், மற்றும் அந்த மணவாட்டி மணவாளனின்  ஒரு பகுதி. எனவே இந்த நாளில் நிறைவேறப்பட வேண்டிய வார்த்தை அவருடைய நாளில் நிறைவேறப்பட்ட வார்த்தையின் அதே பகுதியான  வார்த்தை, மேலும் அது அந்த அதே வார்த்தை.  அது அந்த  அதே அனுபவம், அதே  ஜிவியம்.


வாருங்கள்  அனுபவியுங்கள் , அந்த அதே வார்த்தையை , அந்த அதே அனுபவம் , அந்த அதே ஜிவியம்  இந்த ஞாயிறு 2:00 PM, ஜெபர்சன்வில் நேரத்தில் கேட்கவும்: வித்து பதருடன் சுதந்திரவாலி ஆகிரதில்லை  65-0429B . 


சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 படிக்க வேண்டிய  வேத வசனம்: 

மத்தேயு 1: 18-20 / 24:24

லூக்கா 17:30

யோவான்  5:24

கலாத்தியர் 4: 27-31

ஆதியாகமம் 2:15

ஏசாயா 9: 6

மல்க்கியா 4.

21-0808 தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?

செய்தி: 65-0427 தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள பரிபூர்ன விருப்பம் உள்ள மணவாட்டியே,

ஓ அன்புள்ள தேவனே, உங்களுடைய அனுமதிக்கப்பட்ட விருப்பம் எங்களுக்கு வேண்டாம், தகப்பனே, உங்களுடைய பரிபூர்ன விருப்பத்தில் நாங்கள் நடக்கட்டும்.நாங்கள் அப்படியே _ அப்படியே வார்த்தையை இங்கும் அங்குமாக எடுத்துக்கொண்டு அதை ஒரு கோட்பாடு அல்லது மதத்திற்கு ஏற்றவாறு அல்லது ஏதாவது ஒன்றில் பொறுத்த வேண்டாம்.நாங்கள் வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டு, இயேசு எங்களுக்கு கற்ப்பித்ததை செய்ய, முழு சுவிசேஷத்தையும் விசுவாசிப்போமாக.

தேவனுடைய பரிப்பூரண சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய மற்றம் ஆழமான விரும்ப்பம்.நாம் ஒருபோதும் அவரை அத்திருப்திப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நாம் சொல்லில்லும் செயலில்லும் அவரைப் பிரியப்படுத்தவேண்டும். நாம் அவருடைய புத்திரசுவிகாரமான மற்றும் பிரத்தியட்சமான மகன்களாகவும் மற்றும் மகள்களாகவும் இருக்க விரும்புகிறோம்.

நாம் அவருடைய பரிப்பூரண விருப்பத்தில் இருக்க நாம் அதை எங்கே கண்டுபிடிப்போம்? நாம் அவருடைய வார்த்தைக்கு செல்லவேண்டும், ஏனென்றால் அவருடைய வார்த்தை உண்மையும் மற்றும் ஜிவியமாக இருக்கிறது.

அவருடைய வார்த்தை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது,அவருடைய திட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது, ஏனென்றால் அவரால் மாற்ற முடியாத.

அந்த வார்த்தை நமக்கு கூறுகிறது. அந்த முதல் முறை செய்த விதமாகவே, அவர் அவைகளை எப்போதும் செய்வார். அவர் எப்போதும் அதைப் போலவே இருக்க வேண்டும். அவருடைய நோக்கம் எப்போதும் அதேப்போல் இருக்கிறது.அவருடைய செயல்கள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அவர் காரியங்களை செய்யும் விதம், அவர் மக்களை சுகப்படுத்தும் விதம், அவர் மக்களை வழி நடத்தும் விதம் , அவர் எப்போதும் அதேப்போல் இருப்பார்.

தேவனுடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே வருகிறது என்று வேதாகமம் அவருடைய மாறாத வார்த்தையில் கூறுகின்றது. அவர் அதை மதகுருமார்களிடமோ அல்லது இறையியலாரிடமோ வெளிப்படுத்தவில்லை, அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டும். அவர் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு காண்பிக்கும் வரை அவர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

மனிதன் எப்போதும் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை விரும்புகிறான், அவர்களை வழி நடத்த ஒரு குழு. ஆனால் அது ஒருபோதும் தேவனுடைய வழி அல்ல. அவர் எப்போதும் ஒரு தெய்வீக தலைவரை அனுப்பினார்.அவருடைய மக்களை வழி நடத்த வார்த்தையுடன் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி. அந்த தீர்க்கதரிசி நிரூபிக்கப்பட்ட இந்த மணிநேர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பல தலைவர்களை தேவன் தேர்ந்தெடுத்தார் ; மேலும் அவர்கள் அவர்களுக்கான இடத்தைக்கொண்டுள்ளனர், அந்த அக்னி தூனிலிருந்து விலகி இருங்கள்.” அந்த அக்னி தூன் என்ன செய்கிறது … இது மக்களை இரவு நேரத்திலும் மற்றும் பகல் நேரத்திலும் வழி நடத்துகிறது.

வேதம் நமக்கு கூறுகிறது, ” சோதோமின் நாட்களில் நடந்ததுப்போலவே, மனுஷ குமாரன் வெளிப்படும் நாட்களிலும் இருக்கும்.” மல்கியா 4 மற்றும் வேதாகமத்தில் உள்ள அவருடைய வார்த்தையின்படி, அவர் தனது சபையில் சரிர வடிவில் திரும்புவார்; மக்களின்,  மனிதர்களின் ஒரு தீர்க்கதரிசி என்ற முறையில்.

இந்த தீர்க்கதரிசியை நாம் எப்படி அறிவோம்? அவர் யார் என்பதை வார்த்தையின மூலம் நிருபிப்பார். அவர் இதயத்தின் இரகசியத்தை அறிவார். அவர் எல்லா வார்த்தைகளையும் மக்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் மணவாட்டியை வழிநடத்த அக்னி தூனால் நிரூபிக்கப்படுவார்.தேவன் தனது தீக்கதரிதரியுடன் அவர் படத்தை எடுத்திருப்பார்.

சிலர் பத்மு தீவில் உள்ள யோவானைப் போல் இருப்பார்கள், அவரை வணங்க முயற்ச்சிப்பார்கள், ஆனால் அவர், ” நீங்கள் அதை செய்யாதீர்கள், ஏனென்றால் நான் உங்கள் சக ஊழியர், தீர்க்கதரிசிகளின் தேவனை வணங்குங்கள் ” என்று கூறுவார்.  அந்த மனிதனை , அவரை வணங்கக்கூடாது என்று மணவாட்டிக்குத் தெரியும். ஆனால் அந்த மனிதனுக்குள் இருக்கும் தேவனை வணங்க வேண்டும்.

அவர், தான் தவறு செயயாத வார்த்தைகளைப் பேச தேவன் தேர்ந்தெடுத்தார் என்று அறிவார். அவர் தேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட 7வது தேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதன் என்பதை அவர் அறிவார்.இந்த உலகம் தேவனின் குரலை அவர் மூலமாக பேசுவதை பார்க்கும், மேலும், முதலில் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமை காண்பார்கள்.

 அவர் மணவாட்டியை அக்னி தூணால் வழி நடத்துவார்.அவர் தனது தகவல்களை லோகோஸிருந்து பெற்று மணவாட்டிக்கு வாக்குத்தம் பூமிக்கு செல்லும் வழியில் வழங்குவார்.மணவாட்டிக்கு வெளிப்பாடு இருக்கும், இது தேவன் வழங்கிய தூதர் என்பதை அறியும்.இது தேவன் கொடுத்த வழி. இது தேவனின் பரிபூரண விருப்பம்.

ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு எங்களுடன் வந்து கேளுங்கள்: தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?  65 _ 0427.

சகோதரர். ஜோசப் பிராஹானம்

எண்ணாகமம்  22 : 31

21-0801 அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

செய்தி: 65-0426 அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள கற்றுக்கொள்ளுகிற குழந்தைகளே,

கிறிஸ்துவின் மணவாட்டியாக பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் ஒன்றுகூடி, ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் என்ன ஒரு பரலோக சூழலில் அமர்ந்துக் கொண்டிருக்கிறோம். இது நமது சாவுக்கேதுவான சரித்திரத்திலிருந்து துரிதப்படுத்துவதை நாம்மால் உணர முடிகிறது.

