22-0515 இணையும் நேரமும் அடையாளமும்

செய்தி: 63-0818 இணையும் நேரமும் அடையாளமும்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள முதன்மையான மணவாட்டியே,

ஞாயிற்றுக்கிழமை அன்று உலகெங்கிலும் ,பரலோக சூழலில் நாம் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, ​​தேவனின் ஒரே குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன கூறப்போகிறார் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?

அவருடைய வார்த்தைகளை நாம் இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றைக் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டைப் பெறுவோம். அவர் நம் இருதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, இப்போது இருக்கும் ஒன்றை, சரியான காலத்தில் வெளிப்படுத்துவார்.

பிறகு அது நடக்கும். மணவாளன் தனது மணவாட்டிகளுக்குச் சொல்லக்கூடிய மற்றும் வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்களே தெய்வீக சரீரத்தின் முழுமையான முழுமை, முதன்மையானவர்கள். எனக்குள் இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றினேன்; கிறிஸ்துவில்  இருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றினேன். நீங்கள் என் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை மணவாட்டி.

நம் முழு உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளியது. தகப்பனானவர் நம்மிடம் கூறினார், நாம்தான் அவருடைய மணவாட்டி. நாம்தான் அவர் நேசிக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் செறிவூட்டப்பட்டுள்ளோம், அவருடைய வார்த்தை மட்டுமே. நம் கருப்பை வேறு எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருந்தார், ஏங்குகிறார்…நமக்காக!!

மேலும் என்னவென்று யூகியுங்கள்? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மனித மாமிசத்தில் வந்து வசித்தார், அதனால் அவர் நேரடியாக, உதட்டோடு காதுகளில் பேச முடியும், மேலும் “நான் உன்னை நேசிக்கிறேன், என் நேச மணவாட்டி.” என்று நம்மிடம் கூறுகிறார்.

நாம் பாடல் பாடுவதை விரும்புகிறோம், ஐக்கியம் கொள்வதை விரும்புகிறோம், விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்புவது தேவனின் குரலைக் கேட்பது; இது தேவன் உரைக்கிறதாவது, நம்மிடம் நேரடியாகப் பேசுவது. ஒவ்வொரு செய்தியும் நமக்குத் தனிப்பட்ட காதல் கடிதம். அவர் நமக்குச் சொல்ல விரும்பும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு காந்த நாடாவில் வைத்தார், அதனால் அவற்றை நாமே கேட்க முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கூடும்போது அவர் நமக்கு என்ன சொல்லப் போகிறார்? மேல்ம் இது என்ன காலம்?

ஏசாயா பேசி, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்” என்று கூறினார், ஆனால் இது நடபதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது. தாவீது ராஜா, “அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைக்கிறார்கள்” என்றார். அவர் தனது கைகள் மற்றும் கால்களைப் போல பேசினார், ஆனால் காலம் இதுவல்ல, இன்னும் 1000 ஆண்டுகள் கடந்து செல்லும்.

தேவன் நம் நாளில் நம் தீர்க்கதரிசி மூலம் பேசினார், இந்த நாள் வரும் வரை பல விஷயங்கள் நடக்க முடியாது என்று கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும் அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் இப்போது அது மிகவும் உயிருடன் இருப்பதையும் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் காண்கிறோம், அவர் தீர்க்கதரிசனம் சொல்லி நமக்குச் சொன்னதுபோல.

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இனி இல்லை மேலும் அந்தப்பனிப்போர் முடிந்துவிட்டதாக உலகம் நினைத்தது, . ஆனால் இன்று அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அவர் சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலம் வந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் நேரடியாகப் பேசுவார், உதட்டோடு காதுக்கு, நாம் கேட்பதற்காகப் பேசப்பட்டு சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் கேட்போம். அவர் நமக்கு என்ன சொல்லி வெளிப்படுத்துவார்? அந்த காலம் என்ன? என்ன நடக்கிறது?

தேவன் தனது மணவாட்டியை ஒன்றுபடுத்துகிறார். அவள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் ஒன்றாக வருகிறாள். இது ஒன்றுபடுவதற்கான நேரமாக உள்ளது, அது இப்போது உள்ளது. அவள் எதற்காக ஒன்றுபடுகிறாள்? அந்த எடுத்துக்கொள்ளப்படுவதற்காக.

உலகெங்கிலும் தேவனின் குரலை நாம் கேட்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஐக்கியப்படுத்துகிறது. அந்த வார்த்தை தேவன். மணவாளன் என்பது வார்த்தை. மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்கும், நாம் ஒரு ஐக்கியத்தில் ஒன்றாக வருகிறோம். நாம் ஒரு திருமணத்திற்கு தயாராகி வருகிறோம், அங்கு நாம் வார்த்தையுடன் ஒன்றாக மாறுகிறோம்.

பிதாவில் உள்ள அனைத்தும் நானே; மேலும் என்னில் உள்ள அனைத்தும், நீங்களே; மேலும் உங்களில் உள்ள  அனைத்தும், நானே. மேலும், நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” பாருங்கள்? “அந்த நாளில்.” எந்த நாள்? இந்த நாள்! தேவன் வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய பெரிய மறைந்திருக்கும் மர்மங்களை நாம் காண்கிறோம். ஓ, நான் அதை எவ்வாறாக நேசிக்கிறேன்!

இப்போதே அந்த நேரம். இப்போதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவில் கூக்குரல் இடுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லே நேரத்தில் நாம் வார்த்தையைச் சுற்றி ஒன்றுபடும்போது, ​​எங்களுடன் ஒன்றுபடுங்கள், தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்போம்: 63-0818 அன்று பிசங்கித்த இணையும் நேரமும் அடையாளமும்
செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேதங்கள்
சங்கீதம் 86: 1-11.
பரிசுத்த மத்தேயு 16 : 1 – 3