21-0808 தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?

செய்தி: 65-0427 தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள பரிபூர்ன விருப்பம் உள்ள மணவாட்டியே,

ஓ அன்புள்ள தேவனே, உங்களுடைய அனுமதிக்கப்பட்ட விருப்பம் எங்களுக்கு வேண்டாம், தகப்பனே, உங்களுடைய பரிபூர்ன விருப்பத்தில் நாங்கள் நடக்கட்டும்.நாங்கள் அப்படியே _ அப்படியே வார்த்தையை இங்கும் அங்குமாக எடுத்துக்கொண்டு அதை ஒரு கோட்பாடு அல்லது மதத்திற்கு ஏற்றவாறு அல்லது ஏதாவது ஒன்றில் பொறுத்த வேண்டாம்.நாங்கள் வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டு, இயேசு எங்களுக்கு கற்ப்பித்ததை செய்ய, முழு சுவிசேஷத்தையும் விசுவாசிப்போமாக.

தேவனுடைய பரிப்பூரண சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய மற்றம் ஆழமான விரும்ப்பம்.நாம் ஒருபோதும் அவரை அத்திருப்திப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நாம் சொல்லில்லும் செயலில்லும் அவரைப் பிரியப்படுத்தவேண்டும். நாம் அவருடைய புத்திரசுவிகாரமான மற்றும் பிரத்தியட்சமான மகன்களாகவும் மற்றும் மகள்களாகவும் இருக்க விரும்புகிறோம்.

நாம் அவருடைய பரிப்பூரண விருப்பத்தில் இருக்க நாம் அதை எங்கே கண்டுபிடிப்போம்? நாம் அவருடைய வார்த்தைக்கு செல்லவேண்டும், ஏனென்றால் அவருடைய வார்த்தை உண்மையும் மற்றும் ஜிவியமாக இருக்கிறது.

அவருடைய வார்த்தை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது,அவருடைய திட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது, ஏனென்றால் அவரால் மாற்ற முடியாத.

அந்த வார்த்தை நமக்கு கூறுகிறது. அந்த முதல் முறை செய்த விதமாகவே, அவர் அவைகளை எப்போதும் செய்வார். அவர் எப்போதும் அதைப் போலவே இருக்க வேண்டும். அவருடைய நோக்கம் எப்போதும் அதேப்போல் இருக்கிறது.அவருடைய செயல்கள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அவர் காரியங்களை செய்யும் விதம், அவர் மக்களை சுகப்படுத்தும் விதம், அவர் மக்களை வழி நடத்தும் விதம் , அவர் எப்போதும் அதேப்போல் இருப்பார்.

தேவனுடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே வருகிறது என்று வேதாகமம் அவருடைய மாறாத வார்த்தையில் கூறுகின்றது. அவர் அதை மதகுருமார்களிடமோ அல்லது இறையியலாரிடமோ வெளிப்படுத்தவில்லை, அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு மட்டும். அவர் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு காண்பிக்கும் வரை அவர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

மனிதன் எப்போதும் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை விரும்புகிறான், அவர்களை வழி நடத்த ஒரு குழு. ஆனால் அது ஒருபோதும் தேவனுடைய வழி அல்ல. அவர் எப்போதும் ஒரு தெய்வீக தலைவரை அனுப்பினார்.அவருடைய மக்களை வழி நடத்த வார்த்தையுடன் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி. அந்த தீர்க்கதரிசி நிரூபிக்கப்பட்ட இந்த மணிநேர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பல தலைவர்களை தேவன் தேர்ந்தெடுத்தார் ; மேலும் அவர்கள் அவர்களுக்கான இடத்தைக்கொண்டுள்ளனர், அந்த அக்னி தூனிலிருந்து விலகி இருங்கள்.” அந்த அக்னி தூன் என்ன செய்கிறது … இது மக்களை இரவு நேரத்திலும் மற்றும் பகல் நேரத்திலும் வழி நடத்துகிறது.

வேதம் நமக்கு கூறுகிறது, ” சோதோமின் நாட்களில் நடந்ததுப்போலவே, மனுஷ குமாரன் வெளிப்படும் நாட்களிலும் இருக்கும்.” மல்கியா 4 மற்றும் வேதாகமத்தில் உள்ள அவருடைய வார்த்தையின்படி, அவர் தனது சபையில் சரிர வடிவில் திரும்புவார்; மக்களின்,  மனிதர்களின் ஒரு தீர்க்கதரிசி என்ற முறையில்.

இந்த தீர்க்கதரிசியை நாம் எப்படி அறிவோம்? அவர் யார் என்பதை வார்த்தையின மூலம் நிருபிப்பார். அவர் இதயத்தின் இரகசியத்தை அறிவார். அவர் எல்லா வார்த்தைகளையும் மக்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் மணவாட்டியை வழிநடத்த அக்னி தூனால் நிரூபிக்கப்படுவார்.தேவன் தனது தீக்கதரிதரியுடன் அவர் படத்தை எடுத்திருப்பார்.

சிலர் பத்மு தீவில் உள்ள யோவானைப் போல் இருப்பார்கள், அவரை வணங்க முயற்ச்சிப்பார்கள், ஆனால் அவர், ” நீங்கள் அதை செய்யாதீர்கள், ஏனென்றால் நான் உங்கள் சக ஊழியர், தீர்க்கதரிசிகளின் தேவனை வணங்குங்கள் ” என்று கூறுவார்.  அந்த மனிதனை , அவரை வணங்கக்கூடாது என்று மணவாட்டிக்குத் தெரியும். ஆனால் அந்த மனிதனுக்குள் இருக்கும் தேவனை வணங்க வேண்டும்.

அவர், தான் தவறு செயயாத வார்த்தைகளைப் பேச தேவன் தேர்ந்தெடுத்தார் என்று அறிவார். அவர் தேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட 7வது தேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதன் என்பதை அவர் அறிவார்.இந்த உலகம் தேவனின் குரலை அவர் மூலமாக பேசுவதை பார்க்கும், மேலும், முதலில் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமை காண்பார்கள்.

 அவர் மணவாட்டியை அக்னி தூணால் வழி நடத்துவார்.அவர் தனது தகவல்களை லோகோஸிருந்து பெற்று மணவாட்டிக்கு வாக்குத்தம் பூமிக்கு செல்லும் வழியில் வழங்குவார்.மணவாட்டிக்கு வெளிப்பாடு இருக்கும், இது தேவன் வழங்கிய தூதர் என்பதை அறியும்.இது தேவன் கொடுத்த வழி. இது தேவனின் பரிபூரண விருப்பம்.

ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு எங்களுடன் வந்து கேளுங்கள்: தேவன் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?  65 _ 0427.

சகோதரர். ஜோசப் பிராஹானம்

எண்ணாகமம்  22 : 31