நீங்கள் ஒலிநாடாவை இயக்கி, தேவனின் குரலைக் கேட்பதை விட பெரிய அபிஷேகம், பெரிய சூழல் எதுவும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கவும் நம்பவும் தேவன் நம் காதுகளை நிர்ணயித்துள்ளார், ஏனென்றால் அது எல், ஏலா, எலோஹிம், தன்னிறைவு பெற்றவர், போதுமானவர், வலிமையானவர், நாம் அவருடைய பிரத்தியட்சமான மகன்களும் மற்றும் மகள்களாகவும் இருக்கிறோம் என்று அவர் நம் ஒவ்வொருவரிடமும் பேசி நமக்கு வெளிப்படுத்துகிறார்.

உலகம் முழுவதிலுமிருந்து தேவனுடைய முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதை எவ்வளவு சக்தி வாய்ந்தது, தங்கள் புனிதமான கரங்களை ஒருவருக்கொருவர் வைத்து. நம் வீடுகளும் சபைகளும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் நிரம்பியிருக்கிறது. நம்மிடம் யார் பேசுகிறார் என்பது நமக்குத் தெரிந்ததால், நம்முடைய நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது. பிறகு துரிதப்படுத்தும் சக்தி நம்மிடம் இருப்பதாக அவர் நம்மிடம் கூறினார். அவர் சொன்னதால் நாம் முழு இருதயத்தோடும் ஆத்மாவோடும் நம்பினோம்.

பிறகு நாம் கூறும்படி அவர் கூறினார்,” ஆண்டவராகிய தேவனே , நான் முழு இருதத்துடன் நம்புகிறேன்” . ஒவ்வொரு வார்த்தையையும் நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து, அவர் கூறும்போது திரும்பச் சொன்னோம். அவர் கூறினார், “இது போன்ற ஒரு குழுவில் நோய் நிற்க முடியாது.” இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது எங்கள் ஆவி மகிழ்ச்சியடைந்தது, ஏனென்றால் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.

அவர் கூறினார், “பரிசுத்த ஆவியை விரும்பும் அனைவரும், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நீங்கள் விரும்பும் இடத்தில் … தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியால் நிரப்புவார் என்று நான் நம்புகிறேன்.”அந்த நேரத்தில், நாங்கள் அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டோம், மீண்டும் நிரப்பப்பட்டோம், தேவனின் குரல் அப்படியே சொன்னது.

பின்னர் அவர்களின் சரிர சுகம் வேண்டியவர்களுக்கு, “இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்கள் காலில் நின்று உங்கள் சுகத்தை ஏற்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். அந்த தருணத்தில், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு விசுவாசியும், விசுவாசம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள், குணமடைந்தனர்.

இது எங்கே நடந்தது? ஒரு சிறிய குழு மக்கள் ஒன்றுக் கூடும் இடத்திலா? இல்லை, அது உலகைச் சுற்றி இருந்தது, மணவாட்டி பரலோக சுழளில் ஒன்றாக அமர்ந்து நம் நாளுக்கான தேவனின் குரலைக் கேட்க்கும்போது.

எந்தவொரு மனிதனோ அல்லது மனிதனின் குழுவோ மணவாட்டியை அப்படி இணைப்பது என்பது சாத்தியமற்றது. பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அந்த நாளுக்கு அவருடைய தூதர் மூலமாக பேசுவதன் மூலம் அதைச் செய்ய முடியும். இந்த செய்தி தேவனால் உரைக்கப்பட்டது. வியப்படைவதிற்கில்லை, யூகிக்கப்படுவதற்ககில்லை, இதுவே இன்றைக்கு அவர் அளித்த வழி என்பதை தேவன் நிரூபித்துள்ளார்.

நம்மெல்லோருக்கும் எவ்வளவு ஓய்வு மற்றும் அமைதி இருக்கிறது. நமக்கு சொல்லப்பட்டதில் நாம் ஒருபோதும் கவலைப்படவோ அல்லது கேள்வி கேட்கவோ தேவையில்லை. அதைச் சரிபார்க்க நாம் ஒருபோதும் வார்த்தைக்குத் திரும்ப வேண்டியதில்லை, ஏனென்றால் நம் நாளுக்காக தேவனின் நிரூபிக்கப்பட்ட வார்த்தையை நாம் கேட்கிறோம். நாம் உட்கார்ந்து, நம்முடைய இதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, ஆமென், ஆமென், ஆமென் என்று கூறுவோம்.

இல்லை, நாம் தகுதியற்றவர்கள். இல்லை, நமக்கு எல்லாமும் புரியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறோம். அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் என்பதற்கான உண்மையான அடையாளம் என்றும், அவருடைய மணவாட்டி மட்டுமே ஒவ்வொரு வார்த்தையையும் நம்பும் என்று கூறினார். நாம்தான் அந்த மணவாட்டி …. அல்லேலூயா !.

இது சிறந்த, ஆழமான சிந்தனையாளர்களிடமிருந்து கடந்து சென்று ,கற்றுக்கொள்வதற்காக குழந்தைகளுக்கு அதை வெளிப்படுத்துகிறது.

நான் கற்றுக்கொள்ளும் குழந்தை என்பதால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஒவ்வொரு யுகத்திலும் அவர் யார் என்பதை அவர் பல நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளார். அவர் தனது தீர்க்கதரிசிகள் மூலம் அதை நிரூபித்தார். அவர் மாம்சத்தில் வந்தபோது அதை நிரூபித்தார், நம் பாவங்களை எடுத்து சிலுவையில் அறைந்தார், பின்னர் மீண்டும் எழுந்து பரிசுத்த ஆவியை திருப்ப வும் அனுப்பினார்.

இப்போது அவர் நம்முடைய வார்த்தையில் வாக்குறுதியளித்தபடி மீண்டும் வந்து மனித மாமிசத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்தியதன் மூலம் நம் நாளில் அதை நிரூபித்துள்ளார். அவர் தன்னை மணஷகுமார்ன் என்று நிரூபித்தார், இயேசு கிறிஸ்துவின் ஊழியம், மனித மாம்சத்தில் மறைக்கப்பட்டது.

இப்போது, அவருடைய இறுதி அத்தியாயம், இந்த பெரிய திட்டத்திற்கான காரணம், நமக்காக வர, அவருடைய முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட மணவாட்டி , அந்த வார்த்தையில் தங்கியிருக்கிறது.

இயேசு 5000 பேரிடம் பேசியபோது அந்த நாளில் நீங்கள் மலையில் இருந்திருக்க விரும்புகிறீர்களா? ரொட்டிகளையும் மீன்களையும் வழங்குவதன் மூலம் அவர் யார் என்பதை உலகுக்கு நிரூபிப்பதை நீங்கள் விரும்புவீர்களா? அந்த அபிஷேகத்தின் கீழ் உட்கார்ந்து, அவருடைய குரலைக் கேட்டு அவருடைய நித்திய ஜிவியத்தின் வார்த்தைகளால் உங்கள் இதயத்தை ஆறுதல்படுத்துவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

இந்த செய்தியை முழு மனதுடன் நம்பினால் உங்களால் முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் மலையில் உள்ள அபிஷேகத்தின் கீழ் அமர்ந்து, தேவன் நம் நாளில் யார் என்பதை உலகுக்கு நிரூபிப்பதைக் கேளுங்கள். லூக்கா 17:30 உங்களிடம் பேசுவது மற்றும் B-R-A-N-H-A-M சொல்வது உங்களுக்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல். அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 65-0426. கேட்க வாருங்கள்

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

மத்தேயு 11: 4-19 / 28:20
மார்க் 11: 22-26
லூக்கா 8: 40-56 / 17:30
யோவான் 14:12
எபிரெயர் 4: 12-15 / 13: 8
மல்க்கியா 4

21-0725

ஜூலை 24 2021, கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன , பிரன்ஹாம் கூடாரம் மற்றும் ஜோசப் பிரன்ஹாமின் கடிதம்

துரிதமாக்கப்பட்ட அன்பர்களே,
தனது மணவாட்டிக்கு அவர் அருளிய ஆவிக்குரிய மன்னாவை உண்டுகளிக்க ஒவ்வொரு வாரமும் ஒன்றாக கூடிவர நாம் எப்படி ஆவல்கொள்கிறோம். அது நமது வழிப்பயணத்திதற்கு தேவையான பெலனை நமக்கு கொடுக்கிறது. அது தமது வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு சபையை ஆயத்தப்படுத்த மேசியா வெளிப்படுத்திய அவரது சொந்த வாழ்க்கையாகும்.
அக்னி ஸ்தம்பம் நம்மை அழைத்து அவரது வல்லமைபொருந்திய தீர்க்கதரிசியான வில்லியம் மறியன் பிரான்ஹம் அவர்களது அபிஷேகத்தின் கீழ் நம்மை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச்செல்கிறது.
சகோதரர் பிரான்ஹம் அவர்கள் அக்கினி ஸ்தம்பமல்ல. ஆனால் அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ்ப்பட்ட அபிஷேகிக்கப்பட்ட தலைவராவார். அந்த அக்கினி ஸ்தம்பம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவரது வார்த்தையை உறுதிப்படுத்த மட்டுமே செய்கிறது. நம் மத்தியில் வெளிப்பட்டது அவரது மகாபெரிய பரிசுத்த ஆவியாகும், மேலும் இதற்கு முன்னர் வந்த மற்றனைத்து தீர்க்கதரிசிகளை காட்டிலும் இது பல்லாயிரம் மடங்கு அதிகமாகும்.
மனுஷ குமாரன் தீர்க்கதரிசன வார்த்தையாக தமது சபைக்குள் மீண்டும் திரும்பி வருவதை, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக தீர்க்கதரிசனங்களில் வெளிப்படுவதை உங்களால் பார்க்க இயலவில்லையா? இதுவரை இப்படியொரு சம்பவம் எந்தவொரு காலத்திலும் நிகழ்ந்ததில்லையே.
நமது ஆவிக்குரிய சிந்தை இவற்றை பற்றிக்கொண்டது. இவற்றை கண்டு நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். இந்த செய்தி, இந்த ஒலிநாடாக்கள் யாவும் அந்த விதை விதைக்கப்பட்ட இடத்தில் அந்த சிந்தையை பற்றிக்கொள்ள தேவன் அருளிய வழியாகும். அந்த குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம், மேலும் அந்த ஒளி நம்மை அடிக்க, நாம் உயிர் பெற்றுள்ளோம்.
இது நம்மை இப்போதே உன்னதங்களில் அமரச்செய்கிறது. நாம் அமரப்போகிறதில்லை, நாம் அமர்ந்திருக்கிறோம். நாம் முன்னரே உயிர்த்தெழுந்துவிட்டோம், இயக்கவியலும், இயந்திரவியலும் தமது வேலையை முடிக்க சென்றுள்ளது. இது தேவனுடைய ஆவி தங்கும் அவரது பிரசன்னத்திலே நம்மை துரிதமாக்கியுள்ளது. நீங்கள் என்னவாக இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, மாறாக நீங்கள் முன்னரே அவ்வண்ணம் இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை! அதிலிருந்து நம்மை திருட முயற்சிப்பது சாத்தானின் வேலையாகும்.
கே: நீங்கள் உயிர் பெற்றுவிட்டீர்களா?
ப: ஆம்
கே: கிறிஸ்து உங்கள் வாழ்வில் மெய்யாகவே இருக்கிறாரா?
ப: ஆம்
கே: தேவனின் வல்லமை வெளிப்பட்டதா?
ப: ஆம்
கே: தேவன் அருளிய சபைக்குள் தான் நீங்கள் இருக்கிறீர்களா?
ப: ஆம்
கே: நீங்கள் இதில் எப்படி வந்தீர்கள், இதில் நீங்கள் துரிமாக்கப்பட்டீர்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொண்டீர்கள்?
ப: நமது முழு சிந்தையும், நமது முழு ஆத்மாவும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. தம்மை உயிருள்ளவராகவும் நம் மத்தியில் தங்கி இருக்கிறவராகவும் நிரூபித்து கிறிஸ்து தாமே நம் மத்தியில் வாசமாய் இருக்கிறார்.
நாம் அவரது மாம்சத்தின் மாம்சமாகவும், எலும்பின் எலும்பாகவும், சரீரத்தின் சரீரமாகவும், நாமத்தின் நாமமாகவும் (பெயரின் பெயராகவும்), அவரது மணவாட்டியாகவும் இருக்கிறோம். நாம் அவருக்குள் இருக்கிறோம். நாம் அவரது மாம்சமும் எலும்பும் ஆவோம்.
நாம் மரிப்பதில்லை, நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். துரிதமாக்கும் வல்லமை நம்மை பாவ வாழ்க்கையிலிருந்து உயிர்பித்து நமது ஆத்துமாவை மாற்றி கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை உயிருள்ளவர்களாக நிலைநிறுத்தியுள்ளது, மேலும் உயிர்த்தெழுதல் அதில் நம்மை தேறினவர்களாகவும் மாற்றும்.
நாம் கிறிஸ்துவுக்குள் பிறப்பிக்கப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு வார்த்தையும் நாம் “ஆமென்” கொண்டு நிறைவு செய்கிறொம்.
நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையுள்ளவர்களாக ஒரே மனதுடன் ஒன்று கூடும் போது நாம் கேட்டுக்கொள்வது எதுவோ அதை நாம் விசுவாசித்து அதில் நம்பிக்கைகொள்ளும் போது அதை அவர் நமக்கு தந்தருளுவார்.
நாம் அவரது பிள்ளைகளாகவும் (குமாரர்கள் குமாரத்திகளாகவும்) மணவாட்டி சபையாகவும் இருப்பதினால் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், நமது சபைகளிலும், அல்லது நாம் ஒன்று கூடும் எல்லா இடங்களிலும் அவர் இருப்பார் என்பதை நாம் உணருவோமாக/விசுவாசிப்போமாக.
அவர் இங்கே இருக்கிறார் என எனக்கு தெரியும். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் குணமாக்கும் அளவிற்கு சபைக்குள் துரிதமாக்கும் வல்லமை இருக்கிறது என்பதும் எனக்கு தெரியும்.
இந்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைக்கான தேவனுடைய வழி இதுவென நீங்கள் நம்புகிறீர்களா? மனுஷ குமாரன் தம்மைத்தாமே மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்புகிறீர்களா?
உங்களுக்கு சரீர சுகமோ, ஆவியில் சுகமோ தேவையா, அல்லது உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் சரி, நான் சவாலாக சொல்கிறேன் நமது நாளுக்கான அபிஷேகிக்கப்பட்ட, உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை நம்புங்கள்:
கர்த்தாவே, அவர்கள் செய்யும் காரியத்தில் அவர்களது விசுவாசத்தை துரிதமாக்க அந்த துரிதமாக்கும் வல்லமையை தந்தருளும். அங்கே ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசி மீது கைகளை வைத்திருக்கிறார், சரீரத்தில் சரீரமும், வல்லமையில் வல்லமையும் காணப்படுகிறது. ஒரு தேவகுமாரனால் அல்லது ஒரு தேவகுமாரத்தியால், தேவ குமாரனால் வெளிப்படும் தேவ வல்லமை அது. தேவனே, சாத்தான் இந்த ஜனங்களை விட்டு விலகுவானாக! இந்த மதிய வேலையிலே இயேசு கிறிஸ்துவின் கண்டுணரப்பட்ட துரிதமாக்கும் வல்லமை, மற்றும் உயிர்த்தெழும் வல்லமையினால் அவர்கள் குணமாக்கப்படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அப்படியே ஆகக்கடவது!
தேவன் தந்த ஆராதனை ஸ்தலம் 65-0425 என்கிற பிரசங்கத்தில் வந்து எங்களுடன் சேர்ந்துக்கொண்டு உங்களுக்கான சுகத்தை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு உன்னதங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தால் ஆத்துமாவில் களிகூர்ந்து ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிறு மதியம் 2 மணிக்கு மனுஷ குமாரன் பேசுவதை கேட்பீர்களாக.
சகோ. ஜோசப் பிரான்ஹம்
இச்செய்தியை கேட்பதற்கு முன்னதாக படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
உபாகமம் 16 : 1 – 6
மல்கியா 4 : 5
மத்தேயு 1 : 23
மாற்கு 16 : 17
லூக்கா 17 : 30
யோவான் 4 : 23 / 10 : 1 – 7
ரோமர் 8 : 1 – 11
1 கொரிந்தியர் 12 : 13
எபேசியர் 1 : 21
1 தெசலோனிக்கேயர் 4 : 16
எபிரேயர் 13 : 8
வெளிப்படுத்தல் 22 : 19

21-0718 மூன்றாம் யாத்திரை

செய்தி: 63-0630m மூன்றாம் யாத்திரை

PDF

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள, பிரத்தியட்சமான மகன்கள் மற்றும் மகள்கள்,,எங்கிருந்து தொடங்குவது என்பது ஒருவருக்கும் தெரியாத நிலையில். அதை சிந்தித்து, நாம்  அனைவரும்  உலகெங்கிலும் இருந்து  ஒன்றாக பரலோக சூழலில் அமர்ந்திருக்கிறோம், அந்த உயிருள்ள ஜீவத்தண்ணீரிலிருந்து குடித்துக்கொண்டிருக்கிறோம் , அவருடைய பிரத்தியட்சமான மகன்களாகவும் மகள்களாகவும் இருக்கிறோம். இந்த செய்தி நமக்கு ஒரு முழுமையான புரிதலை அளிக்கிறது, நம்மை நிலைநிறுத்துகிறது, கிறிஸ்து இயேசுவில் நாம் யார் என்று கூறுகிறது.
 
இந்த செய்தி என்ன செய்கிறது?
“நான் உன்னை ஆதரிக்கிறேன், உங்களை ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவிடம் ஈடுபடுத்துகிறேன்.”
 
மகிமை, தேவன் தம்முடைய, 7 வது தேவ தூதரை ஒரு தூய்மையான கன்னியாக நம்மிடம் பேசும்படி அனுப்பினார். அவர் பேசும்  ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் தீர்மானிக்கப்படுவோம்.  அப்படியென்றால் நீங்கள் ஒலிநாடாவை இயக்கவேண்டும்.
 
அவர் தனது முதல் வேதாகமத்தை வானத்தில் எழுதினார். பின்னர் அவர் தனது இரண்டாவது வேதாகமத்தை கல்லில் எழுதினார். அவரது மூன்றாவது வேதாகமத்தை பெரிய, புத்திசாலித்தனமான அறிவுசார்ந்த உலகம் வர காகிதத்தில் எழுதப்பட்டது. ஆனால் இன்று, மிகப் பெரிய வெளிப்பாட்டின் நாள், அவருடைய முழுமையான மற்றும் பரிபூரணமான தலைசிறந்த படைப்பு தேவனின் குரல், மணவாட்டியை அழைக்கிறது . அந்த ஒலிநாடாவிலிருந்து:
“மேலும் கர்த்தராகிய இயேசு வரும்போது எங்களை உங்கள் ஊழியத்தின் கோப்பைகளாகக் காண்பிப்பீர்கள்.”
நாம் அனைவரும் ஒரே உடன்படிக்கையுடன் கூச்சலிடுவோம்,”எங்களுக்கு தெரியும்! நாங்கள் உறுதியுடன் ஓய்வெடுக்கிறோம். ” “நீங்கள் எங்களை அவரிடம் முன்வைப்பீர்கள், பின்னர் நாம் அனைவரும் மீண்டும் பூமிக்குச் சென்று, என்றென்றும் வாழ்வோம்” என்று கூறினார்.
 
கிறிஸ்துவின் மணவாட்டி யாரை கூச்சலிட்டது  , எங்களை முன்வைப்பார் என்று கூறினது? தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய ஊழியத்தின் நிமித்தமாக.  உங்கள் சபைகளில் ஏன் ஒலிநாடாவை இயக்க விரும்பவில்லை?
 
 மணவாட்டியின் வெளிப்பாடு நம்மில் வெளிப்படும் வரை இந்த செய்தி, இந்த ஒலிநாடாக்கள் மட்டுமே சபைகளை தேவனுடன் இசைந்து கொண்டு வர முடியும். “ஒலிநாடாவுடன் தரித்திருங்கள்” என்று உங்களிடம் கூறவேண்டுமென்று எனக்கு எப்படித் தெரியும், தீர்க்கதரிசி கூறினதை காண நான் மீண்டும் வரைபடத்திற்குச் சென்றேன்.
 
ஆவிக்குரிய மனம் அதைப் பிடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன். நீங்கள் அதை பிடுத்துக்கொள்வீர்கள்  என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், நீங்கள் ஒவ்வொரு நாட்டையும் பார்வையிட முடியாது. அதற்கு ஒலிநாடாக்களை அனுப்பலாம். அந்த விதை விதைக்கப்பட்ட இடத்தில் அந்த மனதைப் பிடிக்க தேவனுக்கு ஏதேனும் வழி இருக்கும்.
 சரி, ஒளி அதைத் தாக்கியவுடன், அது போய்விட்டது, உயிரை எடுத்துவிடும். கிணற்றின் அருகில் இருந்த சிறிய பெண்ணைப் போலவே, “அது இருக்கிறது” என்றாள். அவள் அதைப் பிடித்தாள்.
எங்களுக்கு இது பாறையில் இருக்கும் தேன், இது சொல்லமுடியாத மகிழ்ச்சிய, இது ஆசீர்வதிக்கப்பட்ட உறுதி, இது ஆன்மாவின் நங்கூரம், இது எங்கள் நம்பிக்கையும் தங்குமிடமும், இது யுகங்களின் பாறை, இது எல்லாமுமாக இருக்கிறது.
 
நம்முடைய ஆவிக்குரிய மனம் அனைத்தும் குழப்பமடையவில்லை. அவர் யார் என்று நமக்குத் தெரியும். அவர் என்னவென்று நமக்குத் தெரியும். நாம் யார் என்பது நமக்கு தெரியும். . நாம் எங்கு செல்கிறோம் என்பது நாமெல்லோருக்கும்  தெரியும். நாம் யாரை நம்பினோம், சம்மதித்தோம் என்று நமக்கு தெரியும், நாம் இந்த நாளுக்கு எதிராக செய்ததை அவர் காத்துக்கொள்வர்.
 
நாம் தேவனுடைய தூதர்கள் என்று நமக்கு வெளிப்படுத்தியிருந்தால், பரலோகத்தில் உள்ள அனைத்து சக்திகளும், தேவனுடைய அனைத்துமே, அவருடைய தேவதூதர்கள் மற்றும் அவருடைய எல்லா சக்திகளும் நம்முடைய வார்த்தைகளுக்கு பின்னால் நிற்கின்றன. தேவனுடைய வார்த்தையை மதிக்க வேண்டும், ஏனென்றால் அவர் கூறினார், ” – பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ” என்றார்
 
 
வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது. வெளியேறுவது நம் கையில் உள்ளது. யார் யார் என்பதை தேவன் நமக்குக் காட்டுகிறார். இயேசு கிறிஸ்துவின்மணவாட்டி, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் செல்லுவாள்.
 
அவருடைய முதல் யாத்திரையில், அவர் அவர்களை ஒரு இயற்கையான நிலத்திலிருந்து, ஒரு இயற்கையான நிலத்திற்கு கொண்டு வந்தார். இரண்டாவது யாத்திரையில், அவர் அவர்களை ஒரு ஆவிக்குரிய நிலையில் இருந்து, பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய ஞானஸ்நானத்திற்கு கொண்டு வந்தார். இப்போது அவர் பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய ஞானஸ்நானத்திலிருந்து, நித்தியத்திற்கு, அதே அக்னி ஸ்தம்பதால், அதே அபிஷேகம் செய்யப்பட்ட முறையால், அதே தேவன் அதே காரியங்களைச் செய்கிறார்!
 
அந்த காற்று அலறினாலும் அந்த புயல் அடித்தாலும், நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறோம். நாம் சரியாக அந்த  ஒவ்வொரு வார்த்தையிலும் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்.
 
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு , ஜெபர்சன்வில்லி நேரத்தில் எங்களுடன் கலந்துகொள்ளுகள், நம்முடைய நாட்களுக்கான பேசப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுகள். அவருடைய விறைவான வருகைக்கு நீங்கள் தயாராகுங்கள்: மூன்றாம் யாத்திராகமம் 63-0630M கேளுங்கள்.
 
 
சகோதரர். ஜோசப் பிரன்ஹாம்
 
யாத்திராகமம் 3: 1-12
ஆதியாகமம்  : 37
ஆதியாகமம் : 43